Monday, 13 April 2015

Tamil New Year Greetings - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எனது
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


I wish you 'Tamil New Year Greetings' to all world people.மதுரை கங்காதரன் 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


Sunday, 12 April 2015

DO YOU WANT STEADY MIND ? சஞ்சலமும் மனமும்

DO YOU WANT STEADY MIND ?
      சஞ்சலமும் மனமும்
               புதுக்கவிதை
         மதுரை கங்காதரன்

பணம் கொஞ்சம் அதிகமாக வந்தாலே
மனசு ஏதேதோ என்னென்னமோ செய்யத் துடிக்கிறது

பெண்னொருத்தி கொஞ்சம் சிரித்தாலே
கற்பனைக் காதல் குதிரை மனசில் ஆயிரம் ஓடுது

புகழ் மழை கொஞ்சம் அதிகம் பெய்தாலே
மனசு அடுத்தடுத்து அலைபாயுது

மதிப்பெண் கொஞ்சம் அதிகம் பெற்றாலே
மனசு மேல்படிப்புக் கனவு கண்களில் மிதக்குது

அதிர்ஷ்டம் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலே
மனசு 'நானே ராஜா' என எண்ணுது

பதவி கொஞ்சம் அதிகம் அடைந்தாலே
மனசு தன்னையறியாமல் தடுமாறுது

கேட்டவுடன் உதவி கொஞ்சம் அதிகம் கிடைத்துவிட்டால்
மனசு மேலும் மேலும் எதிர்பார்க்குது

நினைத்ததை விட கொஞ்சம் அதிகமாய் நடந்துவிட்டால்
மனசு சொர்க்கத்தை படைக்க நினைக்குது

தொட்டதெல்லாம் வெற்றி பெற்றுவிட்டால்
மனசு எட்டிப் பிடிக்காத தூரம் போகுது

சஞ்சலமே அரக்கன்
சஞ்சலமே பேய்

சஞ்சலமே எமன்
சஞ்சலமே சாத்தான்

சஞ்சலத்தை முளையிலேயே கொன்று விடு
சலனமற்ற மனசைப் பெற்று விடு.

###############################################################


THIRUVALLUVAR AND OUR LIFE - வள்ளுவமும் வாழ்வியலும்
THIRUVALLUVAR AND OUR LIFE
வள்ளுவமும் வாழ்வியலும்
கவிதையரங்கம்         தேதி:  2.4.2015      இடம்: காலேஜ் ஹவுஸ், மதுரை.
மதுரை கங்காதரன்


எனக்கு முளைத்து மூனு இலைவிடாத அனுபவம்
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்
வாழ்க்கைக் கனியை முழுவதும் ருசிக்காதவன்
நான் திருக்குறள் ஆலமரத்தை அசைத்துப் பார்ப்பதா?

தங்கத்தை உரசிப் பார்த்தால் தரம் தெரியும்
திருக்குறளை அலசிப் பார்த்தால் வாழ்வியல் புரியும்
வானுக்கு வானவில் சிறப்பு
தமிழுக்கு திருக்குறளே சிறப்பு

தேனில் எப்பகுதி சுவை மிகுதி?
முக்கனியில் எக்கனி இனிமை அதிகம்?
முப்பாலில் எப்பால் வாழ்விற்குச் சிறந்தது?
திருக்குறளில் எக்குறள் சிறப்பு மிக்கது?

விழா நாயகர் திருக்குறள் செம்மலின் அகவையோ எழுபது!
எழுபதாவது குறளே இவ்வவைக்கு ஏக பொருத்தம்
மகன் தந்தைக்குச் செய்யும் கைமாறு யாதெனில்
ஆன்றோர் அவையில் சான்றோராய் விளங்குவது!

ஏன் பிறந்தாய் மகனே? எனப் புலம்ப விடாமல்
'இவன் என் மகன்' என்று பெருமைபட பேசுவது
ஊர் போற்றும் நன்மகனாய் நற்பெயரை எடுப்பது
கல்வி ஒழுக்கத்தில் சிறந்தவனாய் விளங்குவது

தமிழ் தாய் கோவிலில் தங்கச் சிலையாய் இருப்பவர்
செவ்வாயில் திருக்குறளை அமுதமாய் சுரப்பவர்
செவிகளில் குறள்களை இனிமையாய் ஒலிப்பவர்
வாழும் காலத்தில் வள்ளுவத்தை வாழ்வியலாய் ஆக்கியவர்.

எங்கள் திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார்
பிறவிப் பயனை திருக்குறளால் அடைந்தார்கள்
அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம்
                        நன்றி வணக்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&UNDERSTAND WHAT IS WORLD! உண்மையை தெரிஞ்சிக்கோ! உலகத்தை புரிஞ்சிக்கோ!

UNDERSTAND WHAT IS WORLD!
உண்மையை தெரிஞ்சிக்கோ! உலகத்தை புரிஞ்சிக்கோ!
விழிப்புணர்வு வார்த்தைகள்
மதுரை கங்காதரன்


·      பெருகி வரும் படித்த அடிமைகள் - வெறும் மனப்பாட கல்வி - அதுவும் மிக பழைய கல்வி , கண்டுபிடிப்புகள், சரித்திரம், பூகோள அமைப்பு பாடங்கள்.

·         இருக்க வேண்டிய  கல்வி - தினமும் ஒவ்வொரு வகையான கண்டுபிடிப்பு, அறிவியல் மாற்றங்கள், செய்முறை , விற்பனை முறை மாற்றங்கள், செய்தி பரிமாற்றம்,

·                நீர் உறிஞ்சும் தன்மை இல்லா தார் மற்றும் சிமிண்ட் ரோடுகள் -                      அதனால் மழைநீர் சேகரிப்பு குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.

·         75% மழைநீர் கடலில் கலக்கும் பூகோள அமைப்பு, ஆறுகள், ஏரிகள்,  அணைகள் வற்றிப்போகும் அபாயம்.

·         குழப்பமான சட்டத்தால் நீதி, தீர்ப்பு கிடைப்பதில் தாமதம் 

·         பல மொழி பேசும் மக்களால் புதியன புகுத்த முடியாத நிலைமை 

·         எளிதாக மக்களை ஏமாற்றும் அரசியல் மற்றும் மீடியாக்கள் 

·         சுதந்திரம் என்று சொல்லியே பல தவறுகள் செய்யும் சூழ்நிலை 

·         மாநிலத்திற்கு மாநிலம் மாறும் பலவிதமான கொள்கைகள் 

·         இதுவரை பலரை நாட்டை ஆள இடம் கொடுக்கும் குறைவான தேசபக்தி  

·         பழைய மூட பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு மாறாமை 

·         எதையும் ஏற்றுக்கொண்டு புலம்பும் தன்மை 

·         வீரம் இல்லாத வாழ்க்கை 

·         எங்கும் லஞ்சம் ஊழல் மலிந்து கிடக்கும் அரசியல் 

·         திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் மதிப்பு கொடுக்காத தன்மை 

·         பணத்திற்கு விலைபோகும் பதவிசட்டம், கல்வி, அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்கள் 

·         காரணமில்லாமல் பயத்தை உண்டாக்கும் போலி சாமியார்கள், நிறுவனங்கள், ஜோதிடர்கள், அரசியல் சட்டம் மருத்துவர்கள்

·         ஏழ்மை மற்றும் எளியோரிடம் பாயும் சட்டம் 

·         அனேகரிடம்தானாய் சரியாக போகும் என்கிற எண்ணங்கள் 

·         நாளைய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாத தொலைநோக்கு இல்லாத ஆட்சி 

·         சின்ன பெரிய திரை, மது மற்றும் பல கேளிக்கைகளில் அதிக கவனம்  

·         பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டாலும் கவலையில்லை !  தான் வாழ்தால் போதுமென்ற சுயநலம் மற்றும் பிறரை அடிமை படுத்தும் எண்ணம் 

·         குறைந்த சிந்தனை, அதிக பேசும் மனிதர்கள் 

·         பலவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமை 

·         குப்புசாமி பணக்காரனாகி விட்டால் தான் பணக்காரனாகியதாய் நினைப்பு 

·         பேச்சில் , புகழ்ச்சியில் திருப்தி மற்றும் சந்தோசப்படும் மனிதர்கள் 

·         தன்னால் முடியாது என்று கொள்ளும் மனப்பான்மை 

·         யார் ஆண்டாலும் கவலை இல்லாத மனப்பாங்கு

·         மாயையில் மயங்கும் மனிதர்கள் 

·         சில ஆண்டுகளில் மற்ற நாடுகள் அடைந்த விழிப்புணர்வு இங்கில்லாமல் போனது 

·         தேவையில்லாதவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது 

·         அரசு பதவியில் இருப்பவர்கள் மக்கள் பணத்தில் அதிகமாக அனுபவிப்பது 

·         வறட்டு மற்றும் போலி கௌரவத்திற்கு அதிக மதிப்பளிப்பது 

·         பழைய நடைமுறைகளை விடாப்பிடியுடன் பின்பற்றுவது   

·         எதையும் பின்விளைவை ஆராயாமல் அலட்சியமாய் செய்யும் செயல்கள் 

·         பிரச்னைகளை தள்ளிப் போடுதல், எதிர்கொள்ள திறமை இல்லாமை, ஒரு பிரச்னை கையாளும் வேறு ஒரு புது பிரச்னை உண்டாகுதல்  

·         பல கட்சிகள் சாதி பிரச்னை 

·         கட்டுப்படுத்த முடியாத உள்நாட்டு விலைவாசி ஏற்றம் 

·         பெருகிவரும் மக்கள் தொகை பிறந்தவர்களுக்கு அனைவருக்கும் கிடைக்காத கல்வி வசதி  

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&