Sunday, 17 May 2015

அவனை ஏமாற்றிய 'வாட்ஸ் அப்' HOW HE IS CHEATED BY 'WHAT'S UP'

அவனை ஏமாற்றிய 'வாட்ஸ் அப்'
HOW HE IS CHEATED BY 'WHATS APP'
சிறு கதை
மதுரை கங்காதரன்

'எப்படியும் இந்தத் தேர்வில் நான் முதல் மதிப்பெண் எடுக்காமல் விட்டாலும் பரவாயில்லை! இப்போது முதல் ரேங்க்கில் இருக்கும் அமுதன் கட்டாயம் மீண்டும் முதல் மதிப்பெண் வாங்கவிடக் கூடாது' என்று இரண்டாம் ரேங்க் இல் இருக்கும்பாண்டியன் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டான் .  

எப்படி இதை வெற்றிகரமாய் செய்து முடிப்பது? என்று நினைக்கும் வேளையில் திடீரென்று அவனுக்குப் பொறி தட்டிற்று. அதாவது அமுதன் பரிட்சை இருந்தாலும் தினமும் அரைமணி நேரமாவது ஐ.நெட், .மெயில், ஃபேஸ் புக்,வாட்ஸ் அப் (இப்போது இது இலவசம்) போன்றவற்றில் வலம் வருவான். அதில் அதிக நேரம் செலவழிக்கும் 'வாட்ஸ் அப்' நுழையும் நேரம் பார்த்து தானும் நுழைந்து அதில்அவனைப் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து புகழ்ந்து  தள்ளிக் கொண்டிருந்தால் அதில் மயங்கி 'வாட்ஸ் அப்' யிலேயே நேரத்தைப் போக்கிடுவான். பிறகு அன்றைய படிப்பு அம்போ தான். மறுநாள் பரிட்சை 'கோவிந்தா கோவிந்தா' தான். இப்படி நினைக்கையில் பாண்டியன் மனம் ஆனந்தப்பட்டது.

நாளை முதல் முழு ஆண்டுத் தேர்வு ஆரம்பமாகிறது. இன்றைக்கு திட்டமிட்டபடி நடக்க வேண்டுமென்ற நப்பாசையில் இருந்தான். அவன் நினைப்பு வீண் போகவில்லை. அன்று அமுதன் வாட்ஸ் அப் இல் நுழைய பாண்டியனும் நுழைந்து இரவு வரை பொழுதைக் கழித்தான். பாண்டியனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒவ்வொரு தேர்விலும் தன் எதிரியான அமுதனைப் படிக்கவிடாமல் வாட்ஸ் அப் இல் பிடித்துக் கொண்டோம் என்று!

இப்படியாக தேர்வுகள் முடிந்தது. முடிவும் வந்தது. பாண்டியனின் மதிப்பெண் வெகுவாகக் குறைந்ததென்று அவன் ஆசிரியர் கோபம் கொண்டார். ஆனால் உள்ளுக்குள் சிரித்தான். எனக்குள்ள கதி தானஅமுதனுக்கும் வரும் என்று நம்பினான்.
"அடுத்தது அமுதனின் மதிப்பெண்" என்று சில வினாடிகள் மௌனம் காக்க அந்த இடம் அமைதியானது. ஆசிரியர் என்றைக்குமில்லாமல் மிக மகிழ்ச்சியாக " அமுதன் அனைத்துப் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றதோடு மூன்று பாடத்தில் நூறு சதவீதம் எடுத்து வழக்கம் போல் அவன் தான் முதல் ரேங்க்" என்று அறிவித்ததோடு அவனை மிஞ்ச ஒருவரும் கிடையாது என்று பாராட்டினார். இதைத் கேட்ட பாண்டியன் அதிர்ச்சியடைந்தான்.

தன் சந்தேகத்தை அவனிடமே கேட்டான் பாண்டியன். "அமுதா! தேர்வுகளின் போது தினமும் நீ என்னுடன் வாட்ஸ் அப் இல் பொழுதைக் கழித்தாய். இருந்தாலும் நீ எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாய் என்று சிறுபிள்ளைத்தனமாய் கேட்டான்.

".... அதுவா! தினமும் உன்னுடன் 'வாட்ஸ் அப்' இல் என் பெயரில் தொடர்பு கொண்டது என் தூரத்து உறவுக்காரப் பையன். அவனுக்குப் பொழுது போகாததால் நான் உன்னுடன் சிறிது நேரம்  வாட்ஸ் அப் இல் இருந்த பின் தொடர்ந்து அவன் தான் தினமும் உன்னோடு பொதைக் கழித்தான். அதனால் அவனுடைய தொல்லையில்லாமல் நான் படித்தேன். வழக்க்தை விட அதிக மதிப்பெண்கள் பெற்றேன். அதற்கு மறைமுகமாக நீ உதவி செய்ததற்கு நன்றி" என்று பதில் கூற பாண்டியனுக்குத் தலை சுற்றியது. அவனுக்கு 'கெடுவான்! கேடு நினைப்பான்" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது!
********************************************************************************************  தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் - How Tamil Language spread worldwide?


தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்
How Tamil Language spread worldwide? 
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

ஆதியில் பிறந்த தமிழ் மொழிக்கு
ஆபத்து வந்ததே இந்த நாளில்

பாதியில் முளைத்த மொழிகளுக்கு
வீதிகளில் தேரோட்ட ஊர்வலமா?

வேள்வித் தீயாய் விளங்கிய தமிழை
கேள்வி கேட்க நாதியில்லையா?

மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மாறாது மணம் வீசத் தான்செய்யும்

கொஞ்ச நேரம் சூட்டி மகிழலாம்
வஞ்சக வலையில் சிக்கலாமா?

செம்மொழி தமிழுக்கு வந்ததே சேதாரம் 
'சிம்' மொழியாய் சுருங்கிவிட்டதே காதோரம் 

எதையும் பொசுக்கும் அக்னி குஞ்சு
வதைபடும் காட்சி கண்டு சகிக்கலாமா?

கள்ளிப் பாலை தமிழ்பாலில் கலக்கலாமா?
கள்ளம் கபடமில்லாத் தமிழை நஞ்சாக்கலாமா?

ஆரம்பப் பள்ளி முதல் இறுதிப் பள்ளி வரை
உயிர் மூச்சாய் தமிழ் காக்கபட வேண்டும்

தமிழுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்
தமிழ் படைப்பு போட்டிகள் நடத்திட வேண்டும்

புதிய படைப்போடு தமிழ் நின்று விடாது
பட்டித்தொட்டிகளில் ஒலிக்க வேண்டும்

தனித்தமிழ் தரும் ஊடகங்களை போற்றிட வேண்டும்
கனிவான கலைச்சொற்கள் அகராதி தந்திட வேண்டும்

எளிய தமிழ் கணினி விசைப்பலகை வேண்டும்
எல்லோரும் தமிழை எளிதாய் கற்க வேண்டும்

கணினியில் தனித் தமிழை வளர்க்க வேண்டும்
வலைதளத்தில் தமிழ் விரிந்து பரவ வேண்டும்

நடமாடும் ஊர்திகளில் தமிழ் பதிக்க வேண்டும்
நம் தாய் மொழி தமிழென  உணரவேண்டும்

செம்மொழி தமிழ் மாநாடு நடத்திட வேண்டும்
எம் மொழி தமிழென்று முழங்கிட வேண்டும்

முகாரி ராகம் பாடும் தமிழ் மொழிக்கு
பூபாள ராகம் பாடச் செய்திட வேண்டும்

படைப்போம் தமிழில்

பரப்புவோம் தமிழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழாகவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

உருவத்தை மீறிய உயர்ந்த கற்பனைகள்
கல்வித் தகுதியை மீறிய கவிதை படைப்புகள்
வயதிற்கும் மீறிய இளமைத் துடிப்புகள்
செயலுக்கும் மீறிய பொது நலப்பணிகள்

இவரின் 'சின்ன சின்ன பூக்கள்' கவிதைகள் தமிழில்
அன்று பெரிய பெரிய சாதனைகள் செய்தது
இன்றோ 'சிரிக்கின்ற பூக்கள்' ஆங்கிலத்தில்
தமிழ் மொழியையும் தாண்டித் தந்த அற்புதம்

சாதரணமாய் வாழ்வது தான் வாழ்கையா?
வாழ்ந்ததற்கு அடையாளம் இருக்க வேண்டாமா?
சாதாரணமாய் அன்று இருந்தவர்
கவிதைகளால் இன்று உதாரணமாய் வாழ்பவர்.

தங்கள் பெருமை புகழைப் பறைசாற்ற
தலைவர்களுக்கு சிலை வைக்கிறார்கள்
இவரோ கவிதை நூல்களை வெளியிட்டு
நம்மை சிலையாக்கி விட்டாரே!

அகவை எழுபதிற்கு ஒருவிழா!
'சின்ன சின்ன பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
'சிரிக்கின்ற பூக்கள்' கவிதை நூலுக்கு ஒருவிழா!
முப்பெரும் விழாவிற்கு உரியவர் இந்த நாயகர்

ஐயா கவிபாரதி பூ. வைத்திய லிங்கம் அவர்கள்
இன்று போல் எந்நாளும் இனிதாய் வாழ்ந்து
மேலும் மேலும் புதிய நூல்களை வெளியிட வேண்டும்
அவரது முயற்சிகள் வாழ்க வாழ்கவே!

வெல்க அவரது சேவை!
ஓங்குக அவரது கவிதைப் பணி!

நன்றி, வணக்கம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%