Pages

Saturday, 13 December 2014

HORRIBLE TEENAGE இளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி

          HORRIBLE TEENAGE
இளமையின் அவஸ்தை (அல்லது)
    
       இளமை சூழும் அகழி
              புதுக்கவிதை
         மதுரை கங்காதரன்

   
இழுக்க இழுக்க இன்பம்
பருகபருக மயக்கம்
பார்க்க பார்க்க பரவசம்
நினைக்க நினைக்க இனிப்பது

கேட்க கேட்க தித்திப்பது
உண்ண உண்ண சுவைப்பது
கூடக்கூட பெருகுவது
பழக பழக காதல் வருவது

படிக்க படிக்க கவருவது
நடக்க நடக்க அழகு கூடுவது
துடிக்க துடிக்க துன்பம் பெருவது
பேச பேச தித்திப்பது
  
சொல்ல சொல்ல தயங்குவது
எழுத எழுத ஏங்குவது
வெட்ட வெட்ட வளர்வது
பசிக்க பசிக்க ருசிப்பது

நனைய நனைய ஆசைபடுவது
ரசிக்க ரசிக்க கனவில் மிதப்பது
குளிரக் குளிர அனுபவிப்பது
தீரத்தீர செலவு செய்வது
 
அத்தனையும் இளமை அகழிகள்
அனைத்தும் தாண்டுதலே இளமை வெற்றி
மெல்ல மெல்ல விடுபடுவாய்
மேலும் மேலும் வெற்றி பெறுவாயே!

************************************************************


பாரதி ! புதுக்கவிதையின் சாரதி! LONG LIVE POET BHARATHI!


பாரதி ! புதுக்கவிதையின் சாரதி!
LONG LIVE POET BHARATHI!
பாரதி பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 
அலையாய் லஞ்ச ஊழலும் ஏறுகின்ற விலைவாசியும்
விலைபோகும் கல்வியும் சட்டமும் - தொலைத்திட
பாரதியின் வேள்வித்தீ எழுச்சித் தேரில்
சாரதியாய் பவனித்து பொசுக்கு!

பேசுகின்ற தமிழும் எழுதுகின்ற தமிழும்
பூசுகின்ற பிறமொழியும் கலாச்சாரமும்- பொசுக்கிட
ஏற்றமிகு தமிழ்மொழியை அழியாமல் காத்திட
வற்றாத ஜீவநதியாய் கலக்கு!

 

பெண்ணடிமைக்கு படைத்துப் பொங்கியவன்
மண்ணடிமைக்கு மக்களை உசுப்பியவன் - மண்டியிட்டு
எந்திரமாய் வாழ்வில் பாரதிக் கவிதைகளை
மந்திரமாய் உலகிற்கு விளக்கு!

கல்விக்கூடம் குறுகி குடிக்கூடம் பெருகி
சொல்லில்லா ஏழையின் கண்ணீரை- வெல்ல
என்றாவது ஒருநாள் விடிவு வரும்
தன்னம்பிக்கையோடு அடைவாய் இலக்கு!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் ! TAMIL IS THE BEST!



  
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் ! ஏன் சொன்னான் பாரதி?!
TAMIL IS THE BEST!
பாரதி பிறந்த நாள் சிறப்பு புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 
மாமதுரை கவிஞர் பேரவை மற்றும் உலகத் தமிழாய்வு சங்கம்
நடத்திய கவிதை அரங்கம்

நாள்: 7.12.14   இடம்: மகாஜன மேன்சன், மதுரை.
 
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
ஏன் சொன்னான் பாரதி?!

பாட்டுக்காகவே பிறந்த பாரதியே
பாக்களில் தமிழ் சொற்களை அழகும் ஆழமாய் படைத்தாய்
பாடுகையில் வன்மையும் மென்மையும் தந்தாய்
பாமரத் தமிழில் செம்மையும் குளுமையும் அளித்தாய்!

ஓடி விளையாடும் குழந்தைக்கு பாப்பா பாட்டு
ஈருயிர் ஓருயிராய் கலக்கும் கண்ணம்மா பாட்டு
அடிமைத்தனத்தை சுட்டெரிக்க சுதந்திரப் பாட்டு
ஆன்மீகத்தை வளர்க்கும் கண்ணன் பாட்டு

 
உதட்டில் பேசும் ஆங்கிலச் சொற்கள் சரி
மூக்கில் பேசும் அந்நியச்சொற்களும் சரி
தொண்டையில் பேசும் பிறமொழி சொற்களும் சரி
உயிரில் மெய்யில் கலந்து ஒலிக்கும் தமிழ் சொற்களுக்கு ஈடாகுமா?

தமிழ் சொல் மாலையில், எழுத்துகள் நன் முத்துக்கள்
தமிழ் சொற்களில் எழுத்துகள் உயிரோடு ஒலிப்பவை
தமிழ் சொற்களில் எழுத்துகள்,மறைவின்றி உச்சரிக்கப்படுவது
தமிழ் சொற்களில் செத்த எழுத்தோ சொத்தை எழுத்து உன்டா?

எளிமையான சொற்கள் இனிமையான உச்சரிப்பு
புதுமையான எண்ணங்கள் தரமான சிந்தனைகள்
இதமான கீதங்கள் வளமான நாதங்கள்
தமிழ் சொற்களின்றி பிறமொழி சொற்களில் உன்டோ?
 
பாரதியே உன் சொல் அம்பு அன்று பலருக்கு குத்தியது
'சுதந்திரக் காற்று' இந்த நாடே சுவாசிக்கின்றது
இன்றும் வேண்டும் நெஞ்சு துளைக்கும் துப்பாக்கிச் சொற்கள்!
தறிகெட்டுப் போகும் தமிழனையும் தமிழ் மொழியையும் காத்திட!

மதுவிற்க்கு மயங்கும் தமிழனின் ஈரலைக் காப்பதற்கு
லஞ்ச ஊழல் செய்யும் மனிதர்களை தண்டிப்பதற்கு
முகநூலில் மூழகிக் கிடக்கும் இளைஞர்களை மீட்பதற்கு
சின்னத்திரையே கதின்னு கிடக்கும் மாந்தர்களை தடுப்பதற்கு!

 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


புதிய தென்றலில் வெளியான எனது கட்டுரை : விளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் - CHEATING ADS


புதிய தென்றலில் வெளியான எனது கட்டுரை :
விளம்பரத்தில் ஏமாறும் மனிதர்கள் -
CHEATING ADS
மதுரை கங்காதரன்