Pages

Sunday 8 February 2015

YOU WILL BE THE FIRST! - உனக்கே முதலிடம்!

உனக்கே முதலிடம்!
YOU WILL BE THE FIRST!
 
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

சோம்பேறிகளுக்கு நடுவில் கடின உழைப்பாளிக்கு முதலிடம்
முட்டாள்களுக்கு நடுவில் அறிவாளிக்கு முதலிடம்

ஏழைகளுக்கு நடுவில் பணக்காரனுக்கு முதலிடம்
வாடிக்கையாளர்களுக்கு நடுவில் வியபாரிக்கு முதலிடம்

பேசுபவர்களுக்கு நடுவில் செயலுக்கு முதலிடம்
மக்களுக்கு நடுவில் தலைவனுக்கு முதலிடம்
                             
தூங்குபவனுக்கு நடுவில் விழிப்பவனுக்கு முதலிடம்
உறவுக்கு நடுவில் நட்புக்கு முதலிடம்

பாமரர்களுக்கு நடுவில் படிப்பாளிக்கு முதலிடம்
சுயநலங்களுக்கு நடுவில் பொதுசேவைக்கு முதலிடம்

கடுஞ்சொற்களுக்கு நடுவில் இன்சொல்லுக்கு முதலிடம்
வாஙகுபவகளுக்கு நடுவில் கொடுப்பவனுக்கு முதலிடம்
                                 
குடிகாரர்களுக்கு நடுவில் ஒழுக்க சீலனுக்கு முதலிடம்
செலவாளிகளுக்கு நடுவில் சேமிப்பவனுக்கு முதலிடம்

அவநம்பிக்கைக்கு நடுவில் நம்பிக்கைக்கு முதலிடம்
எதிர்மறைகளுக்கு நடுவில் நேர்மறைக்கு முதலிடம்

வெறுப்புகளுக்கு நடுவில் அன்புக்கு முதலிடம்
அழுகைகளுக்கு நடுவில் சிரிப்புக்கு முதலிடம்

நரகங்ளுக்கு நடுவில் சொர்க்கத்திற்கு முதலிடம்
முட்களுக்கு நடுவில் பூவுக்கு முதலிடம்

கிளிப்பிள்ளைகளுக்கு நடுவில் திறமைக்கு முதலிடம்
தீமைகளுக்கு நடுவில் நன்மைக்கு முதலிடம்
                      
கேளிக்கைக்கு நடுவில் கடமைக்கு முதலிடம்
தறிகெட்டு ஓடுபவரகளுக்கு நடுவில் லட்சியவாதிக்கு முதலிடம்

தோல்விகளுக்கு நடுவில் வெற்றிக்கு முதலிடம்
வானத்திற்கு நடுவில் சூரியனுக்கு முதலிடம்
                   
கடல்களுக்கு நடுவில் தீவுக்கு முதலிடம்
நிலங்களுக்கு நடுவில் நகரங்களுக்கு முதலிடம்

நகரங்களுக்கு நடுவில் வாழ்க்கைக்கு முதலிடம்
வாழ்க்கைகளுக்கு நடுவில் மனிதனுக்கு முதலிடம்

மனிதர்களுக்கு நடுவில் உனக்கு முதலிடம்
உனக்கு நடுவில் இதயத்திற்கு முதலிடம்


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

OTHER LETTER NEED IN TAMIL - தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

தமிழில் ஒலிக்கலப்பு வளர்ச்சியா? வீழ்ச்சியா?
விழிப்புணர்வு கட்டுரை
மதுரை கங்காதரன்
 

தமிழில் கட்டாயம் கூடாதது மொழிக்கலப்பு! ஆனால் ஒலிக்கலப்பு அவசியமா? அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது வீழ்ச்சிக்கு வித்திடுமா? என்கிற கேள்விக்கு இது வரை சரியான பதில் கிடைத்துள்ளதா? என்றால் அது சற்று யோசிக்கச் செய்யும். ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை கண்மூடித்தனமாக சாடுகின்றனர் அல்லது அதை எதிர்க்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன ? எப்படி நினைத்தாலும் இக்கட்டுரையை படித்த பிறகு முடிவுக்கு வந்தால் நல்லது என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் ஒலிக்கு கட்டுப்பட்டது. தமிழ் சொற்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் உயிரோடு ஒலிப்பவை. தமிழ் சொற்களில் உள்ள எழுத்து எதுவும் செத்த எழுத்து கிடையாது. ஆகையால் தமிழில் எந்த மொழியில் மொழி பெயர்த்து எழுதினாலும் சரி, அதன் உச்சரிப்பில் எவ்வித வேறுபாடும் இருக்கக் கூடாது. ஏன்? தமிழில் ஒரு எழுத்தை சற்று நீட்டி உச்சரித்தால் நெடில் எழுத்தாகி எழுத்தும் பொருளும் மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.
 
தமிழ்மொழியில் மொத்தம் இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் இருந்தாலும் பிற மொழியிலிருந்து சரியான படி மொழிபெயர்ப்பு செய்வதற்கு கட்டாயம் சில ஒலிகள், தமிழில் இல்லாத சில புதிய தமிழெழுத்துக்கள் தேவைபடுகின்றது. அதற்காகவே சில கிரந்த மொழி எழுத்துக்கள் தமிழில் தோன்றின என்று சொன்னால் அதை மறுத்து பேச யாராலும் முடியாது. அந்த எழுத்துக்களே ஜ, , , , க்ஷ, ஸ்ரீ என்பதாகும் என்று நாம் நன்கு அறிந்ததே!

அதாவது கிரந்த எழுத்துக்கள் வடமொழி இலக்கியத்தை ஒலிமாறாமல் மொழி பெயர்ப்புக்கும் வடமொழி பெயர்களை தமிழில் வைப்பதற்கும் மிகவும் அவசியமேற்பட்டது என்றே சொல்ல வேண்டும். என்ன தான் அவைகள் கிரந்த எழுத்துக்களாக இருந்தாலும் அதுவும் புதிய தமிழ் எழுத்துக்கள் என்றே ஏற்றுக் கொள்ளுதல் அவசியமாகிறது. உதாரணமாக வட மொழியில் 'கிருஷ்ணன்' என்ற பெயரை தமிழில் 'கிருட்டிணன்' என்று மாற்றுவதாக வைத்துக் கொள்வோம். அதை தமிழ் தெரிந்த ஆங்கிலேயர் ஒருவர் அப்பெயரை ஆங்கிலத்தில் KRISHNAN என்று எழுதுவாரா? அல்லது KRITTINAN என்று எழுதுவாரா? மேலும் தமிழ் ஆர்வலர்களுக்கு நன்கு தெரியும் அதாவது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று! அப்படியானால் மேலே சொன்ன இரு பெயர்களும் ஒரே பொருள் உடையதா ? என்று சொல்ல முடியுமா?

அவ்வளவு ஏன்? 'ஹிந்தி' எனபதை 'இந்தி' என்று என்று எழுதுகிறார்கள்! ஒன்றை மட்டும் நன்கு தெரிந்து கொள்ளுதல் அவசியம். வட மொழியில் உச்சரிப்பில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் எழுத்தும் அதன் பொருளும் சுத்தமாக மாறிப் போகும். வட மொழியில் க, , , , என்கிற ஐந்து எழுத்துக்களுக்கு சிறு உச்சரிப்போடு கூடுதலாக மூன்று எழுத்துக்கள் உண்டு. அதாவது ஒவ்வொரு எழுத்துக்களுக்கு நான்கு எழுத்துக்கள் உணடு. '' வை எடுத்துக் கொண்டால் நான்கு '' உண்டு. அது போல் மற்ற நான்கு எழுத்துக்கள் அடங்கும்.
 
சமீபத்தில் ஹிந்தி மொழியிலிருந்து 'காந்தி மஹான்' என்று தமிழில் மொழி பெயர்த்து எழுதினேன். அதை தமிழ் ஆர்வலர் ஒருவர் 'காந்தி மகான்' என்று திருத்தி எழுதினார். அதை ஆங்கிலத்தில் GANDHI MAKAN ( இதில் நெடில் 'காஎன்பதை ஆங்கிலத்தில் குறில் '' ஆகவே எழுதி வருகின்றனர்) என்று எழுதினார். அதிலிருந்து வேறொருவர் அதே பெயரை தமிழில் 'காந்தி மகன்' என்று எழுத அப்போது ஒரு பெரிய குழப்பமே ஏற்பட்டது போங்கள்! அதாவது 'மஹான்' என்பது 'மகன்' ஆகிவிட்டது. இப்போது சொல்லுங்கள் மகானும் மகனும் இரண்டும் ஒன்றா? இது போல் பலவற்றை சொல்லலாம். அதாவது எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தும் பெயரும் பொருளும் மாறக்கூடாதல்லவா! இவற்றையெல்லாம் எதற்கெனில் நடைமுறையில் இத்தகைய சிக்கல் இருக்கிறது என்று எடுத்துக் காட்டுவதேயாகும்.

தமிழ் ஆர்வலர்கள் தொல்காப்பியம் காட்டும் வழியில் உள்ளபடியே தழிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று சற்றுப் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றால் இருக்கலாமே தவிர அவர்கள் தமிழின் காலர்களாக இருக்க முடியுமா? என்கிற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆதியிலிருந்து தமிழ் எழுத்துக்கள் காலத்திற்குத் தகுந்தாற் போல் மாறி வருவதே ஆகும். அதில் பெரியார் சீர்திருத்த எழுத்துகளும் கிரந்த எழுத்தும் அடங்கும்.

தமிழ்மொழியில் வடமொழி எழுத்துக்கள் சேர்த்ததன் காரணம் வடமொழி அல்லது பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கும்போது அதில் வரும் பெயரும் பொருளும் உச்சரிப்பில் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது என்கிற நோக்கமே இருந்திருக்குமேயன்றி தமிழ் மொழிக்கு களங்கமோ அல்லது வட மொழி எழுத்துக்கள் தமிழில் கலக்கும் எண்ணம் கட்டாயம் இருந்திருக்க முடியாது என்பதே எண்ணத் தோன்றுகின்றது. பொதுவாக பெயர்கள் ஒரு மொழியிலிருந்து மற்ற பிற மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது உச்சரிப்பில் வித்தியாசமோ அல்லது அந்த பெயருக்கு சம்பந்தம் இல்லாத அல்லது சற்றே மாறுபட்டு எழுதுவது தமிழில் மட்டும் தான் இருக்கும்.

அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் சிலவற்றை தருகிறேன். மீதமிருப்பதை நீங்களே அறிவீர்கள். அதாவது 'இங்க்லிஷ்' என்பதை 'ஆங்கிலம்' என்று தமிழில் சொல்கிறோம். ஏனென்றால் ஆங்கிலேயர் ஆண்டதால் அப்படி சொல்கிறோம் என்கிறார்கள். ஸ்ரீலங்கா- இலங்கை, ஈரோப் - ஐரோப்பா, ஜீஸ்ஸ் - ஏசு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது ஒருவரின் பெயரில், ஊர், நாட்டின் பெயரில் மாற்றமோ உச்சரிப்பு மாற்றமோ இருக்கலாமா? ஏனெனில் தமிழ் மொழியில் ஒவ்வொரு எழுத்தும் தனிப்பட்ட உச்சரிப்பில் பொருள் கலந்து உள்ளது.

உதாரணமாக ஜவஹர்லால் நெஹ்ரு என்பதை யார் தயவு இல்லாமல் எந்த மொழியிலும் மாற்றம் செய்யலாம். ஆனால் அதையே தமிழில் 'சவகர்லால் நேரு' என்று எழுதியதை பிற மொழிக்கு மாற்றம் செய்ய வேண்டுமானால் கூடுதலாக பிறரின் உதவி தேவைபடும். மேலும் ஜவஹர் = சவகர் சரியாகுமா? இதில் கூத்தென் னவென்றால் அப்படி எழுதி ஏதோ தமிழை வளர்த்துவிட்டதாகவும் தமிழில் சாதனை படைத்து விட்டதாகவும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். இப்படி பெயரிலே குழப்பம் இருந்தால் தமிழில் மொழிமாற்றம் செய்த நூல்களை மீண்டும் வேறு மொழியில் மொழிமாற்றம் செய்தால் சரியாக இருக்குமா? ஆகையால் தான் என்னவோ அப்படி மொழிமாற்றம் செய்தது மிக அரிதாகவே இருக்கின்றது.  
 
அதாவது பிறமொழியில் இருக்கும் ஒரு சில பெயர்களை தமிழில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் எழுதினால் உண்மையான பெயரின் பிரதிபலிப்பு நூறு சதவீதம் இருக்குமா? அப்படி இல்லாததால் வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது உண்மையான பெயர் மறைந்து அவ்வாறு எழுதிய பெயரே நிலைத்திடும் நிலைமை ஏற்படும். அத்தகைய மாற்றத்தின் அடையாளம் ஏதுமில்லாததால் பிறமொழிப் பெயர் என்று தெரியாமல் போய்விடுகின்றது. 'அண்டோனி' என்ற பெயரை 'அந்தோனி' என்று தமிழில் எழுதினால் அது ஆங்கில மொழியிலிருந்து வந்த பெயரா? அல்லது தமிழில் இருக்கின்ற பெயரா? என்கிற குழப்பமே மிஞ்சும்.

இப்பொழுதெல்லாம் பிரபல பாடகர்கள், நடிகர்சள், அரசியல்வாதிகள் மற்றும் பல தலைவர்கள் தங்களுக்குத் தெரியாத பிறமொழிகளில் பேச, படிக்க, பாடுவதானால் அம்மொழி வார்த்தைகளை அப்படியே தங்கள் தாய்மொழியில் எழுதி பயன்படுத்தி வருகின்றனர். அப்போது கட்டாயம் சரியான உச்சரிப்பில் இருக்கவேண்டும். தமிழில் எழுதிய பெயர்களான 'ஆல்பர்டு சுவைச்சர்' மற்றும் 'இலியோ தால்சுதாய்' ஆங்கிலத்தில் அப்படியே உச்சரித்தால் இயற்கையாக, நன்றாக இருக்குமா?   

தமிழ் ஆர்வலர்கள் ஒன்றை மட்டும் உணரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியும் கணினிக்குள், வலைதளத்தில் பரந்து விரிந்து வர ஆரம்பித்து வருகின்றது. இந்த கணினியில் உங்கள் பெயரில் ஒரு எழுத்து மாறுபட்டாலோ அல்லது ஒரு புள்ளி குறைந்தாலோ ஏன் ஒரு வெற்று இடம் விட்டாலோ அல்லது ஒரு புள்ளி தள்ளி வைத்தாலோ கணினி என்னமோ உங்கள் பெரியல் மிகப்பெரிய வித்தியாசம் கண்டுவிட்டதுபோல் அந்த பெயர் உங்களது இல்லவே இல்லை என்று சாதிக்கும். அது கொடுப்பதுவே இறுதி தீர்ப்பு. எந்த நீதி மன்றத்திலும் உங்கள் வாக்கு எடுபடாது.

அதனால் கடவுச்சீட்டு (பாஸ்போட்) , காப்பீடு (இன்ஸூரன்ஸ்), வங்கி (பேங்க்), அஞ்சல் துறை (போஸ்ட் ஆபீஸ்) , பதிவுத்துறை (ரிஜிஸ்டர் ஆபீஸ்) , வேலைவாய்ப்புத்துறை (எம்பிளாய்மென்ட்), சாதி (கம்மினியுடி), பிறப்பு, இறப்பு (பெர்த் , டெத்) போன்றவற்றில் உங்கள் பெயர் சற்று இசகு பிசகாக மாறி இருந்தால் அவ்வளவு தான்! அதனால் உங்களுக்கு உன்டாகும் மன உலைச்சலை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. ஆகவே உங்கள் பெயரில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கடைசியாக எந்த மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதானால் அந்த மொழியில் இருக்கும் பெயரையோ அல்லது பெயர்களையோ தமிழில் எழுதும் போது அம்மொழிக்கு ஏற்ற உச்சிப்புக்கு இணையாகவோ அல்லது மிகமிகக் குறைந்த வேறுபாடுள்ள உச்சரிப்பில் இருக்குமாறு எழுத வேண்டும். அதற்காக சில கிரந்த எழுத்துகளை உபயோகிக்தால் தமிழ் மொழிக்கு எந்த ஒரு குறையும் நேர்ந்து விடாது என்பது தான் எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அதேசமயத்தில் பொதுவான சொற்களை கிரந்த எழுத்திற்கு பதிலாக தமிழ் எழுத்தில் எழுதலாம். அதனால் யாருக்கும் அதிக தொந்தரவு இருக்காது.

அதாவது 'சந்தோஷம்'  ‘ஜலதோஷம்என்பதை பெயராக இல்லாதபோது 'சந்தோசம்' ‘சலதோசம்என்று எழுதலாம். அதே போல் பட்ஷி- பட்சி, ஜென்மம் - சென்மம் போன்றவாறு எழுதலாம். அவ்வாறு எழுதும்போது அதற்கு பிரத்தியேகமான அடையாளம் இருந்தால் மிகவும் நன்று.  
இப்போது சொல்லுங்கள் ! 'தமிழ்' என்ற சொல்லை ஆங்கிலத்தில் Tamil  என்று எழுதுவீர்களா? அல்லது Thamizh  என்றோ Thamil என்றோ எழுதுவீரகளா?

கூடுதல் செய்தி:
சமீப கால ஆராய்ச்சியாக ஒருவர் ஆங்கில மொழியில் பேச பேச அதன் உச்சரிப்பை கணினி உள் வாங்கிக் கொண்டு அப்படியே திரையில் எழுதுகிறது. இன்னும் எளிதாக்க ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அது வெற்றி பெற்றால் தமிழிலும் வருவதற்கு அவ்வளவு நேரமாகாது. அப்படி வரும் சமயத்தில் தமிழின் மிகத்துல்லியமான உச்சரிப்பு தேவைபடும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.


முடிவு உங்கள் கையில்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&