Pages

Monday 21 December 2015

HAPPY NEW YEAR TO ALL OF YOU – ஏற்றம் (ஏறுமுகம்) தரும் 2016

HAPPY NEW YEAR TO ALL OF YOU –
உங்கள் வாழ்வில் ஏற்றம் (ஏறுமுகம்) தரும்
 2016 புத்தாண்டு

அனைவருக்கும் எனது 2016 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஒன்றாக ஒற்றுமையுடன் வாழும் வாழ்க்கை
இரு கைகள் உழைக்கும் கொடுக்கவும் செய்யும்
முக்கனிகளின் இனிமை என்றும் நிலவும்
நான்கு திசைகளில் உங்கள் புகழ் பரவும்

ஐம்பொன் மகிமை உங்கள் வாழ்வில் கிடைக்கும்
அறுசுவை உண்ணும் பாக்கியம் என்றும் கிட்டும்
ஏழு சுரங்கள் இன்பமாய் காதில் ஒலிக்கும்
எட்டு மணிநேரம் உழைக்கும் பலம் இருக்கும்

நவரத்தினங்கள் குவியும் வாய்ப்பு கிடைக்கும்
பத்துமாதம் பெற்றவர்களின் மனம் குளிரச் செய்யும்
11போல் வளமும் நிலையாக சமமாக அமையும்
பன்னிரண்டு மாதமும் வாழ்வு இனிதாக அமையும்

டீன் ஏஜ் போல் என்றும் இளமை தொடரட்டும்
ஈரேழு உலகம் உங்கள் வாழ்க்கை போற்றும்
சஷ்டியின் பலன் ஏறுமுகம் கொடுக்கும்
பதினாறு செல்வம் பெற்று பெருவாழ்வு அருளும்.

நாள்தோறும் நல்ல விசயங்கள் நடக்கும்
என்னாளும் பொன்னாளாக விளங்கும்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Wednesday 9 December 2015

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் பேச தடுமாறும் தமிழர்களின் நாவில்
தமிழை பிறமொழி சொல் கலவாமல்
சிங்கமாக நின்று தமிழ் பரப்பி
மங்காத பெருமையினை தமிழ்த்தாயே தருவாயாக!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை ?

புதுக்கவிதை கடலில் மூழ்கி
பாரதி படைத்தார் முத்தான கவிதைகள்
பதிலுக்கு சத்தான தமிழ்சொற்களால் பிறசொற்களை
பொசுக்கிடுவோம் தீப்பொறிக் கவிதைகள் படைத்து

பாதி கிணறு தாண்டினாலும் பாதாளம்
பாதி தமிழ் பேசினாலும் சேதாரம்
தனித்தமிழே தமிழனுக்கு ஆதாரம்
தவறினால் ஏறிடுமே வேதாளம்

பசுஞ்சோலை தமிழ்மொழி இருக்க
பாலைவனத்திற்கு ஆசைபடுவதா?
மழைநீராய் தமிழ் சொற்கள் இருக்க
கடல்நீருக்கு ஆசைப்படுவதா?

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால்
பிறப்பது தமிழ் மொழியாகுமோ!
அமிழ்தமுடன் நஞ்சு கலந்தால்
அமிழ்தமென பருகுவோரோ?

மணமுள்ள பூக்களில் காகிதப்பூ மணக்குமா?
மங்கலராகத்தில் அமங்கலத்தை பாடலாகுமா?
அறுசுவை தமிழிருக்க பிறசுவை சுவைக்குமா?
அருந்தவத் தமிழில் பிறமொழிச் சொற்கள் இனிக்குமா?

தமிழ் சொற்களோ முத்துக்கள்
தமிழர்களுக்கு அதுவே சொத்து
வேண்டாமே பிறமொழிக் கலப்பு
வேண்டுமே தனித்தமிழ் ஒலிப்பு!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



Wednesday 25 November 2015

Opportunity and Success - வாய்ப்பும் வெற்றியும் - Madurai Gangadharan

Opportunity and Success

Madurai Gangadharan

Opportunity lies in the midst of difficulty. Opportunity is not visible to the normal people. It needs some extraordinary skill. If you want to be successful, you must make your own opportunities. It is around you. Search it confidently you will get it. The greatest success stature is sculptured by the people who face the problem boldly and convert the problem into an opportunity. Some people become successful because they expose unusual ability and aptitude in their work or service. Successful people don’t use others. They do their work themselves which work is critical. Other people utilize the successful people because of their talent.

Failure is nothing but a lesson. It is nothing but the first step to do something better. Some simple words that you have to remember always are No confident No success, No dreams No action, No money No life, No work No salary….

Trying too hard is nothing but fear. If you overcome the fear with confident and peace of mind then your winning is reserved. Real success does not come from doing easy work. It comes from the achievement of a difficult assignment that shows your best.  

You can build up success from every failure. Obstacle and failure are two stepping stones to your success. No other elements can do so much for you, if you are willing to study them and make them work for you. Aiming success is initial step. Planning for success is middle step. Action for success is final step. Automatically success come you.    


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வாய்ப்பும் வெற்றியும்
விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 

'சிரமம்' நடுவே தான் வாய்ப்பு அமைந்துள்ளது.சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பு புலப்படுவதில்லை. அதற்கு சில அசாதாரமான திறமை தேவைப்படுகிறது. நீங்கள் வெற்றி பெற விரும்பினால் அதற்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவும்  உங்களைச் சுற்றி இருக்கின்றது. தன்னம்பிக்கையோடு தேடுங்கள். கட்டாயம் கிடைக்கும். யார் பிரச்சனைகளை வலிமையுடன் எதிர் கொண்டு அதை வாய்ப்பாக மாற்றும் மனிதன் தான் வெற்றி என்னும் சிலையைச் செதுக்குகிறார்கள்.  சிலர் வெற்றி மனிதர்களாக விளங்கும் காரணம், அவர்கள் தங்களின் அறிவும், திறமையும் வெளிப்படுத்துவதால் கிடைத்தது. வெற்றி மனிதர்கள் பிறரை பயன்படுத்துவதில்லை. முக்கியமான வேலைகளை அவர்களே செய்துகொள்வார்கள். மற்றவர்கள் தான் வெற்றி மனிதர்களின் அறிவை உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.

தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பாரமாக நினைக்கக் கூடாது. அது தான் வெற்றிக்கான முதல் படி என்று நினைக்க வேண்டும். சில எளிய வரிகள் எப்போதும் மறக்காமல் இருக்கவேண்டும். அவைகள், தன்னம்பிக்கை இல்லையேல் வெற்றி இல்லை, கனவு இல்லையேல் செயல் இல்லை. பணமில்லையேல் வாழ்க்கை இல்லை, வேலையில்லையேல் சம்பளம் இல்லைபிறப்பு இல்லையேல் வாழ்க்கை இல்லை போன்றவைகள்

உங்கள் முயற்சியில் கஷ்டம் இருந்தால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் அந்த பயத்தை நம்பிக்கை மற்றும் அமைதியோடு எதிர்கொண்டால் உங்கள் வெற்றி உறுதி தான். உண்மையான வெற்றி சாதாரண வேலை செய்வதில் கிடைக்காது. அது உங்கள் சிறப்பான செயலால் கடினமான வேலையை எளிமையாக செய்வதில் கிடைக்கின்றது.

உங்கள் வெற்றி என்னும் கட்டிடம் தோல்வியினால் கட்டப்படுகின்றது. தடையும், தோல்வியும் வெற்றிக்கான இரு படிகள். வேறு எதுவும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்க முடியாது. அந்த அனுபவங்கள் நீங்கள் பிரயாசையுடன் ஏற்றுக்கொண்டால் அதுவே உங்களுக்கு உதவும். வெற்றியை குறிக்கோளாகக் கொள்வது முதல் படி. திட்டமிடுவது நடு படி. வெற்றிக்கான செயல் கடைசி படி. பிறகு தானாக வெற்றி உங்களிடம் அடைக்கலம் ஆகும்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^