Tuesday, 26 November 2019

24.11.19 அன்னைத் தமிழை மறக்காதே ! அடையாளத்தை இழக்காதே! - மா.க.பே, மதுரை

24.11.2019. இன்று .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் 
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .
முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி !

படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் 

ரெ .கார்த்திகேயன் & கு.கி.கங்காதரன் 
கை வண்ணம்

குறிப்பு : அன்றைய தினம் கவிஞர் ஆதி நரசிம்மன் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் வடை ஆகியவை தந்து சிறப்பித்தார். 

என் கவிதை இதோ... 

       அன்னைத் தமிழை மறக்காதே ! 
       அடையாளத்தை இழக்காதே!

   கு.கி.கங்காதரன் மதுரை 9865642333

அறிவியலில் பிழை நாட்டை அழிக்கும் 
உற்பத்தியில் பிழை தரத்தைக் கெடுக்கும் 
மருத்துவரின் பிழை உயிரை மாய்க்கும் 
மொழியில் பிழை அடையாளத்தை இழக்கும் 

செயலில் மாற்றம் மகிழ்ச்சியைத் தரலாம் 
வயலில் மாற்றம் வளர்ச்சியைத் தரலாம் 
எண்ணத்தில் மாற்றம் எழுச்சியைத் தரலாம் 
அன்னைத்தமிழில் மாற்றம் தளர்ச்சியைத் தருமே 

விதையைத் தேடி மரம் அலைகிறது   
விண்ணைத்தேடி நிலவு அலைகிறது   
தீயினைத் தேடி தீக்குச்சி அலைகிறது   
தமிழர்களைத் தேடி தமிழ் அலைகிறது . 

தமிழனே தமிழ்பேச மறக்கின்றாயே    
தங்கத்தை தகரமாகப் பார்க்கின்றாயே  
இமயத்தை இளக்காரமாய் நினைக்கிறாயே 
அன்னைத்தமிழை வீதிக்கு இழுக்கிறாயே 

அந்நியமொழி ஆதிக்கத்தில் தமிழும் வீழ்ந்தது  
அழியப்போகும் மொழியில் தமிழும் சேர்ந்தது 
அடையாளம் தெரியாமல் தமிழ் புதையப்போகிறது 
அப்போது தமிழ் இனமே காணாமல் போகப்போகிறது 
               **********************மேலும் மின்பங்களுக்கு இதில் செல்லவும்...
யூடியுப் இல் பார்க்க இதில் செல்லவும்...

நன்றி 

KKG Maamadurai Annai thamilai marakkathe - Maamadurai Kavingar Peravai M...

GANDHI (MAHATHMA) SHORT FILM IN TAMIL

Saturday, 2 November 2019

Dr.T.M.பள்ளியில் YOUNG DOCTORATES ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி


1.11.19 அன்று Dr.T.M.பள்ளியில் YOUNG DOCTORATES 
தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகள் 

* நிகழ்ச்சி 'தமிழ்த்தாய் வாழ்த்ததுடன்' தொடங்கியது.

* 'நிகழ்ச்சி நிரல்' படி விழா தொடங்கியது.

* 1.11.19.அன்று வெள்ளிக்கிழமை Dr.T.M.பள்ளியில் இளம் முனைவர் YOUNG DOCTORATES தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

* ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் மாணவிகள் தங்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்க எவ்வளவு உழைத்தார்கள் என்றும் பள்ளித் தேர்வு உட்பட என்னென்னத் தடைகள் எதிர்கொண்டனர்  என்றும் தங்களுடைய அனுபவங்களை எவ்விதத் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ வைத்ததோடு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

* இந்த கட்டுரைக்காக மாணவிகள் பல நூலகத்திற்குச் சென்று அங்குள்ள புத்தகங்களைப் படித்துக் குறிப்பு எடுத்தது மறக்கமுடியாத அனுபவம் என்று பகிர்ந்தனர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றனர். 

* தாங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருந்த தொலைகாட்சி, சமூக வலைதங்களை இந்த ஆய்வுக் கட்டுரை எழுதுவதில் மறக்கச் செய்துவிட்டது என்று கனிவுடன் இயம்பினர்.

* மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முழுஒத்துழைப்பும், ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டினர் என்றார்கள்.

* வரும் காலத்தில் அனைவரும் 'முனைவர்' பட்டம் பெறுவதற்கு இது அடித்தளமாக கட்டாயமாக அமையும் என்பதை ஆணித்தரமாகப் பேசினார்கள்.

* மாணவிகள் தங்களுக்குள் இவ்வளவு ஆற்றலும், அறிவும், திறமையும், முனைப்பும், தன்னம்பிக்கையும்  இருக்கின்றது என்பதை இந்த ஆய்வுக்கட்டுரைகள்  (280) சமர்ப்பிப்பதில் தெரிய வருகின்றது என்பதை சிறப்பு விருந்தினர்கள், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  

* மாணவிகள், நாங்கள் நன்றாய்ப் படித்து பட்டம் பெற்று அரசின் உயர்பதவியைப் பெறுவோம் என்று தன்னம்பிக்கையுடன் பேசியது அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தியது.

* இந்த வெற்றி அனைவரின் கூட்டுமுயற்சியால் கிடைத்தது என்று தெரிவித்தது.

* நிறைவாக  'நாட்டுப்பண்' அனைவரும் பாடினர்.

* அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய இனிப்பும், தேநீரும் வழங்கப்பட்டது.

நிகழ்வின் மின்படத்தொகுப்பு இதோ ...

        
  


நன்றி, வணக்கம்.
 ********