அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
தொழிலும் (வியாபாரமும்) 'செஸ்' (சதுரங்கம்) விளையாட்டும்
BUSINESS AND CHESS GAME
ஒரு சதுரங்க விளையாட்டு போலத் தான் தொழிலும். யார் ஒருவர் தன்னை காத்துக்கொண்டு அடுத்தடுத்து வரும் தாக்குதலை சமாளிக்கிறானோ அவனே வெற்றி பெறுவான்.ஏனென்றால் அவனுக்கு ஐந்து நகர்தலுக்குபின் விளையாட்டு எப்படி இருக்கும். பத்து நகர்த்தலுக்குப் பின் விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை நன்றாக கணித்து வைத்திருப்பான். மேலும் எதிராளியின் திறமையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது விளையாட்டின் திசையை எளிதாக மாற்றவும் நன்றாக தெரிந்திருக்கும். ஆகையால் அவன் எப்போதும் வெற்றி பெற்றே தீருவான்.
அதேபோல வியாபாரத்திலும் முதலில் உங்களுடைய பலத்தை அறிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு முதலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றிபெறுங்கள்.. பிறகு உங்கள் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய போட்டியாளர்களின் வலிமையையும், பலவீனத்தையும் நன்கு ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்களையும், துணிவோடு எதிர்கொள்ளும் முறையினையும் மாற்றிகொண்டால் எப்போது உங்களுக்கு வெற்றி தான்.
சதுரங்கம் தெரிந்து கொள்வீர் !
வியாபாரம் துணிந்து செய்வீர் !
வெற்றி உங்கள் கையில் !
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment