Pages

Monday, 25 February 2019

JOHN PENNYIQUIK (ENGINEER) - பென்னிகுவிக் - புதுக்கவிதை



       பென்னிகுவிக் (பொறியாளர்) 
             புதுக்கவிதை
         மதுரை கங்காதரன் 

விதைகள் முளைத்து மரமாய் வளர்ந்து
பலன் தருமே பல்லாண்டுகள் கழித்து!
பல்லாண்டுகளாய் கட்டிய அணையோ
பலன் தருமே சிலநாட்களுகுள்ளே!

எங்கிருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்தவர்
ஏழைப்பசிப் பார்த்துப் பதறினார்
முடிவுகட்ட முடிவு எடுத்தார்
முயற்சிகள் பல மேற்கொண்டார்.

மேற்குத்தொடர்ச்சி மலையினை ஆய்ந்தார்
மழைநீர் வீணாய் கடலில் கலப்பதைக் கண்டார்
குறுக்கே முல்லைப் பெரியாறு அணைக்கட்டினார்
குறைவில்லாமல் நீரைச்சேமித்துக் காட்டினார்.

மக்களில் பலர் வாய்ப்பேச்சில் மயக்கிடுவார்
மக்கள் தொண்டே மூச்சென முழங்கிடுவார்
செயலில் இறங்காமலே காலம் கழிப்பார்
செத்த பாம்பாய் எந்நாளும் இருந்திடுவார்

பென்னிகுவிக் மண்ணில் விளைந்த முத்து
பெருமைக்குரிய செயலைச் செய்த வித்து
தான்சேர்த்த சொத்து அனைத்தையும் விற்றார்
தேனிமாவட்ட விவசாயத்தை எழிலோடு வளர்த்தார். 

சொத்து சேர்த்து சொந்த மனை கட்டும் உலகில்
சேர்த்த சொத்துகளைத் துறந்து அணைகட்டினார்
இத்தகைய நல்லுள்ளம் படைத்த மனிதன் போல
இனியும் தோன்றுவாரோ என்றே என் வினா? 
               *************************       

No comments:

Post a Comment