Pages

Monday, 14 August 2023

நான் ஒரு நாள் கடவுள் ஆனேன் - கு.கி.கங்காதரன்- புதுக்கவிதை

 நான் ஒரு நாள் கடவுள் ஆனேன் - கு.கி.கங்காதரன்-புதுக்கவிதை


ஒரு மந்திரக்கோல் கிடைத்ததடா

ஒரு நாள் கடவுள் ஆனேனடா.

சக்தி பிறந்ததடா

புத்தி வளர்ந்ததடா

யுக்தி தெரிந்ததடா

பக்தி உதித்ததடா

முக்தி கிடைத்ததுடா

 

பாடுபடும் பட்டாளிகளுக்கு - நான்

பசியை விரட்டும் கூட்டாளியானேனடா 

அப்பாவிகளைக் காத்தேனடா - அவர்

அறியாமையை அழித்தேனடா.

 

புதிய உலகம் படைத்தேனடா  - அங்கே

புதியபாதைப் போட்டேனடா 

பணப்பேய்களை விரட்டினேடடா - அவர்

பதவி வெறியை அகற்றினேனடா

 

உண்மையை நிலைநாட்டினேடடா - இருக்கும்

பொய்யர்களைப் பந்தாடினேடடா.

பூமியை சொர்க்கமாக்கிவிட்டேண்டா  - அதில்

புதுமைகளைப் புகுத்திவிட்டேண்டா 


பெண்களை பாரதியாக்கிவிட்டேண்டா  - அதோடு

ஆண்களைப் பூக்களாக்கிவிட்டேண்டா .

வானத்தை மனதில் வைத்தேனடா  - அதன் 

விசாலத்தை காட்டிவிட்டேனடா

 

பூமியை இதயத்தில் பூட்டினேனடா  - அதில்

பொறுமையைப் பொதித்திவிட்டேண்டா

உடலில் நெருப்பைப் பரப்பிவிட்டேனடா - ஒட்டிய

அநீதிகளைச் சாம்பலாக்கிவிட்டேண்டா.


சிந்தனை மழையாய்ப் பெய்யவைத்தேனடா - கூடவே

சிறப்புக் குணங்களைத் தெளித்துவிட்டேனடா .

உயிரில் ஆன்மீகத்தைக் கலந்துவிட்டேனடா  - அதோடு

உலகை உருப்படியாய் மாற்றிவிட்டேனடா .


உழைக்கும் ஏழைகளோடு வாழப்போறேண்டா - அவரோடு

ஊருக்கு நன்மை செய்யப்போகிறேனடா.

பாவிகளை பொசுக்கிவிட்டேனடா  - அவர்களைப்  

பூமிக்குக் கீழே புதைத்துவிட்டேனடா 


ஏழைகளுக்கு நிம்மதி தந்தேனடா  - அவர்களை

ஏமாற்றுபவர்களை நல்லபுத்தி கொடுத்தேனடா 

செவ்வாய்க்குக்  குடியேறச் செய்வேண்டா - அங்கே

செழிக்கும் வழி வழங்குவேண்டா 


நீனா நானாப் போட்டி எதுக்குடா - கடவுளின் 

நன்றி மறந்தால்  பிழைப்பு  நடக்காதுடா.

உலகமே கணினி மயமாக்கிவிட்டேண்டா  - மனுசன்

உழைப்பை கேலிப்பொருளாக்கதேடா

 

விவசாயத்தில் மாற்றம் செய்தேனடா  - பயிர்

விளைச்சலைப் பன்மடங்கு ஆக்கினேனடா 

கோடிக் கடனாளிக்குச் சிறை வைத்தேனடா   - அதோடு   

ஊழல் லஞ்சம் பேர்வழிகளை அழித்தேனடா

 

ஊரைச் சுருட்டியோர்களை பந்தாடினேனடா - நல்ல 

குழந்தைகள் பெண்களைக் காத்தேனடா 

செயற்கை நுண்ணறிவு தந்தேனடா - புவியை 

சொர்க்கமாய் மாற்றிவிட்டேனடா 

 

இதெல்லாம் கனவில் நடந்தடா - அனைத்தும் 

இன்று நடந்தால் இன்பமாய் இருக்குமடா 

கடவுளே மந்திரக்கோலை தருவாயா - மக்களை 

மகிழ்ச்சிக்  கடலில் ஆழ்த்துவாயா !

***********************************

 

 

No comments:

Post a Comment