Pages

Saturday 13 December 2014

பாகம்: 12 யார் ? யார் ? ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்?


தொழில் நிர்வாகத் தொடர் 
பாகம்: 12
யார் ?  யார் ? ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்?



யாரெல்லாம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த   விரும்புகின்றனரோ அவர்கள் எல்லோரும் ஐ.எஸ்.ஓ வாங்குவதற்கு தகுதி படைத்தவர்களாவார்கள்.

சில உதாரணங்கள் இதோ :
ஆலோசகர்கள் / மேலாண்மை 
கிரியேட்டிவ் / மார்கெட்டிங்  
கல்வி  / கோவில்
நிதி / முதலீட்டு  / வங்கி 
பிரிண்டிங்  / வெளியீடு / மீடியா  
சில்லறை  / மொத்த வியாபாரம் 
மனிதவளம்  /  சேவைகள்  
விமான நிலையங்கள் / ரெயில்வே 
கால் மையங்கள்  
கேட்டரிங்  / ஹோட்டல் 
விநியோகம் / சப்ளையர்கள்    
உடல்நலம் / மருத்துவம் 
தொடர்பு / தகவல் தொழில் நுட்பம்   
பாதுகாப்பு    / விவசாயம் 
ஏரோ-ஸ்பேஸ் / இராணுவம் 
கட்டுமானத் தொழில் 
வடிவமைப்பு / கட்டிடம் 
மின் பொறியியல் . 
எரி சக்தி & மின் சக்தி  
உற்பத்தி  

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்  போன்ற பல. 



ஐ.எஸ்.ஒ அறிமுகம் செய்யும் நிறுவனம் உற்பத்தி  (Production) அல்லது சேவை (Service) அல்லது உற்பத்தியும், சேவையும் ( Production & Service) கொடுக்கும் அமைப்பாக இருக்கலாம். புதிதாக  நடைமுறை படுத்தும் நிறுவனங்களின் நிர்வாக பிரதிநிதி (Management Representative) மற்றும் அக தர தணிக்கையாளர்களுக்கு (Internal Quality Auditors) நிறுவனத்தில் நடக்கும்  வேலைகள் ஐ.எஸ்.ஒ-வில்  எந்த பிரிவில் (ISO Clause) அல்லது  எந்த உட்பிரிவில் (Sub Clause) வருகின்றது என்று சற்று குழப்பமாக இருக்கும். அதை எளிதாக கீழ்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அதாவது ஐ.எஸ்.ஒ பிரிவு மற்றும் உப பிரிவு, பிரிவின் விவரம், அந்த பிரிவிற்கு பொறுப்பான துறை(கள் ) என்பதை தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
குறிப்பு : ஆங்கிலம் மற்றும் தமிழில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ISO Clause No.
ISO
பிரிவு எண் 
Clause Description

ஐ.எஸ்.ஒ
பிரிவின் விவரம்       
Responsible Departments 

துறைகளின் பொறுப்பு விவரங்கள் 

4.0
Quality Management System
தர மேலாண்மை முறை 
4.1
General Requirements

பொதுவான தேவைகள் 
Business Management and All functions
வியாபார நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் 
4.2
Documentation Requirements
4.2.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
4.2.2
Quality Manual (தர குறிப்பேடு)
Business Management
வியாபார நிர்வாகம் 
4.2.3
Control of Documents (குறிப்பேடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
4.2.4
Control of Records (பதிவேடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
5.0
Management Responsibility
5.1
Management Commitment (நிர்வாக உறுதிமொழி )
Business Management
வியாபார நிர்வாகம் 
5.2
Customer Focus (வாடிக்கையாளர் மீது கவனம்)
Business Management – Service / Sales / Marketing
வியாபார நிர்வாகம் - சேவை, விற்பனை மற்றும் சந்தை படுத்துதல்  (மார்கெடிங்) 
5.3
Quality Policy (தரக் கொள்கை)
Business Management  வியாபார நிர்வாகம் 
5.4
Planning
5.4.1
Quality Objectives (தரம் நோக்கங்கள்)
All functions
அனைத்து துறைகளும்  
5.4.2
QMS Planning ( தரத்  திட்டம்)
Business Management
வியாபார நிர்வாகம் 
5.5
Responsibility, Authority and Communication
5.5.1
Responsibility and Authority (பொறுப்பு மற்றும் அதிகாரம்)
HR Management (மனிதவள நிர்வாகம்)
5.5.2
Management Representative (நிர்வாக பிரதிநிதி)
Business Management
வியாபார நிர்வாகம் 
5.5.3
Internal Communication (உள்ளக தொடர்புகள் )
All functions
அனைத்து துறைகளும்  
5.6
Management Review
5.6.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
5.6.2
Review Input ( உள்ளீடு மறு பார்வை )
All functions
அனைத்து துறைகளும்  
5.6.3
Review output (வெளியீடு மறு பார்வை)
All functions
அனைத்து துறைகளும்  
6.0
Resource Management
6.1
Provision of Resources (வளங்களின் ஒதுக்கீடு)
All functions
அனைத்து துறைகளும்  
6.2
Human Resources
6.2.1
General (பொது)
HR Management (மனிதவள நிர்வாகம்)
6.2.3
Competence, Training and Awareness (திறன், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு)
HR Management (மனிதவள நிர்வாகம்)
6.3
Infra structure (உள்கட்டமைப்பு)
Product related resource Management  (உற்பத்தி சார்ந்த வள நிர்வாகம்)
6.4
Work Environment (வேலையின் சுற்றுசூழல்)
 Business Management  & Product related resource Management
வியாபார நிர்வாகம் மற்றும் உற்பத்தி சார்ந்த வள நிர்வாகம்)
7.0
Product Realization
7.1
Planning of Product Realization (விளைபொருள் ஆய்வு திட்டம்)
Business Management, Production , Sale and Marketing
வியாபார நிர்வாகம் மற்றும் விற்பனை / சந்தை 
7.2
Customer Related Process
7.2.1
Determination of requirements related to the product (தயாரிப்பு தொடர்பான தேவைகளை கண்டறிதல்)
Sales / marketing (விற்பனை / சந்தை)
7.2.2
Review of requirements related to the Product (தயாரிப்பு தொடர்பான தேவைகளை மதிப்பாய்வு) 
Sales (விற்பனை)
7.2.3
Customer Communication (வாடிக்கையாளர் தொடர்பு)
Sales / marketing (விற்பனை / சந்தை)
7.3
Design and Development
7.3.1
Design and Development Planning (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டமிடல்)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு)
7.3.2
Design and Development Inputs (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு உள்ளிடு)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.3
Design and Development Outputs (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வெளியீடு) 
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.4
Design and Development Review (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மறுபார்வை)  
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.5
Design and Development Verification (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு  சரிபார்ப்பு)
Product Development (R&D)
7.3.6
Design and Development Validation (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு சரிபார்த்தல்) 
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.3.7
Control of Design and Development changes (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டுப்பாடு)
Product Development (R&D) (தயாரிப்பு மேம்பாட்டு) 
7.4
Purchase
7.4.1
Purchasing Process (கொள் முதல் செயல்முறை)
Purchase (கொள்முதல்)
7.4.2
Purchasing Information (கொள்முதல் தகவல்கள்)
Purchase and Quality (கொள்முதல் \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.4.3
Verification of Purchased Products (கொள்முதல் பொருட்களை சரி பார்த்தல்)
Purchase , Production and Quality (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5
Production and Service Provision
7.5.1
Control of Production and Service Provision (உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் கட்டுப்பாடு) 
Production / Manufacturing / Quality (உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5.3
Validity of Production and Service Provision (உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் ஏற்புடைமை)
Production / Manufacturing / Quality (உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
7.5.3
Identification and Tractability (அடையாளம் மற்றும் கண்டுபிடிக்கும் விவரங்கள்)
Production / Manufacturing / Stores / Inventory (உற்பத்தி  \மற்றும் சேமிப்பு கிடங்கு பொறுப்பாளர் )
7.5.4
Customer Property (வாடிக்கையாளர்களின் பொருட்கள்)
Production / Manufacturing / Stores / Inventory (உற்பத்தி  \மற்றும் சேமிப்பு கிடங்கு பொறுப்பாளர் )
7.5.5
Preservation of the product (தயாரிப்பு பொருட்களின் பாதுகாப்பு
Delivery / Despatch / Distribution / Logistics (டெலிவரி / விநியோகம்)/ 
7.5.6
Control of Monitoring and Measuring devices (சாதனங்கள் கண்காணிப்பு மற்றும் அளவீடு கட்டுப்பாடு)
All functions
அனைத்து துறைகளும்  
8.0
Measurement, Analysis and Improvements
8.1
General (பொது)
All functions
அனைத்து துறைகளும்  
8.2
Monitoring and Measurements
8.2.1
Customer Satisfaction (வாடிக்கையாளர் திருப்தி)
Business management / Marketing / Sale
வியாபார நிர்வாகம் மற்றும் சந்தை / விற்பனை 
8.2.2
Internal Audits (உட்புற தணிக்கைகள் )
All functions
அனைத்து துறைகளும்  
8.2.3
Monitoring and Measurement of process (செயல்முறை கண்காணிப்பு மற்றும் அளவீட்டு)
All functions
அனைத்து துறைகளும்  
8.2.4
Monitoring and Measurement of product (தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் அளவீட்டு)
Purchase ,Production and Quality  (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
8.3
Controlling of Non-conforming product (தரம் உறுதியில்லாத்தைக்  கட்டுபடுத்துதல்)
Purchase , Production and Quality  (கொள்முதல், உற்பத்தி  \மற்றும் தரக்கட்டுப்பாடு)
8.4
Analysis of Data (புள்ளிவிவர  பகுப்பாய்வு
All functions (MIS)
அனைத்து துறைகளும்  
8.5
Improvements
8.5.1
Continual Improvement (தொடர்ந்து முன்னேற்றம்)
All functions
அனைத்து துறைகளும்  
8.5.2
Corrective Action (தவறுகள் திருத்தும் செயல்) 
All functions
அனைத்து துறைகளும்  
8.5.3
Preventive Action (தவறுகள் திரும்ப வராமல் செய்யும் செயல்)
All functions
அனைத்து துறைகளும்  


ஐ.எஸ்.ஓ  எளிதாக நடைமுறை படுத்துவதற்கு கீழ்கண்ட செயல்கள் மிகவும் அவசியம்.

பாராட்டுகள் : (Appreciation)


தொழிலாளியின் சிறந்த செயல்களைப் தவறாமல் பாராட்டியும், அவர்களின் போக்கை நன்கு அறிந்து  நல்ல நிர்வாகம் மேற்க்கொண்டு அரிய பெரிய சாதனைகளை பலர் செய்துள்ளனர். எந்த ஒரு துறையிலும் அதில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளிகள் தங்களுடைய வேலையை சிறப்பாகவும் , முன்பு விட வேகமாகவும் நல்ல தரத்துடனும் செய்தால் அவர்களை தட்டிகொடுத்து மேலும் ஊக்கபடுத்தும் விதமாக மனமகிழ்ந்து பாராட்டுங்கள். அது தான் நீங்கள் தரும் ஊட்டச் சத்தும், மரியாதையுமாகும். அதோடு நில்லாமல் சிறிய சான்றிதலோ அல்லது நினைவு பரிசு கொடுத்தால் மற்றவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும் விதமாக அமையும்.

கூட்டு வேலை : (Team work)


தனி ஒரு மனிதனால் நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும், சரியான நேரத்தில் சரியானபடி செய்ய முடியாது. அதற்கு தேவை கூட்டு வேலை. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களுக்கிடையே நல்லுறவு மற்றும் புரிதலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமை வெளிப்படுவதோடு உற்பத்தித்திறனும் அதிகரிக்க உதவுகிறது. இதை அனைத்து தொழிலாளர்களின் கூட்டங்களின் மூலமோ அல்லது பயிற்சிகளின் மூலமாகவோ  விருத்தி செய்யலாம்.

தரம் : (Quality)


ஒரு நிறுவனத்தின் உயிர் நாடி தரம். தரம் இல்லையேல் அந்நிறுவனம் தரை மட்டமாகிவிடும். உற்பத்தியின் எல்லா நிலைகளிலும் தரத்தை உறுதி செய்த பின்னரே அடுத்த கட்ட உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும். தரத்திற்கு தேவையான சிறந்த ஆய்வுக்கூடமும் தகுதிவாய்ந்தவர்களும் கண்டிப்பாகத் தேவை.

புள்ளிவிவரம் : (Analysis Data)


ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளையும் அதன் செயல்திறனையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் வேலையின் போது கிடைக்கும் பல்வேறு புள்ளிவிவரங்களை பதிவு செய்து அவற்றை பலவிதமான வரைபடங்களின் மூலம் ஆராயவேண்டும். மேலும் திறனை அதிகப்படுத்துவதற்கான முறைகளை தொழிலை பாதிக்காத வண்ணம் சில ஆரோக்கியமான  மாற்றத்தின் வாயிலாக கொண்டு வரவேண்டும். பல நிறுவனங்கள் கணினி, மென்பொருள் உதவியினால் பல்வேறு புள்ளிவிவரங்களை தயாரித்து  உடனடியாக ஆராய்ந்து திட்டமிட்டபடி சிறந்த  தரத்தையும் , உற்பத்தி திறனை அதிகரிக்கின்றனர். 

அபிவிருத்தி : (Improvement)

ஒரு நிறுவனம் வளர வேண்டுமென்றால் சிறந்த நிர்வாகம் வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் காலமாற்றத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் எதிர்பார்ப்புக்கேற்ப தகுந்த மாற்றங்களை கொண்டு வரும்போது தரத்திலும், உற்பத்தியிலும், சேவையிலும்  தானாக அபிவிருத்தி உண்டாகிறது.      
                                           
வாய்ப்புகள் (opportunities) :



பலவித பெரிய பிரச்னைக்குள் மிகமிகச் சிறிய அளவில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கும். அவைகள் சிறு சிறு புள்ளிகளாக ஆங்காங்கே இருக்கும். அதை நாம் நுண்ணிப்பாக கவனிக்கும்போது தான் தெரியவரும். அவ்வாறான  சமயங்களில் அப்பேற்பட்ட வாய்ப்புகளை நாம் பயன் படுத்திக்கொள்ளத் தவறக் கூடாது.

வெற்றி (Success) :



பலர் வெற்றியை தூங்கிக்கொண்டு கனவில் தான் அனுபவிக்கிறார்கள். ஆனால்  வெகு  சிலரால்  தான் விழித்துக்கொண்டும், முயற்சியுடன் உழைத்துக்கொண்டும் தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறனர். வெற்றிக்கு தலைமை பண்பு மிகவும் அவசியம்.


உந்துசக்தி  (motivation):



உழைப்பின் வேகத்தை சரியான திசையில் தன்னம்பிக்கையுடன் தூண்டிவிடும்போது அபரிவிதமான சக்தி கிடைக்கின்றது.


ஊக்கப்படுத்துதல் :


ஒரேநாளில் ஒருவரை ஊக்கத்தைக் கொடுக்க முடியாது. அழகான அதிசயமான சிற்பங்களை ஒரே நாளில் செதுக்கிவிட முடியாது. ஒரு  பெரிய கல்லை சிறிது சிறிதாக செதுக்குவது போன்றதாகும். அதாவது நம் உடல் வலிமை பெற சிறிது சிறிதாக ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வது போலாகும். ஒரே சமயத்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துகளை உட்கொண்டால் நம் உடம்பு ஏற்றுக் கொள்ள முடியுமா? முறைப்படி சிறிது சிறிதாக மூளைக்குள்ளே செலுத்தினால் தான் ஊக்கம் வேலை செய்யும். ஒரேதடவையில் அதிகமாக ஊக்கப் பயிற்சி கொடுத்தால் அதிகப் படியான சோர்வு ஏற்பட்டு கடைசியில் எழும்ப முடியாதபடி நிலைமைக்குத் தள்ளிவிடும். 

மனப்பான்மை அல்லது  மனப்பாங்கு (attitude) :


உனது முகத்தை எப்போதும் சூரியனை நோக்கி அதாவது ஓர் வெளிச்சத்தை நோக்கி வைத்திருந்தால் உன்னால் உன் நிழலை பார்க்கமுடியாது.
அதுபோல் உனது எண்ணத்தை வெற்றியை நோக்கி குவிக்கப்படும் போது தோல்வி என்பது உனக்குத் தெரிய வராது .

உன் எதிரே இருக்கும் எல்லாப் பிரச்னைகளையும் உத்வேகத்துடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களது வாழ்க்கை அடங்கியிருக்கின்றது.


மாற்றங்கள் (Changes):

  

உங்களது தொழில் மற்றும் வாழ்கையின் பயணத்தின்போது வளைவான பாதையின் கடைசியில் பாதை முடிந்து விட்டது போலத் தோன்றும். அப்போது பாதை முடிந்துவிட்டது என்று எண்ணி அங்கேயே நின்று விடாதே !   நீ வளையாமல் அடம்பிடித்து இருக்காதே! அது உண்மையில் முடிவல்ல! சற்றே வளைத்து பயணித்துப் பார். மேலும் பாதையின் விரிவு தெரியும்.   அங்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.

அதுபோல் மாற்றத்திற்கு பயந்து உனது கடின உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே? 

அதாவது கடலில் ஏற்படும் காற்று மற்றும் அலைகளை அனுசரித்து பயணம் செய்தால் தான் உன் இலக்கை அடைய முடியும்.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்றுக்கொள் !

முன்னேற்றம் தானாகத் தேடி வரும்!


பந்தயம் (Challenge ) :

                   

அமைதியான கடலில் யார் வேண்டுமானாலும் எந்தவித கஷ்டமில்லாமல் அழகாக பயணம் செய்யலாம். ஆனால் உனது திறமை கடலில் ஏற்படும் சூறாவளி காற்றையும்  சமாளித்து பாதுகாப்புடன் பயணம் செய்வதில் தான் இருக்கின்றது.


துணிச்சல் (Risk) :


புதிய கடல் நாடுகளை காணவேண்டுமென்றால் இப்போது உனக்குத் தெரியும் கடற்கரையை காணாதவாறு தாண்டி பயணம் செய்ய வேண்டும்.


திட்டமிடுதல் (Plan):



எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். திட்டமிடுதல் முதலில் தானே வரவேண்டும். ஏன் கடைசியில் வருகின்றது என்று? ஏனெனில் மேற்கூரியவைகள் அனைத்தும் இருந்தால் தான் தெளிவான திட்டங்களை தீட்ட முடியும். அவைகள் இல்லாமல் திட்டங்களைத் தீட்டுவது வெறும் காகித  அளவில் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.

எப்படி திட்டமிடுவது?

* முதலில் உங்களால் அடையக்   கூடிய இலக்கை குறித்துக் கொள்ளுங்கள்.

* எந்தெந்த வழிகளில் அதை அடையலாம் என்பதை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள்.

* அவற்றினால் ஏற்படும் பிரச்னைகளையும் அதை தீர்வு காணும் முறையினையும் விவரமாக எழுதுங்கள்.  

* இலக்கை அடைவதற்கு தகுதியான நேர் சிந்தனையுடைய ஆட்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* எப்போது இலக்கை பற்றிய சிந்தனையிலே இருங்கள்.

* செயல்களை செய்யத் தொடங்குகள்.  

* செயல்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் திசை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

* தோல்வி ஏற்பட்டால் மாற்றுப் பாதையில் உடனே செல்வதற்கு தயாராக வைத்திருங்கள்.

* இப்போது நீங்கள் போடும் திட்டம் வெற்றி தான்.

* மீண்டும் அடுத்த திட்டத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள் .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
முற்றும் 

No comments:

Post a Comment