அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன் உங்கள்
உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்
தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றுகொண்டிருக்கும் போது 'முன்னேற்றம் ' பற்றிய தலைப்பு வந்தது. "உங்களில் யாருக்கு முன்னேறும் ஆசை இருக்கின்றது " என்று கேட்டேன். எல்லோரும் கையை உயத்தினார்கள். அப்படியென்றால் "முன்னேறிவிட்டீர்களா ?" என்று மறுபடியும் கேட்டேன். எல்லோரும் மௌனமாகிவிட்டார்கள். "ஏன் இதற்க்கு பதிலில்லை " என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லத் துவங்கினர். அதில் நிறையப் பேர் சொன்ன காரணம் "எனக்கு அதிர்ஷ்டம் இல்லை , நான் எடுக்கும் முயற்சியனைத்தும் எல்லாம் வீண் தான். அதிர்ஷ்டம் ஒத்துழைத்திருநதால் இந்நேரம் நான் ஒரு பெரிய லெவலுக்கு உயந்திருப்பேன்" என்றார். சரி அப்படியென்றால் உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவு எவ்வளவு ? என்று தெரியுமா? அதற்கும் ஒரு சூத்திரம் இருகின்றது.
என்னிடம் இருக்கும் 6 விதமான கை கடிகாரத்தை மேஜையின்மீது வைத்தேன். அந்த கடிகாரத்திற்கு 1,2,3,4,5 மற்றும் 6 என்று அடையாளமிட்டேன். அப்போது நேரம் சரியாக காலை 10.10 மணி. சிலரை கூப்பிட்டு ஐந்து கடிகாரத்தில் நேரம் எவ்வளவு காட்டுகின்றது? என்று பார்க்கச் சொன்னேன்.எல்லாமே சரியாக 10.10 மணி காட்டுகின்றதை உறுதி செய்தனர்.
சிறிது நேரம் கழிந்தது. கை கடிகாரங்களில் எந்தெந்த கடிகாரம் என்ன மணி காட்டுகின்றன என்று பார்க்கச்சொன்னேன்."ஐயா! முதல் மூன்று கடிகாரங்கள் பழைய நேரத்தை அதாவது 11.00 மணியைத்தான் காட்டுகின்றன்றன. மீதமுள்ள கடிகாரங்கள் இப்போதுள்ள மணியை 11.30 என்று சரியாக காட்டுகின்றன" என்றனர்.கடிகாரங்கள் ஓடாத காரணத்தை ஆராயச்சொன்னேன்.
அவர்களும் முன் பின் திருப்பி பார்த்து, கை கடிகாரத்தில் பின்னல் இருக்கும் 'கேஸை' கழற்றிய உடனேயே காரணத்தை சொல்லிவிட்டனர்.
"ஐயா! முதல் கடிகாரத்தில் எந்தவிதமான ஓடக்கூடிய பாகங்கள் இல்லை. ஆகையால் ஓடவில்லை.
இரண்டாவது கடிக்கரத்தில் எல்லா பாகமும் இருகின்றன. ஆனால் முறையாக பராமரிப்பு இல்லாததால் தூசி அடைந்து ஓடவிடாமல் செய்திருக்கின்றன.
மூன்றாவது கை கடிகாரத்தில் எல்லா பாகமும் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடவைக்கக் கூடிய 'செல்' இல்லாததால் ஓடவில்லை " என்று பதிலளித்தனர்.
இதிலிருந்து எனன் தெரிகின்றது. ஓடாத் கடிகாரமும் ஒருநாளைக்கு இரண்டு தடவை மட்டுமே சரியான நேரத்தை காட்டும். அதற்காக மற்ற நேரங்களில் அது சரியான நேரம் காட்டாது.
வகுப்பு தொடர்ந்து நடந்தன. மீண்டும் சற்றுநேரம் சென்ற பிறகு மறுபடியும் பார்கச்சொன்னேன். அப்போது நேரம் 1.00 மணி. இப்போது நான்காவது கடிகாரம் 12.45 மணியுடன் நின்று விட்டன. காரணம் ஆராய்ந்து சொன்னனர். "ஐயா நான்காவது கடிகாரம் 'ஆட்டோமேட்டிக்' தானே கி ஏறும் கடிகாரம். அதை நாம் கையில் கட்டிக்கொண்டு, கைகளில் உள்ள அசைவுகளைப் பொருத்து தான் கடிகாரம் ஓடும்.இந்த கடிகாரம் ஓரிரண்டு தடவை இலேசாக ஆட்டியதால் குறைந்த அளவே ஓடியது" என்றனர்.
மீண்டும் பயிற்சி வகுப்பு தொடர்ந்தன. இப்போது மணி 3.00 மணி. கண்ணசைத்துக் காட்டியதும் ஐந்தாவது கடிகாரத்தை பார்த்தனர்.அதில் 2.45 வுடன் நின்றிருந்தது. "ஐயா, இந்த கடிகாரம் கை கீ கொடுக்கும் கடிகாரம். எந்த அளவுக்கு கீ கொடுக்கிறோமோ அந்த அளவு ஓடும்" என்றனர்.
மீண்டும் நேரம் 4.00 மணி. நான் மீண்டும் கையை சுட்டிக்காட்ட ஆறாவது கடிகாரம் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.ஏனென்றால் அதன் நேரமும் சரியாக 4.00. அதை ஆராய்ந்து "ஐயா, இந்த கடிகாரம் குறைந்தது ஒரு வருடம் வரை சரியான நேரம் காட்டும் .ஏனெனில் அதன் எல்லா பாகமும் 'செல்'லும் நன்றாக் இருக்கின்றது" என்றனர்.
"இதிலிருந்து என்ன தெரிகின்றன" என்று கேட்டேன்.
"ஐயா, கடிகாரத்திற்கேற்ப முடுக்கம் (கீ அல்லது செல் ) நன்றாக பார்த்துக்கொண்டால் எப்போதும் கடிகாரம் ஓடும்." என்றனர்.
பிறகு விளக்கத்துடன் அதிர்ஷ்டத்துக்கான மதிப்பை விவரித்தேன்.
முதல் கடிகாரம் :
சிலர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையும் கற்றுக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வப்படமாட்டார்கள். எந்த வேலையும் கவனத்துடன் செய்ய மாட்டார்கள்.அவர்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் வராது.
இரண்டாவது கடிகாரம்:
சிலர் நன்றாக ஆழ்ந்த அறிவுடன் புரிந்து கொள்ளும் திறமையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட சிறு சிறு தோல்விகளை நினைத்து கவலைப்பட்டு பயம் காரணமாக உழைப்பதற்கு மனமில்லாமல் இருப்பார்கள்.அவர்களுக்கு முறையாக ஊக்கமளிக்கும் பயிற்சியும், தோல்விகளை வெற்றியாக மாற்றும் தன்னம்பிக்கை சக்தியை கொடுத்தால் 'அதிர்ஷ்டம்' அவர்கள் பக்கம் தான்.
மூன்றாவது கடிகாரம்:
சிலருக்கு அறிவு,ஆர்வம் இருக்கும்.அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முயற்சி செய்யும் வழியை சொல்லிக்கொடுக்கும்போது அவர்களது ஆற்றல் வேலை செய்ய துவங்கும். இனியென்ன அதிர்ஷ்டம் தானாகவே அங்கே புகுந்துவிடும்.
நான்காவது கடிக்கரம்:
சிலருக்கு எப்போதுமே ஊக்கபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு எப்போதும் கண்காணித்து ஆர்வம் குறைந்தபோதெல்லாம் ஊக்கம் கொடுத்தால் அதிர்ஷ்டகாற்று அவர்கள் பக்கம் திரும்பும்.
ஐந்தாவது கடிக்கரம்:
சிலருக்கு தன்னம்பிக்கை மற்றும் ஊக்கப் பயிற்சி கொடுக்கும் போது அந்த அதிர்வு அதாவது அதன் செயலின் சக்தி சிறிது நாட்கள் இருக்கும். நாம் காணாது இருந்தால் மீண்டும் அவர்கள் ஆற்றலற்றவர்களாக மாறிவிடுவர். அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் நாம் ஊக்கபயிற்சியளித்து அவர்களின் மனப்பாங்கை மாற்றினால் அதிர்ஷ்டம் அவர்களுக்கு கைகூடிவரும்.
ஆறாவது கடிகாரம் :
ஒரு சிலர் ஒரே தடவை ஊக்கமும், தன்னம்பிக்கை பயிற்சியளித்தால் போதும். அதை வருடக்கணக்கில் அதன் ஆற்றலை குறைத்துக் கொள்ளாதபடி தாங்களே சக்தியை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் இஷ்டப்படி தான் அதிர்ஷ்டம் வேலை செய்யும்.
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
e.mail id : gangadharan.kk2012@gmail.com

ஆக அதிர்ஷ்டம் = உழைப்பு +ஊக்கம் + தன்னம்பிக்கை + முயற்சி
***********************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good..
ReplyDelete