Monday, 27 June 2016

நவீன லட்சுமண ரேகை - மதுரை கங்காதரன்


நவீன லட்சுமண ரேகை

 POWER POINT PRESENTATION 

நாள் : 26.6.16  காலை : 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இடம் : சௌராஷ்ட்ரா சேம்பர்  ஆப் காமர்ஸ் , மதுரை. 

மதுரை கங்காதரன் 


நேற்று (26.6.16 - ஞாயிறு) அன்று நடை பெற்ற ஆள்வது மனம் - ஆழ்வதும் மனம் என்கிற சிந்தனை திண்ணை கூட்டத்தில் சுமார் 35 சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் காலை 11.00 மணி அளவில் தொடங்கி மாலை 5.00 மணி வரை நன்கு நடந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை சிந்தையாளர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று நான் உரையாற்றிய .நவீன லட்சுமண ரேகை' பற்றிய  POWER POINT PRESENTATION  ஐ உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,

பார்த்த பின் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி ..  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Friday, 24 June 2016

ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்

மன நாயகம்

ஆள்வதும் மனம். – ஆழ்வதும் மனம்

ஆராய்ந்து அறிந்து வாழாத வாழ்க்கை,

 வாழத் தகுதியற்ற வாழ்க்கை - சாக்ரட்டீஸ்


பல ‘நான்’ கள் சிந்திக்க சந்திக்கும் ஒரு நாள் நிகழ்ச்சி

நாள் – 26-6-2016 ஞாயிறு.(உலக போதை எதிர்ப்பு தினம்)  
   காலை 10.30 முதல் மாலை 4.30வரை

இடம் – சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ், கீழ வெளி வீதி, மதுரை  625001


நோக்கம் –  சிந்தனையை வளைப்பது ‘நானா’?    

சிந்தனையால் வளைக்கப்படுவது ‘நானா’?   
                                       
Does “I” mould my thinking? Or my thinking moulds “I” ? என்ற 

கேள்விக்குப் பதில் காணல் 


                                                                       பங்கேற்பாளர்கள்  -

· ‘வேலையில்லாதவன்தான் சிந்தித்துக் கொண்டிருப்பான்’ என நினைக்காத 

அல்லது

·‘சிந்திப்பவன்தான் மனிதன்’ என நம்பும் 30 பேர்.


நிகழ்ச்சிகள்

· குழுவாய் அமர்ந்து சுய அறிமுகம்.

· சிந்தனைன்னு நான் சொல்றது எதுன்னா?......பொதுக் கலந்துரையாடல்

· உலக சிந்தனையாளர்கள் அறிமுகம் – குறும்படம் – வி, ஆர் 

கணேஷ் சந்தர்

· நவீன லட்சுமண ரேகை’  - பவர் பாய்ண்ட் – கு, கி, கங்காதரன்


·         கண்டதைச் சொல்லுகிறேன் – (வாழ்வை உற்றுநோக்கித் தான் 

கண்டுபிடித்த ஓர் உண்மையை பங்கேற்பாளர்களிடையே கூறி 

விவாதத்திற்கு வைத்தல)


கண்டுபிடிப்பாளர்கள்

1.   திரு. கு, கி கங்காதரன்

a.   மனிதனின் சிந்தனை முடங்கிக் கொண்டு வருகிறது. அல்லது 

மனிதன் சிந்திக்க மறுக்கிறான்

b.   குடும்பக் கடமைகளை முடித்த பின் வாழ்க்கையைத் தள்ள 

மனிதனுக்கு எந்தagenda வும் இல்லை

2.   திரு. சுதாகர்
a.  தனி மனித ஒழுக்கம் பலவீனமடைந்து வருகிறது. Human 

Value is becoming weaker

3.   திருமதி. பானுமதி

a.   குழந்தையிடமிருந்து குழந்தைமை எடுக்கப்படுகிறது

b.   மனிதனின் அன்னிய நாட்டு மோகம் அவனை அவனுக்கே 

அன்னியமாக்கிவிட்டது.Contact:
V R Ganesh Chander
மதுரை 
98409 11021

%%%%%%%%%%%%%%%%%%%%%%%


Wednesday, 15 June 2016

பூதகுடி ஒரு பார்வை - அஜித் குமார்

பூதகுடி ஒரு பார்வைஅஜித் குமார்


சென்ற 12.6.16  ஞாயிறு அன்று மதுரை அருகே உள்ள 'பூதகுடி' கிராமத்தில் நடைபெற்ற ஒரு மாணவனின் நூல் வெளியிட்டு விழாவிற்குச் சென்று அவருக்கு வாழ்த்துரை வழங்கினேன்.

மாணவன் பெயர் : செல்வன் அஜித் குமார்
படிப்பு : பி.. தமிழ் இரண்டாம் ஆண்டு
கல்லூரி : யாதவா கல்லூரி, மதுரை.
ஊர் : பூதகுடி
எழுதிய நூலின் பெயர் : பூதகுடி ஒரு பார்வை

சிறப்பு :
கல்லூரி மாணவர்கள் என்றால் காதல் கவிதைகள் மட்டும் எழுதத் தெரியும் என்கிற நினைப்பை அகற்றி, தான் வாழும் கிராம பூமி பற்றி எழுதியதோடு அதை புத்தகமாக வெளியிட்டு வரலாற்றுப் பதிவு செய்ததே.

இவர் செய்த காரியம் இளைஞர் சமுதாயத்திற்கு முன் உதாரணம். மேலும் அவர் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் கூட.

அவர் மென்மேலும் பல நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என்று இதன் மூலம் வாழ்த்துகிறேன்.


*** மதுரை கங்காதரன்***