நான் 'தன்னம்பிக்கை ' பயிற்சி நடத்தி கொண்டி-ருக்கும் பொழுது என்னிடம் உள்ள 5 , 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் ஒவ்வொன்றை கீழே போட்டுவிட்டு ஒருவரை அழைத்து இவ்வாறு கூறினேன். "கீழே கிடக்கும் ரூபாய் நோட்டில் எந்த நோட்டை எடுப்பாய் ? ஏன் எடுக்கிறாய் ?" என்றேன். அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் 1000 ரூபாய் தான் எடுப்பேன், ஏனென்ன்றால் அதற்க்கு மதிப்பு அதிகம் என்றார்.
நான் "அவர் கூறிய பதிலுக்கு மறுப்பு யாரேனும் கூறப்போகிறீர்களா" என்றேன். மெளணம் நிலவியது.அதாவது அதை அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
மீண்டும் அவர்களிடத்தில்"இதேபோல் கீழே தங்கம், வைரம், தகரம், கூழாங்கற்கள், இரும்பு கிடக்கின்றது. அதில் எதை எடுப்பீர்கள் என்றதற்கு கோரோஸாக வைரம்,வைரம் என்று கத்தினார்கள் " நானோ 'சபாஷ்' என்றேன்.
அதேபோல
நம்முடைய மூளையிலும் வைர மூளை , தங்கமூளை , தகரமூளை , கூழாங்கல் மூளை,இரும்புமூளை போன்ற புதையல் இருக்கின்றது. அதை அறிவால் தேடி , முயற்சியால் தோண்டி , உழைப்பால் வெளியில் கொண்டுவந்தால் நீங்கள் சாதனையாளர்கள் தான். உங்களுக்குள் இருக்கும் புதையலை தோண்ட அரம்பமாகுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்.
******************************************************
இன்னும் வரும் ....
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com