Pages

Monday, 25 February 2019

24.2.19 தமிழ் மொழிப்பற்று கொள்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை


24.2.19 தமிழ் மொழிப்பற்று கொள்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை   
மதுரை கங்காதரன் 
        தாய்மொழிப் பற்றுகொள் தமிழா
               மதுரை கங்காதரன்   

தமிழ்நாடேஒரு விளக்காம்
தமிழர்களேஅதில்எண்ணெயாம்
தனித்தமிழே அதில் திரியாம்
தீபத்தீயை ஏற்றுதலே பற்றாம்.

உலகத் தாய்மொழி தினமாம்
உனெசுகோஅறிவித்தச்சடங்காம் .
உலகத்தாய்மொழிகள் காப்பதற்காம்
உண்மை நிலையோ கவலைக்கிடமாம்.

தாய்மொழிகளில்அழிந்ததுபலவாம்
தங்கியமொழிகளோஅதில் சிலவாம்
ஐநாவின்அழியும்மொழிகள்அறிவிப்பாம்
அன்னைத்தமிழும்அதில் அடக்கமாம்.

ஒருபுறம் மொழிகாக்கும் ஆர்ப்பாட்டம்
மறுபுறம்அழியும்மொழிகளின் போராட்டம்
கணினியால் மொழிகளின்பாடு திண்டாட்டம்
காலம் தருமோ மொழிகளுக்குக் கொண்டாட்டம்.

உலகத் தாய்மொழிப் பற்றாளர்கள் மாநாடு
உடனே தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும்
அவரவர் தாய்மொழி நிலையினை உரைத்திடனும்
ஆதிக்கமொழிகளின் தாக்கத்தை இயம்பிடனும்

துரத்திவரும்கணினிஅசுரனோ அரசனோ
தாய்மொழிகளுக்குஎமனோ காப்பானோ
எளியவழிக்கணினியறிவு புகட்டிடனும்

உலகத் தாய்மொழி பற்றைவளர்த்திடனும்.
                **************** 


















































*********************







Friday, 22 February 2019

HOW TO TYPE TAMIL IN G.MAIL?

                                                 HOW TO TYPE TAMIL IN G.MAIL? 

HOW TO TYPE TAMIL LANGUAGE IN G.MAIL?
g.mail இல் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி? 

முதலில் சிவப்பு அம்புக்குறி காட்டும் 'Settings' குறியினை கிளிக் செய்யவும். அதன் பிறகு தெரியும் 'திரை' யைப் பார்க்கவும். 

பிறகு அதில் காட்டும் 'Settings) ' ஐ தேர்ந்தெடுக்கவும் .. திரையில் தோன்றும் மாறுதலைப் பார்க்கவும். 

அதன் பின்னே 'Language' இல் உள்ள 'Enable input tools' இல் 'Tick' (Right mark) செய்யவும். பிறகு Edit tools ஐ கிளிக் செய்யவும். இதன் பிறகு 'திரை' இவ்வாறு தோன்றும். 
இப்போது Input tools இல் 'ON'  ஆகி இருப்பதை உறுதி செய்யுங்கள். பிறகு உங்களுக்குத் தேவையான மொழியை அதாவது 'தமிழ்' தேர்வு செய்து அதை அம்புக்குறியில் காட்டியது போல் 'Selected input tools' பக்கத்தில் மவுஸ் மூலம் இழுத்துக் கொண்டுவந்துச் சேர்க்கவும். இப்போது திரையில் ...கீழ் 'OK' ஐ கிளிக் செய்ய வேண்டும்.     
 கடைசியாக 'Save changes' ஐ கிளிக் செய்யவேண்டும்.
இப்போது Mail இல் 'த' என்கிற எழுத்து தெரியும். அதனை கிளிக் செய்தால் தமிழில் Mail பண்ணலாம். இல்லை English வேண்டுமென்றால் மீண்டும் 'த' எழுத்தில் இருக்கும் Tick Mark ஐ கிளிக் செய்து எடுத்து விடவேண்டும்.  
இப்போது 'த' இல் கிளிக் செய்வதாக வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் mail இல் உங்கள் பெயர் English இல் தட்டச்சு செய்தால் தமிழில் தானாக மாறும். அதை நீங்கள் 'Copy' பண்ணி எதிலும் 'Paste' செய்யலாம். 

நன்றி