Pages

Wednesday, 10 July 2013

9.'QUALITY CIRCLE' CREATE QUALITY PEOPLE - 9. தரமான மனிதர்களை உருவாக்கும் 'தர சுழற்சி'

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

9. QUALITY CIRCLE CREATE QUALITY PEOPLE


Quality people always create Quality Circle to achieve the following:

1.   Enhance communication skills and improve interaction
2.   Development of human relationship and workplace 
      discipline
3.   Elevation of work culture and enhancement of carrier 
      interest
4.   Effective team building
5.   Reducing problem and improving Quality
6.   Kaizen (continuous improvement) in Productivity
7.   Boost up problem solving capacity
8.   Act as a catalyst for attitude change
9.   Encourage the promotion of personal and
10. Develop Leadership Quality


Success life steps continuous next..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

9. தரமான மனிதர்களை உருவாக்கும் 'தர சுழற்சி' 


தரமான மக்கள் எப்போதும் பின்வரும் செயல்களை சிறப்பாக செய்ய தங்களுக்குள் 'தர சுழற்சி' உருவாக்கிக் கொள்வார்கள். அவைகள் 

1. தொடர்பு கொள்ளும் திறன்கள் மற்றும் 
    தொடர்பாற்றல் மேம்படுத்திக்கொள்ளுதல் 

2. மனித உறவு மற்றும் பணியிடத்தில் ஒழுக்கத்தை வளர்த்துக் 
   கொள்ளுதல் 

3. வேலையில் நல்ல கலாச்சாரம் மற்றும் பணி மேம்படுத்தல் 

4. சிறப்பான அணியை உருவாக்குதல் 

5. பிரச்சனை குறைத்து தரத்தை உயர்த்துதல் 

6. 'கெய்சன்' முறையில் உற்பத்தி பெருக்குதல்  (தொடர் மேம்பாடு)

7. சிக்கல் தீர்க்கும் திறனை வளர்த்தல் 

8. அணுகுமுறை மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக செயல்படுதல்.

9. தனிப்பட்ட பணிப் பதவியை கூட்ட ஊக்குவித்தல் மற்றும்

10. தரமான தலைமை உருவாக்குதல் 


இனிய வாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

8. SUCCESS, PLAN, DECISION AND GOAL - 8. வெற்றி, திட்டம், முடிவுகள் மற்றும் குறிக்கோள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
8. SUCCESS, PLAN, DECISION AND GOAL 


* The measure of Success is not whether you deal with tough problem but the same problem should not be repeated.


* If your plan is failed that means you have planned to fail.


* Some time you may be in a position to take hardest decision. At that time you must analyse the outcome of the result thoroughly. If you find favorable and harmless to you then you proceed otherwise you must drop it.


* Try to define your business goal clearly. So that other can see that as you do. Even you forgot it, others will remain your goal. This will give you an extra motivation.

Success life steps will continue next..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
8. வெற்றி, திட்டம், முடிவுகள் மற்றும் குறிக்கோள் 

* வெற்றியின் அளவு என்பது கடினமான பிரச்சனையை எதிர்கொள்வது அல்ல. ஆனால் அதே மாதிரியான பிரச்சனை மீண்டும் எதிர்கொள்ளாமல் இருப்பதாகும்.


* உங்களுடைய திட்டம் தோற்றுப்போகிறது என்றால் தோற்றுப்போவதற்காவே திட்டம் போட்டீர்கள் என்று அர்த்தம்.


* கடினமான முடிவு சிலசமயம் எடுக்கவேண்டியது வரலாம். அந்த சமயத்தில் விளைவுகளை நன்றாக ஆராயவேண்டும். பாதிப்பு இல்லாமல் சாதகமாக இருந்தால் அதை செயல் படுத்தவேண்டும். இல்லையெனில் அதை கட்டாயம் கைவிட வேண்டும்.


* உங்களுடைய வியாபாரக் குறிக்கோள் தெளிவாக வரையறுக்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் செய்வதை மற்றவர்களால் கவனிக்க முடியும். மேலும் நீங்கள் குறிக்கோளை மறந்தாலும் மற்றவைகள் உங்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமையும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




Tuesday, 9 July 2013

7. LIFE AND IT'S PURPOSE - 7. வாழ்கையும் அதன் நோக்கமும்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
7. LIFE AND IT'S PURPOSE
In our life, we must have pure, honest and warm hearted motivation. Hope, optimism and ability not to be discouraged. The whole of the humanity depends on this motivation.


We must live a complete life means we have to follow three things. 1. Think Good  with our heads 2. Living from our heart and 3. Giving full of helps from our hands.
The real meaning of life is to plant tree, under whose shade you do not expect to sit. Happy life is having scarification and live for others
Success life steps will continue next...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
7. வாழ்கையும் அதன் நோக்கமும் 

நம்முடைய வாழ்க்கையில் , நாம் தூய, நேர்மையான மற்றும் இளகிய நெஞ்சமுடன் வாழ்வதே நோக்கமாக இருக்க வேண்டும். ஒருவரின் நம்பிக்கை, நன்மை மற்றும் ஆற்றலை ஒரு போதும் அதைரியப் படுத்தக்கூடாது . மனிதகுலத்தின் நல்ல நோக்கம் ஊக்கம் கொடுப்பதில் தான் இருக்கின்றது.
நாம் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் மூன்று விஷயங்களை பின்பற்ற வேண்டும். 1. நல்ல சிந்தனை நினைக்க வேண்டும்  2 நல்ல இதயமுடன் வாழவேண்டும் மற்றும் 3 முடிந்தவரை பிறர்க்கு உதவிகள் செய்யவேண்டும்.


வாழ்வின் உண்மையான அர்த்தம், நாம் வளர்க்கும் மரத்தின் நிழலில் உட்கார்ந்து  நாமே  இளைப்பாற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சந்தோஷமான வாழ்க்கை தியாகத்திலும் பிறர்க்கு உதவுவதிலும் இருக்கின்றது.


வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

6. SECRETS OF YOUR SUCCESS - 6. வெற்றியின் ரகசியங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
6. SECRETS OF YOUR SUCCESS
* Success depends upon your vision. But vision is an art of seeing what is invisible to others. So once you visualize your vision, then don't worry about others. Go ahead.


* Behind any successful achievements, so many painful incidents were hidden which can't be explainable to others.
* If you are waiting for luck, then your success will be a question mark?


* You may think that somebody will elevate you in your life. but in real life, you must elevate yourself only. You don't depend on others.

Successful steps will continue next..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இனிமையான வாழ்க்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
6. வெற்றியின்  ரகசியங்கள்


* வெற்றி உங்கள் தொலைநோக்குப் பார்வை பொறுத்து. ஆனால் உங்கள் தொலைநோக்குப் பார்வை மற்றவர்களின்  கண்ணுக்கு தெரியாத அற்புதமான கலை. ஆகையால் நீங்கள் உங்கள் தொலைநோக்குப் பார்வையை கண்டுகொள்வீர்களானால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள்.


*எந்த வெற்றிகரமான சாதனைகள் பின்னால், மற்றவர்களுக்கு விளக்கமுடியாத பல வலி தந்த (மனம் நொந்த) சம்பவங்கள் மறைந்திருக்கும்.


* நீங்கள் அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பீர்களானால் , உங்கள் வெற்றி ஒரு கேள்வி குறியாக தான் இருக்கும்.


* உங்கள் வாழ்கையை யாராவது உயர்த்துவார்கள் என்று நினைக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில், உங்கள் வாழ்கையை நீங்கள் தான் உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் . மற்றவர்களை நம்பி நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.

இன்னும் வாழ்க்கை வெற்றிப்படிகள் உயரும்...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday, 8 July 2013

5. TEAM LEADER'S QUALITY AND TEAM WORK - 5. குழுத் தலைவரின் தரம் மற்றும் குழுவின் வேலை

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
5. TEAM LEADER'S QUALITY AND TEAM WORK 
* For good team work, need a good leader. For that he must have an ability to build a good relationship and motivated communication among the team members. Team means Together Everyone Achieve More.


* The first steps for Team work is forming together. Second one is keeping together is equal to 50% achievement and working together is a way to achieve 100% success.

* If everyone in the Teammates are moving in a positive thinking as well as in a positive direction to create positive attitude then automatically success takes care of itself.  

Successful life steps will continue next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

5. குழுத் தலைவரின் தராதரம் மற்றும் குழுவின் வேலை 
* குழுவின் சிறப்பான வேலைக்கு ஒரு சிறந்த தலைவர் அவசியம்.  அதற்கு அவர் தன்னுடைய குழு உறுப்பினர்களின் மத்தியில் நல்ல உறவு மற்றும் உந்துதல் ஏற்படுத்தும் தொடர்பாற்றல் திறமை பெற்றிருக்க வேண்டும். குழு என்பதன் அர்த்தம், அதிகமாக சாதிப்பதற்கு ஒவ்வொருவரும் இணைய வேண்டும்.   


* குழுவாக வேலை செய்வதற்கான முதல் படி, ஒன்றாக இணைவது தான். இரண்டாவதாக ஒன்றாக இணைந்ததை தக்கவைப்பது  50% சாதனைக்குச் சமம். மேலும் ஒன்றாக இணைந்து செயல்படுவது 100% சாதனை அடைவதற்கான  வழியாகும்.

* குழுவில் உள்ள அனைவரும் நேர்மறையான அணுகுமுறையை உருவாக்கிக்கொண்டு ஒரு நேர்மறையான திசையில் ஒரு நேர்மறையான சிந்தனையுடன் செயல்படும்போது தானாகவே 'வெற்றி' என்பது வந்தடையும். 

இன்னும் இனிமையான வாழ்க்கை வெற்றிப்படிகள் உயரும்...


###################################################################################

Saturday, 6 July 2013

4. ADOPT CHANGES AND GET GOOD OPPORTUNITIES - மாற்றத்தை ஏற்று நல்ல வாய்ப்புகளைப் பெறு

HAVE A NICE LIFE STEPS 
MADURAI GANGADHARAN

4. ADOPT CHANGES AND GET GOOD OPPORTUNITIES
* Now a days most of the people and student are missed their good opportunities because the opportunity  is dressed differently what they are expected. So it becomes very difficult to identify for them. 

For example

We can get stone but not statue. (Making is in our hand)

We can get seed but not rice. ( Getting is in our hard work)

We can get money but not property.. ( Buying is our choice) 


* Why we don't want to change when things change? The primary problem is we never wanted to change our old mind set. Next we resist changing because we are afraid of change.

Some of the business man used to be afraid to change when a big change came along in their business.They normally didn't know what to do for change. So they didn't do anything differently and finally they lost their business.

Ex. Old type films are not run well when compare with latest technology used films.
* Normally once we have bought something, after that we will find that the same thing being sold some where else at the cheaper rate.

So if you want to buy a thing... you must not buy it immediately. You enquire some where else and then decide to buy.

Thank you...
Success Steps will continue next....
=============================================
இனிய வாழ்க்கைக்கான வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 
4. மாற்றத்தை ஏற்று நல்ல வாய்ப்புகளைப் பெறு

* இன்றைய காலகட்டத்தில் மக்கள் மற்றும் மாணவர்கள் பல அருமையான வாய்ப்புகளை தவறவிடுகிறார்கள். அதற்குக் காரணம் 'வாய்ப்பு என்பது அவர்கள் எதிர்ப்பார்க்கும் உருவிலிருந்து மாறுபட்டு வருவதே!அதனால் அவர்களுக்கு வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு மிகக்கடினமாகப் போய்விடுகிறது. 

கல் நமக்கு எளிதாகக் கிடைக்கும். ஆனால் நாம் நினைத்த படி சிலை வடிப்பது நம் கையில் தான் உள்ளது.

விதைகள் கிடைக்கும். ஆனால் அதை அரிசியாக மாற்றுவது நமது உழைப்பில் இருக்கின்றது.

பணம் கிடைக்கும். ஆனால் அதன் மூலம் தேவையான சொத்து வாங்குவது நாம் வாங்குவதில் இருக்கின்றது.


* மாற்றங்கள் நிகழும் போது நாம் எதனால் மாறுவதில்லை? அதற்கு முழு முதற்காரணம் நாம் ஒரு போதும் மனிதில் இருக்கும் பழைய தொகுப்புகளை மாற்ற விருப்பபடுவதில்லை. அடுத்ததாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் பயப்படுவதே.

பொதுவாக வியாபாரிகள் பலர் தங்களுடைய வியாபாரத்தில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள்.பெரும்பாலும்  அவர்களுக்கு மாறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரிவதில்லை. ஆகையால் புதிதாக வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாததால் முடிவாக அவர்களின் வியாபாரத்தை இழக்கிறார்கள்.  

அதாவது இன்றைய சூழ்நிலையில், பழைய காலத்து தொழில்நுட்ப உபயோகித்து திரைப்படம் எடுத்தால் அவைகள் நன்றாக ஓடுவதில்லை. ஆனால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்திய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறதென்னவோ உண்மை. 


* பொதுவாக நாம் ஒரு பொருளை வாங்கிய பின், அதே பொருள் வேறொரு கடையில் நாம் வாங்கியதை விட விலை குறைவாக கிடைப்பதை அறிகிறோம்.

ஆகையால் நாம் எந்த ஒரு பொருளையும் அவசரப்பட்டு வாங்குவதற்கு முன்னால் பல கடைகளில் விசாரித்து எங்கு விலை குறைவாக இருக்கின்றதோ அங்கு வாங்கிப் பழக வேண்டும்.


நன்றி, வணக்கம்.
வாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////