Pages

Thursday, 8 June 2023

28.5.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் 11- "அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்"

28.5.2023 அன்று, காலை 10 மணி அளவில், .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் விழா நடந்தது.  மாமதுரைக் கவிஞர் பேரவை செயலர் கவிஞர் இரா.இரவி அனைவரையும் வரவேற்றார்.  "அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்" என்ற தலைப்பில் பின்வரும் கவிஞர்கள் இரா. கல்யாணசுந்தரம், இரா.இரவி, கு.கி.கங்காதரன், முனைவர் வரதராசன், அஞ்சூர்யா க.செயராமன், கி.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா.வீரபாகு, ச.லிங்கம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, எம்.இராம.பாண்டியன், செ.அனுராதா, மா.முனியாண்டி, மு.இதயத்துல்லா, கோ.சங்கரநாராயணன்,  அ.அழகையா, குருசாமி, பெரி.கரு.சம.சமயக்கண்ணன், மா .பரமானந்தம், குருமூர்த்தி ஆகியோர் கவிதை பாடினார்கள். 

சே.அனுராதா எழுதிய 'வாடாமல்லி' நூலும், நா குருசாமி எழுதிய 'வான்புகழ் வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள்' நூலும் வெளியிடப்பட்டன . இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ண ம்.







அறம் சொல்லும் திருக்குறளே
அகிலம் காக்கும்

கவிஞர் இரா.இரவி

                      *****

அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்
அறம் திருக்குறள் அளவிற்கு வேறு எதிலும் இல்லை!

பெற்ற தாய் பசியோடு வாடினாலும் என்றும்
பெரியோர் பழிக்கும் செயல் செய்யாதே என்றது!

பஞ்சமா பாதகம் செய்தேனும் தாய்பசி போக்கு என்றது
பழங்கால வேதம் சொன்னதை ஏற்காதது திருக்குறள்!

தீங்கு இழைத்த பகைவனும் வெட்கும்வண்ணம்
நன்மை செய்திடச் சொன்ன உயர்ந்த திருக்குறள்!

காந்தியடிகளின் அகிம்சைக்கு அறவாழ்வுக்கு அடித்தளம்
கற்கண்டு திருக்குறளே அவரே வழிமொழிந்தார்!

மாமனிதர் அப்துல்கலாமின் மகத்தான வாழ்விற்கு
மண்ணில் அடிப்படையாக இருந்ததும் திருக்குறளே!

பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமமென்ற திருக்குறள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற திருக்குறள்!

பிறர்செய்த உதவியை மறக்காதே என்ற திருக்குறள்
பிறருக்கு செய்த உதவியை மறந்திடு என்ற திருக்குறள்!

ஏதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டிட்ட திருக்குறள்
எதையும் ஆராய்ந்து ஏற்கச் சொன்ன திருக்குறள்!

யார் சொல்வது என்பது முக்கியமன்று என்ற திருக்குறள்
யார் சொன்னாலும் ஆராய்ந்து அறிந்திடு என்ற திருக்குறள்

வன்சொல் என்றும் பேசாதே என்ற திருக்குறள்
இன்சொல்லே என்றும் பேசிடு என்ற திருக்குறள்

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்
திருக்குறள் வழி நடந்தால் உலகம் உய்க்கும்!

                        ******************************



















அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும்

புதுக்கவிதை

கு.கி.கங்காதரன்

குறள் சொல்லும் அழகு 
அறம் காக்கும் உலகு
நித்தமும் செய்து பழகு 
நீங்கும் மனதில் அழுக்கு.

அறம் அன்பைச் சுரக்கும்
இன்ப வாழ்வைக் கொடுக்கும்
அழிக்கும் குணத்தைப் போக்கும்
அளவற்ற ஆசையை அடக்கும்

அறம் நேர்மையை வளர்க்கும்
ஆனந்தத்தை வாழ்வில் பெருக்கும் 
கொடும் கோபத்தைப் போக்கும்
கடுஞ்சொற்களை அறவே அகற்றும்

அறத்தை வெறுத்தால் துன்பம்
அறத்தை வளர்த்தால் இன்பம்
அறத்தைப் பழித்தால் வீழ்ச்சி
அறத்தை மதித்தால் மகிழ்ச்சி

அறம் செய்யம் எண்ணம் வேண்டும்
எண்ணும் அறத்தைச் செய்திட வேண்டும் 
செய்யும் அறத்தைத் தொடர வேண்டும்
தொடரும் அறமேஶ்ரீ அகிலத்தைக் காக்கும்


அறம் தீவிரவாதத்தை ஒழிக்கும்
எங்கும் அமைதியை உண்டாக்கும்
வாழ்வினைச் செழிக்கச் செய்யும்
வளமான எதிர்காலத்தைக் கொடுக்கும்.

                          *******************

Wednesday, 7 June 2023

பாகம் 50 - உள்விதி மனிதன் - பிரம்மம் (கடவுளை) அடையும் கடவுச்சொல் (மந்திரம்) உன்னிடத்தில்....

 

11.2.2022

உள்விதி மனிதன்

பாகம் 50 பிரம்மம் (கடவுளை) அடையும் கடவுச்சொல் (மந்திரம்) உன்னிடத்தில்....

இதுவரையில், 49 பாகங்கள் உள்விதி மனிதனைப் பற்றி எழுதி இருந்தேன். அந்த வேளையில், என்னுள் இருக்கும் 'உள்விதி மனிதன்', முதல் வரியைத்  தொடர்ந்து வரிசையாகச் சொல்ல, அதன் பிறகு மளமளவென்று எழுத ஆரம்பித்தேன். எந்த ஒரு சுயசிந்தனை இல்லாமல், எனது கை தானாக ஒவ்வொரு பாகத்தை எழுத ஆரம்பித்தது. அது, 49வது பாகத்தில் நின்றது.  அவை எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு சக்தியால், ஒரு உத்வேகத்தால், "நீ என்னைப் பற்றி எழுதியே தீர வேண்டும்" என்று எனக்குள் இருக்கும் உள்மனிதன் சொல்லச் சொல்ல எழுதியது. ஆனால், ஏனோ 50வது பாகத்தை எழுத இயலவில்லை. ஏனென்றால், அதைமட்டும் "உனக்குத் தோன்றும்போது எழுதுவாயாக என்று சொல்வதுபோல் நான் எடுத்துக் கொண்டேன்". இன்று 11 2 2022 அந்த பொறி கிடைத்துவிட்டது. ஆம், 'கணினி காலம் தான் அதற்குச் சரியான காலம்' என்று இருந்ததால் என்னவோ, இன்று வரையில் கிடைக்காத என் கேள்விக்கு பதில், இன்று கிடைத்தது. 

அதாவது, கடவுள் மனிதனைப் படைக்கும்போது அவரவர்களுக்கு உண்டான விதியை அல்லது கடவுளை அடையும் வழியை ஒரு கடவுச்சொல்லை எழுதியோ, சொல்லியோ, தொடுதல் மூலமாகவோ, பார்த்தல், கேட்டல், மூலமாக,  , மேன்மையான மனிதா! நீ தான் பூமியில் பிறந்து 'பிரம்மம்' ஆகிய என்னை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டாய். ஆகையால், உன்னை  மனிதனாக இந்தப் பூமியில்  பிறக்க  வைத்தேன்.   ஆனால், பூமியில்  என்னை மறக்கும் விதமாக பல விசயங்கள் நடக்கும். அதையெல்லாம் சமாளிக்க வேண்டும். அதனால் உனக்குப் பல பிரச்சனைகள்  வரலாம். அதனையெல்லாம் தீர்க்கும் விதமாக  உனக்கு  ரகசியம்  சொல்லுகிறேன். "இது தான் உனது கடவுச்சொல்!" இதனை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த சூழ்நிலையிலும் மறக்காதே! நீ எப்போது என்னை அடைய விரும்புகிறாயோ அப்போது இந்த கடவுச்சொல்லை உச்சரித்தால் நீ என்னை வந்து அடைவாய்! ஆனால், இந்த கடவுச்சொல்லை (மந்திரம்) மறக்கும்படி பூமியில் பல மாயசக்திகள், பஞ்சபூதங்கள் அல்லாமல்  புதிய புதிய பல பூதங்கள்  உன் மனதை திசை திருப்ப பார்க்கும். அதற்கு நீ இடம் கொடுத்தால், நான் உன்னிடத்தில் சொன்ன கடவுச்சொல் மந்திரம் மறந்து போகும். பிறகு, நீயாக அதனை நினைவில்  கொண்டு வந்து அந்த கடவுச்சொல் மந்திரம் சொல்லும் வரையில், பல பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும். அது ஒரு ஜென்மமோ , பல ஜென்மமோ, அது உன்  நினைவை, எண்ணத்தைப் பொறுத்து இருக்கிறது.

அன்புள்ளம் கொண்ட மனிதா! இதில் ஒரு சூட்சமம் வைத்திருக்கிறேன். இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடவுச்சொல் மந்திரத்தை சொல்லி அனுப்புகிறேன். ஒருவரின் கடவுச்சொல் மந்திரம் மற்றொருவருக்கு உதவாது. வேலை செய்யாது! ஒவ்வொரு பிறவி எடுக்கும்போது, ஒவ்வொரு கடவுச்சொல் மந்திரத்தைச் சொல்லி அனுப்புகிறேன். அதனை நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்ள அந்தக் கடவுச் சொல் மந்திரம் எப்பொழும் உன்னுள் ஒலிக்குமாறு உன்னைப் படைத்திருக்கிறேன். அதோடு, அந்த கடவுச்சொல்லை உனக்கு ஞாபகப்படுத்துவதற்காக, அதாவது, அதை நீ மறந்துவிட்டால்? நீ படிக்கும் புத்தகங்களில், நீ பார்க்கும் காட்சிகளில், நீ பயன்படுத்தும் பொருட்களில், நீ காணும் மனித உறவுகளில், நீ உன்னும் உணவுகளில், நீ எண்ணும் எண்ணங்களில், நீ செய்யும் செயல்களில், நீ கேட்கும் ஒலிகளில், நீ இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில், ஏதாவது ஒன்றில் அந்தக் கடவுச்சொல் மந்திரத்தை உனக்கு எடுத்துக்காட்டுவேன். அப்போது, நீ சுதாரிப்புடன் இருந்தால், அதனைப் பெற்று, அதனை அறிந்து, அதனைச் சொல்லி என்னை அடைவாய். மேலும், அதனை விட்டுவிட்டாலும், கவனிக்காவிட்டாலும், பலவிதங்களில் பலசந்தர்பங்கள் உனக்களிப்பேன். உனக்கு  நினைவூட்டுவேன்.  எல்லாமே நீ என்னை அதாவது இந்த பிரம்மம் அடையவேண்டும் என்பதே அதுவே என் ஆசை. அதனை பூர்த்தி செய்யவேணடும் என்பதே உன் கடமை.  முதல் பிறவியில் சற்று கடினமாகவும் போகப்போக அடுத்தடுத்து எடுக்கும் பிறவிகளில் சற்று எளிமையாகத் தருகிறேன். அது உனது கர்மவினை படி நடக்கும். ஆக உனக்குக் கொடுத்திருக்கும் பிறவியை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறாய் என்பதைப் பொருத்தே அது அமையும்.  எப்போது உன்னைப் பிடித்திருக்கும் மாயா சக்திகளை உதரித்தள்ளுகிறாயோ, அதாவது உன்  மனதில் எப்பொழுது களங்கமில்லாமல்,  தூய்மையாய் மாறுகின்றதோ,  அந்த நேரத்திலிருந்துதான் நான் உனக்களித்த கடவுச்சொல் மந்திரம் உன் மனதில் கேட்கும். அதனை நீ உச்சரித்தால், உனது பிறவி நீங்கும். அதன்பின் என்னுடனே அதாவது இந்த பிரம்மம் உடன் நீ ஐக்கியமாவாய்" என்று சொல்லித்தான் பூமியில் உன்னைப்போன்ற மனிதர்களைப்    படைக்கிறேன்.  ஆகையால், இந்தப்  பிறவிப் பெருங்கடலை நீந்த மாயசக்திகளையும், பஞ்சபூதங்களையும் வென்று உங்களுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் கடவுச்சொல் மந்திரத்தைக் கேட்டு அதனை நீ உச்சரித்து கடவுளோடு, இந்த பிரம்மம் உடன் ஐக்கியமாக வேண்டும். இதுதான்   உனக்குள் இருக்கும் உள்மனிதனின் ஆசை. அதனை நீ   நிறைவேற்றுவாய் என்று  நம்புகிறேன்.  அந்த நேரத்திற்காக நான் உன்னை மகிழ்ச்சியோடு  வரவேற்கக்  காத்திருக்கிறேன்.  . 

நீ விழிப்புடன் இருந்தால், விதியை மதியால் நான் கொடுத்த கடவுச்சொல்லால்,  மந்திரத்தால் வெல்லலாம். பிறவி விமோட்சனம் அடையலாம் நீ என்னை அடையலாம்.

நன்றி 

****************************      

சகலகலை வல்லவர் ‘கலைஞர்’ - புதுக்கவிதை

 








சகலகலை வல்லவர் கலைஞர்

            புதுக்கவிதை

        கு.கி.கங்காதரன் 

 

 தமிழன்னைப் பேரைக் காத்தவர்

தமிழுக்குக் கேடயமாய் நின்றவர்

தமிழில் பல்வித்தைக் காட்டியவர்

தமிழைச் செம்மொழியாக உயர்த்தியவர்

 

தமிழ்த்தொண்டில் கடலாக வாழ்ந்தவர்

தடையின்றி தமிழில் சொல்லாற்றுபவர்

தமிழர்களின் அடையாளமாய் இருப்பவர்

தமிழனுக்குத் திசைக்காட்டியாய் விளங்கியவர்

 

தமிழின் உரிமைக்காகப் போராடியவராம்

தமிழ்நாட்டின் அதிசயப் பிள்ளையாம்

திரைபடத் துறையில் கோமானாம்

திறமையாய் அரசியல் செய்தவராம்

 

திட்டங்கள் பலவற்றைத் தந்தவராம்

பட்டங்கள் இவருக்காகத் தவமிருந்ததாம்

சட்டங்கள் இவரிடம் மண்டியிட்டதாம்

கூட்டங்கள் உடன்பிறப்பாக மாறியதாம்

 

எழுத்துலகில் சிகரமாய்த் திகழ்ந்தவர்

அரசியல் தலைவர்களுக்குக் கைகொடுத்தவர்

ஓய்வின்றி பணியாற்றுவதில் மனிதச்சூரியன்

இணையில்லாத புகழுக்குச் சொந்தக்காரர்

              ******************************


10.5.2023 புலனாகா உலகம் பற்றிய எனது (KKG) கருத்துத் திட்டம் My concept system on Metaphysics

 3rd Time Reviewed and updated on 18.8.2023 Part One 


2nd Time Reviewed and updated on 18.8.2023 Part Two










Tuesday, 6 June 2023

4.6.2023 சிறப்பு விருந்தினர் : கு.கி.கங்காதரன் நகைச்சுவை மன்றம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

நகைச்சுவை மன்றம் 

ஜூன் மாதக்கூட்டம் 

இடம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை 

நாள்: 4.6.2023

நேரம்: காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை 

சிறப்பு விருந்தினர் : கு.கி.கங்காதரன் 


























*************************