Monday, 19 May 2014

தமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது ? புதுக்கவிதை

19.5.14 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம், மதுரை 
               அவர்களால் ஏற்பாடு செய்திருந்த 
                    ஆய்வரங்கம்  - கவியரங்கம் 
(ஒவ்வொரு மாதம் மூன்றாம் ஞாயிறு நடைபெறும் )

                
            
நிகழ்ச்சியில் நான் பாடிய புதுக்கவிதை 

                           மதுரை கங்காதரன் 


தமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது ?
 
ஒன்று அழிவததை கண்ணால் தெரிந்தால் அதைக் காப்பாற்றிவிடலாம் !  
அழிவது கண்ணுக்குகே தெரியாது போனால் அதனை காக்க முடியுமா?
 
மனிதன் அழிவை காக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள் 
அவர்களால் மனிதனின் ஆயுள்  உயர்ந்தது  ஓரளவுக்கு ! 
 
தமிழ் மொழியின் அழிவைக் காக்க அறிஞர்கள் பலர் உள்ளார் 
இருந்தும் ஏனோ தமிழ் மொழி அழிவை நோக்கி போகிறது !
 
கற்காலம் மாறி இன்று எல்லாமே கணினி மயமாகிவிட்டது 
காகிதங்களில் படிப்பது குறைந்து கணினியில் படிக்கும் காலம்   
 
தமிழ் மொழியில் அந்நிய மொழி கலப்பிற்கே 'ஐயகோ' என்கிறது மனம் ! 
இன்றைய இளைஞர்கள் தமிழையே ஆங்கிலத்தில் எழுதுவதை மனம் ஏற்குமா? 

கணினியில் கைபேசியில் தமிழ் வளர்க்க இலட்சியம் கொண்டேன் 
முதலாவதாக இணையதளத்தில் நுழைந்தேன் .
 
வலைதளத்தில் தமிழில் என் எண்ணங்களை நவரசத்தில் பிரதிபலித்தேன் 
எளிதில் உலக நாட்டு மக்களிடம் சென்றடைவதை கண்டு மகிழ்ந்தேன்  

இரண்டாவதாக கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது கடினமாக உணர்ந்தேன் 
எளியமுறையில் கணினியில் தமிழ் தட்டச்சு உருவாக்கினேன் 
 
தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல உலகளவில் பலரின் உதவி நாடினேன் 
ஆஸ்திரேலியாவின் கம்பன் மென்னியம் உதவிக்கரம் நீட்டியுள்ளது 

விரைவில் என் எளிய கணினி தமிழ் தட்டச்சு மலரும் 
என் கனவு வெற்றி பெற்றால் கணினியில்  கைபேசியில் தமிழ் வளரும் ! 

அதனால் தமிழ்மொழி காக்கப்படும்  ! இது உறுதி!! 
நீங்களும் என் எளிய கணினி தமிழ் தட்டச்சு பரப்பிட உதவவேண்டும் 

 

நன்றி, வணக்கம் !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 

பாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 8

ISO - வின் தரம் பற்றிய விளக்கம் 

'புதிய தென்றல்' மே 2014  மாத இதழில் 

வெளியான பகுதி.

மதுரை கங்காதரன் மேலும் ரசிக்க, படிக்க இப்போதே கடையில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.... 


நன்றி .... வணக்கம்.....

########################################

Tuesday, 13 May 2014

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள் - JOKES IN VOTE BOOTH

ஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை  சிரிப்பு வெடிகள்
 

JOKES  IN VOTE BOOTH 

மதுரை கங்காதரன் 


" என்னங்க அதிசயம் ! சில  அரசியல்வாதிங்க தேர்தல் ஆணையத்திற்கு முன் உட்கார்ந்து தர்ணா பண்றாங்க "

" அது வேற ஒண்ணுமில்லைங்க.  'நோடா'  (None Of The Above ) பொத்தான் கொடுத்தது போல 'ஆடா ' (All Of The Above)  பொத்தான் வேண்டுமாம். அதாவது 'ஆல் ஆப் தி அபோவ் ' பொத்தான் கொடுக்க வேண்டுமாம்.

" அப்படீன்னா ?"

" எனது ஓட்டு எல்லா வேட்பாளர்களுக்கும்"    

குறிப்பு : ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு  'நோடா' பொத்தான் கொடுத்தது போல் 

அனைத்து வேட்பாளர்களையும் விரும்புபவர்களுக்கு 'ஆடா ' பொத்தான் கொடுத்தால் இன்னும் ஓட்டுப்பதிவு அதிகமாக இருக்கும்.

(ஆனால் இதற்கு  வாக்களித்தவர்கள் பலரிடம் பணம் வாங்கிவிட்டவர்கள் என்று மக்கள் தவறாக நினைக்கக் கூடாது. அன்பினால் கூட இருக்கலாமல்லவா ! )   
----------------------------------------------------------------------------------------------------------

 "என்ன இருந்தாலும் ஓட்டு போடும்போது அந்த நடிகை அப்படி சொல்லியிருக்கக் கூடாது "

"அப்படி என்னாங்க சொன்னாங்க"

" எனக்கு பதிலாக என்னோட 'டூப்'க்கு அடையாள மை வைங்கன்னு சொன்னாங்க"

-------------------------------------------------------------------------------------------------------


" எனக்கு சுண்டு விரல்ல நீளமா மச்சம் இருக்கிறது தப்பா போயிடுச்சு "

"அதுகென்ன இப்போ "

"அதை பார்த்தவுடனே 'நீங்க ஏற்கனவே ஓட்டு போட்டீங்கன்னு' திருப்பி அனுப்பீட்டாங்க "

---------------------------------------------------------------------------------------------------

" எனக்காக நீங்க ஓட்டு போடுங்கன்னு 'நம்ம தலைவர்' சொன்னது தப்பா போயிடுச்சி "

"அதிலே என்னாங்க தப்புயிருக்கு"

" தலைவரோட ஓட்டு போடுறதுக்கு பல தொண்டர்கள் பூத்துக்கு வந்துட்டாங்க "

___________________________________________________________


"அந்த நடிகர் ஓட்டு போடுறதுக்கு என்ன வேணுமாம்"

" டைரக்டர் , காமெரா மேன் இருந்தாத் தான் ஓட்டுப் போடுவேன்னு ரொம்பவே அடம்பிடிக்கிறாருங்க "

----------------------------------------------------------------------------------------------------------


" இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியலே "

"எதுங்க"

நடிக்கிறதுக்கு டைரக்டர் சொல்லித் தரலாம். எப்படி ஓட்டுப் போடனும்னு கூட டைரக்டர் சொல்லித் தரணுமாம் "

----------------------------------------------------------------------------------------------------------


"அந்த கிரிக்கெட் வீரர் என்ன சொல்றாரு ?

"என்னதான் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும் ஓட்டு அடையாள மையை கிரிக்கெட் பேட்டும் , பந்தும்  விரல்லே வரையனுமாம்" 

-----------------------------------------------------------------------------------------------------------


"அந்த நடிகை ஏன் 'அடையாள மை' வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. வேற எதை வைக்கணுமாம்"   

" அடையாள மை வைப்பதற்கு பதிலாக அதே மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டச் சொல்றாங்க!"

-----------------------------------------------------------------------------------------------------------


" எனக்கு வயசு பதினெட்டு ஆகியும் என்னால ஓட்டு போட முடியல்லே "

"அடடா என்ன காரணமோ "

" ஓட்டு போடுற தேதியிலே என்னால போக முடியல்லே ! அதனாலே மறுநாள் போனேன்".

" ??????????????"

-----------------------------------------------------------------------------------------------------------


"பொதுவாக மக்கள் தான் 'இலவசம்' கேட்பாங்க. ஆனா அரசியல் கட்சிகள் எதை இலவசமாகக் கேட்கிறாங்களோ ?"  

" அவங்களுக்கு   'ஒரு ஓட்டுக்கு ஒரு ஒட்டு இலவசம் வேணும்ன்னு' கேட்கிறாங்க". 

-----------------------------------------------------------------------------------------------------------


"அவரு ஏங்க அடையாள மை வைக்கிறதுக்கு விரலைக் காட்டாம நெஞ்சை காட்டுறாரு ?

"அவரு தலைவரோட விசுவாசியாம் ! அவரை நெஞ்சிலே இருக்கிறதுக்கு அடையாளமா அங்கே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம் "

------------------------------------------------------------------------------------------------------


"எப்படி அந்த பொண்ணு ஓட்டு போடுறது இது தான் முதல்முறைன்னு ரொம்ப சரியா சொன்னீங்க !" 

"அதுவா  ஓட்டு அடையாள மை வைக்கிறதுக்கு ஒத்த விரல் காட்டாமே மெகந்தி வைக்கிறது போல முழு கையும் காட்டினாங்களே "

-------------------------------------------------------------------------------------------------------

"ஓட்டு போடும்போது வைக்கிற அடையாளக் குறி சில நாட்களுக்கு அழியவே அழியாதுன்னு என் குழந்தை கிட்டே சொன்னது தப்பா போயிடுச்சி "

"எதனாலேங்க "

"அந்த மையை பேனாவிலே நிரப்பிக் கொடுத்தாத் தான் எழுதுவேன்னு அடம்பிடிக்கிறா"

-------------------------------------------------------------------------------------------------------- 

"அவங்க என்ன தாங்க சொல்றாங்க "

" தன்னோட  தலைவருக்கு 'பச்சை' நிறம் தான் அதிர்ஷ்டமாம்"

"அதனாலே என்ன இப்போ "

" பச்சை நிறத்திலே தான் அடையாள மை வைக்க வேண்டுமாம்"

-------------------------------------------------------------------------------------------------------