Pages

Wednesday 12 June 2019

உள்விதி மனிதன் பாகம்: 49 உனது ஆற்றல் அளவற்றது YOU ARE HAVING ENORMOUS POWER


உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை 
பாகம்: 49 உனது ஆற்றல் அளவற்றது
YOU ARE HAVING ENORMOUS POWER  
மதுரை கங்காதரன் 

பெருமைமிக்க மனிதா! முதல் முதலில் உனக்கு இயற்கை பற்றிய பயம் இருந்தது. பிறகு அவற்றிலிருந்து ஒதுங்கி வாழ ஆரம்பித்தாய்! மேலும் இயற்கையினால் ஏற்படும் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள வழி தேடி ஓரளவு வெற்றியும் பெற்றாய்.

மேன்மை மனிதா! பிறகு தான் கடவுள் என்றும், குரு என்றும், பெரியவர்கள் என்றும், சட்டம் என்றும் பலருடைய பார்வையில் கண்டிப்பு இருந்தது. அதனால் உனக்கு பயம் என்று இருந்தது. ஆனால் இப்போது சிலரின் பெரியவர்கள், அறிஞர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் செயல்களில் பலவிதமான தவறுகள் இருப்பதினால் அவர்களின் பயம் இல்லாமல் போய்விட்டது. அது சரி, 'சட்டம்' என்கிற ஒன்றுக்காவது பயமாவது இருக்கின்றதா? அதுவும் இல்லை. ஏனெனில் அந்தச் சட்டங்களை தங்களுக்குச் சாதகமாக எதிராளியை பழி வாங்குவதற்காகவே பொதுவாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது பலரது கருத்து. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இதனால் சில குற்றவாளிகள் பிடிபடாமல் தைரியமாக சட்டத்தின் துணையோடு நடமாடிக்கொண்டு தான் இருக்கின்றன.

ஆக பயம் எப்போது விடுபட்டதோ அதிலிருந்து மனிதனின் சுயநலம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்போது ஏதாவது ஒருவகையில் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டுத் தான் கிடக்கிறோம். அவர்கள் சொல்லும்படி ஆடுகிறோம், செயல்களையும் செய்கிறோம்.

அன்பு மனிதா! உனக்குள்ள ஆற்றல் எவ்வளவு என்று தெரியுமா? ஐன்ஸ்டீனின் ஒரு விதி E = mc2 என்பதாகும். இது இதுநாள் வரை ஒரு பொருளில் ஆற்றல் மட்டும் தான் என்கிற சித்தாந்தம் நிலவி வந்தது. ஆனால் அது மனித ஆற்றலுக்கும் பொருந்தும். அதாவது அதன் விரிவாக்கம் 'E' என்பது Energy அதாவது ஆற்றல். m என்பது mass அதாவது எடை. c  என்பது ஒளியின் வேகம் (அதாவது ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). இப்போது தெரிந்து கொள். உனது ஆற்றல். உன்னால் எதுவும் முடியும். அதற்கு உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் துணையாக இருக்கிறேன்.

%%%%%%%%%%%%%%%

1 comment: