Pages

Friday, 22 February 2019

HOW TO TYPE TAMIL IN G.MAIL?

                                                 HOW TO TYPE TAMIL IN G.MAIL? 

HOW TO TYPE TAMIL LANGUAGE IN G.MAIL?
g.mail இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி? 

முதலில் சிவப்பு அம்புக்குறி காட்டும் 'Settings' குறியினை கிளிக் செய்யவும். அதன் பிறகு தெரியும் 'திரை' யைப் பார்க்கவும். 

பிறகு அதில் காட்டும் 'Settings) ' ஐ தேர்ந்தெடுக்கவும் .. திரையில் தோன்றும் மாறுதலைப் பார்க்கவும். 

அதன் பின்னே 'Language' இல் உள்ள 'Enable input tools' இல் 'Tick' (Right mark) செய்யவும். பிறகு Edit tools ஐ கிளிக் செய்யவும். இதன் பிறகு 'திரை' இவ்வாறு தோன்றும். 
இப்போது Input tools இல் 'ON'  ஆகி இருப்பதை உறுதி செய்யுங்கள். பிறகு உங்களுக்குத் தேவையான மொழியை அதாவது 'தமிழ்' தேர்வு செய்து அதை அம்புக்குறியில் காட்டியது போல் 'Selected input tools' பக்கத்தில் மவுஸ் மூலம் இழுத்துக் கொண்டுவந்துச் சேர்க்கவும். இப்போது திரையில் ...கீழ் 'OK' ஐ கிளிக் செய்ய வேண்டும்.     
 கடைசியாக 'Save changes' ஐ கிளிக் செய்யவேண்டும்.
இப்போது Mail இல் 'த' என்கிற எழுத்து தெரியும். அதனை கிளிக் செய்தால் தமிழில் Mail பண்ணலாம். இல்லை English வேண்டுமென்றால் மீண்டும் 'த' எழுத்தில் இருக்கும் Tick Mark ஐ கிளிக் செய்து எடுத்து விடவேண்டும்.  
இப்போது 'த' இல் கிளிக் செய்வதாக வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் mail இல் உங்கள் பெயர் English இல் தட்டச்சு செய்தால் தமிழில் தானாக மாறும். அதை நீங்கள் 'Copy' பண்ணி எதிலும் 'Paste' செய்யலாம். 

நன்றி 

No comments:

Post a Comment