Pages

Friday 1 February 2019

உலகத் தாய்மொழி தினம் - Why Need World Mother Language Conference? ஏன் உலகத் தாய்மொழி மாநாடு தேவை?



உடனடி தேவை சர்வதேச உலகத் தாய்மொழிக் கல்வி மற்றும் மென்பொருள் ஆர்வலர்கள் மகாநாடு  

Urgent need International conference World Mother Language Education and Software tycoons  

உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் நாள் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.  உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழியானது தனது இரத்தத்தில் கலந்து இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் எந்தஒரு சூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது. ஏன் மறக்கவும் கூடாது. இளம் பருவத்தில் முதற்கொண்டே கல்வி கற்பதை தனது தாய்மொழியில் இருந்துதொடங்குவதே மிகவும் சிறந்தது. அதுவே மற்ற மொழிகளை எளிதாகக் கற்பதற்கு வலிமையான அடித்தளம் ஆகும். கல்வி என்பது வெறும் பாடங்களை மனப்பாடம் செய்யும் படிப்பு அல்ல.   அதில்    ஆன்மிகம்மருத்துவம்தொழில், பண்பாடுகலாசாரம்நாகரிகம்கலை,  இலக்கியம்தத்துவம்இசைநாட்டியம் போன்றனவையும் அடக்கம். அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாகக் கற்றறிந்து கொள்ள முடியும். எனவேஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே  உலகத் தாய்மொழி தினத்தின் சிறப்புமிக்க நோக்கமாகும்.

உலகத் தாய்மொழி தினமாக 1999 ஆம் ஆண்டு இந்த நாளை உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO – United Nations Education, Scientific and Cultural Organization)  பொதுமாநாட்டில் அறிவிப்பு வெளியிட்டதுஆனால் அன்று முதல் இன்று வரையில் ஏதோ ஒரு சடங்கு சம்பிரதாயமாகவே உலகம் கொண்டாடி வருகின்றது என்பதே உண்மை. இன்று பல மொழிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தாய்மொழி ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர். கணினியில் அதிகமாகப்    படைக்கும்படிக்கும்   மொழிகளுக்கே  உயர் சம்பளம்,    விருது,   பட்டம்பதவிவேலைவாய்ப்புஅங்கீகாரம்சலுகைகள் போன்றவைகளால் மற்ற மொழிகள் தாக்குப்பிடிக்க முடியாமல்   அமைதியாக அழிந்துகொண்டிருக்கின்றன. 

UNESO ஒருபுறம் உலகத் தாய்மொழிகள் தினம் என்று கொண்டாடினாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO) மறுபக்கம் இதுவரை அழிந்த மொழிகளையும், இனி அழியப்போகும் மொழிகளைப்பற்றியும் அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் தமிழ்மொழியும் அடங்கும். இது மிகப்பெரிய கொடுமையல்லவாயார் கண்டது? அழிந்த மொழிகளில், அழிந்த பலவேறு ஊடகச்சவடுகளில் மனிதர்களுக்கு வரும் காலத்திற்குத் தேவையான பல அரியபெரிய இரகசியங்களும் அடங்கியிருக்கலாம்

ஒரு காலத்தில் மொழி கற்பதற்கு ஊடகமாக இருந்த   பாறைஓடு ஓலைச்சுவடிபேப்பர் என்று படிப்படியாக மாற்றம் அடைந்தது.  ஆனால் பேப்பர் வருவதற்கு முன் கையால் எழுதும் முறையும்பேப்பர் வந்த பின்னே அச்சு ஊடகமும் இப்போது கணினிதொடுதிரை கைப்பேசி    ஊடகத்தில்  'டிஜிட்டல்'ஆக  உருவெடுத்துள்ளது. கணினி எப்போது வலைத்தளத்தில் பரவி வாழ்வாதாரத்தில் கலந்துவிட்டோதோ அதிலிருந்து கணினியில் அதிகமாக எந்த மொழி உள்ளதோ அம்மொழியே வாழும் நிலை வந்துவிட்டது. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு தாய்மொழியானது மக்களிடையே நிலைத்திருப்பது மிகவும் கடினமான செயலாக விளங்குகின்றது. காரணம், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் சில மொழிகள்,  கணினிதொடுதிரை கைபேசி  என்னும் புதுப்புது ஆயுதங்கள் கொண்டு, புதுச்சக்தி பெற்று, புதுப்புது வழியில், அமைதியான முறையில் புரட்சி செய்து,  உலக மக்கள் உள்ளங்களில் ஊடுருவி, அவர்களின் தாய்மொழியைக்  கொஞ்சம் கொஞ்சமாக அல்லது ஒரேயடியாய் அழித்து வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.   

எந்த மொழி எப்போது அழியும்? எந்த மொழி நிலைத்து நிற்கும்? என்று யாராலும் கூற முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. தாய்மொழியானது வெறுமனே கணினியில் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அதைச்  சிறுவர்கள், பெரியோர்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொண்டு, அதனை  ஆட்சிசட்டம், கல்விகளில் மற்றும் நாட்டின் அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொழியே நிலைக்கும் நிலை உருவாகியுள்ளது.  அதோடு உலகத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் எந்த மொழிக்கு அதிகமாக இருக்கை உள்ளதோ அம்மொழி வாழுமாம். அதற்கு  ஒவ்வொரு இருக்கைக்கும் பல கோடிக்கணக்கில் பணம் செலுத்திப் பதிவு செய்யணுமாம். அவ்வாறு பணம் செலுத்த முடியாத பல தாய்மொழியின் நிலை இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றன

இந்நிலை மாறவேண்டுமானால் உலகத்தாய்மொழிகளைக் காப்பதற்காகவே உலகளவில் மாநாடு நடத்தவேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில பிரதிநிதிகள் கலந்துகொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் தாய்மொழியின் வரலாறுசிறப்பு ஆகியவை நன்றாக அறிந்தவர்களாக இருப்பதோடு வேறு சில மொழிகளையும் அதன் சிறப்பையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அதோடு கணினியில் தங்கள் தாய்மொழி எவ்வாறு வளர்ச்சிபெற்று உள்ளது பற்றி விளக்க வேண்டும். அதோடு கணினியில் பிறமொழிக்கு எவ்வாறு உதவலாம்? என்கிற கருத்துக்களும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் தாய்மொழிகள் காக்கப்படும்மேலும் வளர்ச்சி பெறும்.     

தாய்மொழி ஆர்வலர்கள் தங்களின் தாய்மொழி கணினியில் யூனிகோடு எழுத்துருவில் (Unicode Font) இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். ஒருவேளை ஒரு தாய்மொழிக்குப் பல்வேறு கணினி விசைப்பலகைகள், பல்வேறு எழுத்துருக்கள் இருந்தால் அதில் எது எளியதும், சிறந்தும் தேர்வுசெய்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இருந்தாலும் ஏட்டுக்கல்விபடி அவரவர் தாய்மொழி கணினி விசைப்பலகைகள் யூனிகோடு எழுத்துருவில் இருந்தால் மழலையர்கள் முதல் முதியோர்கள் வரை எளிதாக பயன்படுத்துவார்கள்.      

இதற்குமுன்பு பல துறைகள் இப்படியாக வளர்ந்துள்ளன. ஆன்மீகச் சிந்தனைகள்   மற்றும்    கருத்துகள்  உலக அளவில் பரவுவதற்குக் காரணமாக    இருந்தது    1893  ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள்அமெரிக்காவில்  உள்ள 'சிகாகோ'வில் நடந்த உலக சமய மாநாடு.

மேலும் அறிவியல்,  பொறியியல், தொலைதொடர்பு, விண்வெளிமருத்துவம் போன்ற  துறைகள் மிகப்பெரிய    அளவில்  வளர்வதற்குக் காரணமாக இருந்தது, வல்லரசு நாடுகள்  உட்பட பல நாடுகள் பங்கு கொண்ட முதல் உலகப் போரும்இரண்டாவது உலகப் போரும் என்று சொன்னால் மிகையாகாது.

அதுபோல் சென்ற 2000ம் ஆண்டு  முடியப் போகும் காலகட்டத்தில்  உலகளவில்  இயங்கும் கணினிகள் Y2K (Year 2000) சிக்கலை எதிர்கொண்ட போது, கணினியைப் பற்றிய பல முரண்பாடான கருத்துகள் பல திசைகளிலிருந்து வந்த வண்ணம் இருந்தன. அந்த இக்கட்டான சூழ்நிலைதான் உலகத்தில் உள்ள பல கணினி அறிவியல் வல்லுநர்களையும் (Computer Science Experts), தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களையும் (Information Technology Engineers) ஒன்று சேர வைத்ததுடன் அத்துறைகளில்  எல்லையற்ற  வளர்ச்சிகள்   ஏற்படுவதற்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். அவர்களின் கூட்டு  முயற்சியாலும்,  கடினமான உழைப்பினாலும் அனைத்து இடர்களையும் அந்த காலநேரத்திற்குள் சரி செய்து, எந்தத் துறையும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் கணினி அறிவியல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் செய்த சாதனைகள் பாராட்டுக்குரிய ஒன்றாகும். அது கணினியின்  மறுபிறவி  என்றே சொல்லலாம்.

ஆகவே உலகத் தாய்மொழிகள் அனைத்தும் காக்கப்படவேண்டுமானால் உடனடி தேவை சர்வதேச உலகத் தாய்மொழிக் கல்வி மற்றும்  மென்பொருள் ஆர்வலர்கள் மகாநாடு. அதற்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO)  வேண்டிய வசதிகள்நிதிவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.   

************************************

No comments:

Post a Comment