HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
87. ARE YOU FEARED ABOUT ANTS (PROBLEMS)?
* I asked the Elephant, "Why are you stopping here without progress and who had stopped you?"
The Elephant had answered my question " An ant had blocked my progress," it said.
------------------------------ ------------------------------ ------------------------------ ---
"Have you ever seen Ant and did you know about Ant? I asked.
" I had never seen but I knew its strength"
------------------------------ ------------------------------ ------------------------------ ---
"How would you know about that ?"
" Yes. Once upon a time an Ant entered one of my ancestor elephant's ears and gave a horrible hurt to it."
------------------------------ ------------------------------ ------------------------------ ---
"So you hadn't seen an ant ?"
"Yes .."
------------------------------ ------------------------------ ------------------------------ ---
Then I had shown to it "Here is the 'ant' "! I said.
Seeing that the elephant laughed loudly ' Haaa Haa' and said, " I had thought that this ant is bigger and stronger than me"
------------------------------ ------------------------------ ------------------------------ ---
"What are you saying now ?"
" Now I am clear about what is Ant . When compare me it is nothing and I know my strengths".
------------------------------ ------------------------------ ------------------------------ ---
Note: When some of us are facing a problem or when we start a new work somebody will try to stop our progress and at that time you must need a good guide to prevent any problems. After that, you will realize that what you think is a big problem you feel is simple.
------------------------------ ------------------------------ ------------------------------ ---
Success steps continue next......
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்
மதுரை கங்காதரன்
87. நீங்கள் எறும்பைப் (பிரச்சனைகளைப்) பார்த்து பயப்படுகிறவரா?
* நான் யானையினிடத்தில், "நீ ஏன் முன்னேறாமல் இங்கேயே நின்றுவிட்டாய்? உன்னைத் தடுத்தது யார்?" என்று கேட்டேன்.
என் கேள்விக்கு யானை சொன்ன பதில் "என்னை முன்னேற விடாமல் அந்த எறும்பு தடுத்து விட்டது" என்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
* "நீ எறும்பபை பார்த்திருக்கிறாயா ? எப்படி இருக்கும் என்று தெரியுமா?" என்று கேட்டேன்.
"தெரியாது ! பார்த்ததில்லை!! ஆனால் அதன் வலிமை கேள்விபட்டுயிருக்கிறேன்" என்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
* "என்ன கேள்விபட்டுயிருக்கிறாய்?" என்று கேட்டேன்.
"ஒரு சமயம் என் முன்னோர் ஒரு யானையின் காதில் எறும்பு புகுந்து பயங்கரமாய் துன்புறுத்தியது" என்று பதில் சொன்னது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
"அப்படியென்றால் எறும்பை நீ பார்த்ததில்லை?"
"ஆமாம் .." என்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
"அப்படியென்றால் இதோ இது தான் 'எறும்பு' " என்று காட்டினேன்.
அதைப்பார்த்த யானை பலமாக 'ஆஆஆ' என்று சிரித்துக்கொண்டே இதுவா எறும்பு! அது என்னை விட பெரிதாகவும் பலசாலியாகவும் இருக்குமல்லவா என்று நினைத்தேன் " என்றது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
* "இப்போது என்ன சொல்கிறாய்?" என்றேன்
"இப்போது எறும்பைப் பற்றிய பயம் நீங்கிவிட்டது. என் பலம் நான் அறிந்துகொண்டேன்" என்று புத்துணர்ச்சியோடு சொன்னது.
------------------------------ ------------------------------ ------------------------------ --------------------------
குறிப்பு: இப்படித்தான் பலர் ஒவ்வொரு பிரச்சனை எழுகின்ற போதும் அல்லது புதிய வேலை தொடங்கும்போதும் அதை செய்யவிடாமல் பலர் சொல்லித் தடுக்கும்போது உங்களுக்குத் தேவை ஒரு நல்ல வழிகாட்டியும் உங்கள் பலத்தை உங்களுக்கு உணர்த்தும் குருவும் வேண்டும். அப்போது தான் 'பெரிய பிரச்சனை என்று நீங்கள் நினைப்பது எல்லாமே மிக மிக சாதாரணமானது' என்று உங்களுக்குத் தெரியவரும்.
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment