Pages

Showing posts with label இனிக்கும் காதலி இவள் தானோ ! (SHE IS YOUR SWEET LOVE ). Show all posts
Showing posts with label இனிக்கும் காதலி இவள் தானோ ! (SHE IS YOUR SWEET LOVE ). Show all posts

Wednesday, 19 March 2014

இனிக்கும் காதலி இவள் தானோ ! (SHE IS MY SWEET LOVE )

                    இனிக்கும் காதலி இவள்தானோ !
                          (SHE IS MY SWEET LOVE )




     
          
              
                  புதுக்கவிதை   

          
          மதுரை கங்காதரன் 

நினைக்கும்போதெல்லாம் பரவசமூட்டும் கனவுக்கன்னி 
என்றும் இனிமையான உறவைத் தரும் தேன்நிலவு 

சுவாசிக்கும் காற்றையும் கனிய வைக்கும் இனியவள் 
இதயத்திற்கு எழில் ராணியாய் திகழும் நந்தவனம் 

அன்னை போல்  வருடி அன்பு மழை பொழியும் தேனருவி 
கவிஞர் எண்ணி காதல் கவிகளைப் பாடும் வானம்பாடி 

                         

கார் முகிலென நினைத்து நடனமாடும் அழகு மயில்
முள்ளான தோல்விகளை தடுத்து நிறுத்தும் கேடயம் 

தினம் தினம் மனதிற்கு புத்துயிரூட்டும் பூஞ்சோலை
தொடுகின்ற போது நெஞ்சிற்கு இதமளிக்கும் பனிமலை  

பார்த்தபோதெல்லாம் முகம் மலர வைக்கும் ஞாயிறு 
வசந்தம் கொடுக்க வரவேற்கும் காந்தப் புன்னகை 

                        

சப்தமின்றி முத்தமிடும் மின்சார செவ்விதழ்கள் 
காணும்போது மனம் நிறைவைத் தரும் தேவதை 

திகட்டாத உள்ளத்தை அள்ளித் தரும் ஜீவநதி  
எந்நாளும் இன்பத்தை வாரி வாரி வழங்கும் மலைத்தேன் 

பிரச்சனை தன்னுள் கொண்டு தீர்வுகளைத் தரும் தலைவி 
மாமலை வேலையையும் எளிதாக முடிக்கும் தன்னம்பிக்கை 

ஒருநாளும் ஓய்வு விரும்பாத காலக்கண்ணாடி 
எல்லாமே முடியும் என்று நம்பிக்கை கொடுக்கும் மகாசக்தி   

                       

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நன்றி, வணக்கம்...

#############################################################################