Pages

Monday 31 December 2018

எல்லோருக்கும் புத்தாண்டு 2019 நல்வாழ்த்துக்கள்




எல்லோருக்கும் புத்தாண்டு 2019 நல்வாழ்த்துக்கள் ....

மதுரை கங்காதரன்....

..........


30.12.18 நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே - மா.க.பே - மதுரை


நெகிழிகளால் நிலம்கெடுமே
கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே
கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - மதுரை 
மதுரை கங்காதரன் 

எங்கும் துணிஎதிலும் துணி மாறி
எங்கும் நெகிழிஎதிலும் நெகிழிஆனது
எங்கும்தமிழ்எதிலும்தமிழ் மாறி
எங்கேதமிழ்எதிலேதமிழ்ஆனது.

மனிதஇனத்தைஅழிக்குமே நெகிழிஅவதாரம்
மக்கும்இனம் காக்குமேமனித வாழ்வாதாரம்
தமிழ்மொழியைஅழிக்குமே கிரந்தெழுத்துகள்
தமிழ்இனத்தைக் காக்குமேதனித்தமிழ் எழுத்துகள்

அபாயமணி நெகிழிக்குமட்டுமல்லாது
அந்நியமொழிகலந்ததமிழுக்கும் கூடவே
நெகிழிஅழிக்கச்சட்டம்இயற்றும்அரசு
நச்சுகலப்பைத்தடுத்தால்தமிழுக்குப்பரிசு.

புதைத்தால்மடலாகும் பூமி
எரித்தால்நஞ்சாகும் காற்று
கலந்தால் மாசாகும்கடல்
உண்டால் பிணியாகும்உடல்.

சிங்கநடைப் போட்டத்தனித்தமிழ்
அசிங்கமானது கிரந்தஎழுத்துகளாலே
வெகுளித்தமிழர்களால்வந்த வினை
வெட்கிக் குனியும்தமிழின் நிலை.












































நன்றி : திரு இரா.இரவி மற்றும் திரு கார்த்திகேயன் அவர்கள் ....  

மேலும் மின்படங்கள் மற்றும் விவரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் 
https://maamaduraikavingyarperavai.blogspot.com/2018/12/301218.html
நன்றி 

HOUSTON UNIVERSITY - TAMIL CHAIR - NEED 42 CRORES - ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 42 கோடி


HOUSTON UNIVERSITY - TAMIL CHAIR -
 NEED 42 CRORES -
 ஹூஸ்டன் தமிழ் இருக்கை - 42 கோடி  


நிகழ்ச்சியின் தொகுப்பு - மின்படங்கள் - மின்சுருள் 

#ஹூஸ்டன்தமிழ்இருக்கை# அமைப்போம்
கலந்தாய்வு கூட்டம் 29.12.2018
************************************************

இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புலம் வ.சுப.மாணிக்கனார் அரங்கில் #பேரா.#கு.#ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது-, இதில் #நானும் கலந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது...

இதில் அமெரிக்க நாசா விஞ்ஞானி முனைவர் #.#கணேசன் அவர்கள் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்...

நிகழ்ச்சியில் தமிழிசை ஆய்வாளர் திரு.#மம்மது அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்....

நிகழ்ச்சியில் ஊஸ்டன் தமிழ் இருக்கைக்கு அதிமாக பொருளுதவி நல்கிய திரு. #காலடுவேல் , ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய அடித்தளம் இட்ட அய்யா ஞானசம்பந்தன், மாமதுரை கவிஞர் பேரவை தலைவர் அய்யா #வீரபாண்டியத்தென்னவன், மற்றும் கவிஞர்கள், தமிழறிஞர்கள் பலர்  கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் சிவகங்கை மவுண்ட் லிடெரா பள்ளி தாளாளர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள ₹50000/- வழங்கினார்...

இன்னும் பலரும் தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

நிகழ்ச்சியில்  மதுரை காமராசர் பல்கலைத்  தமிழியற்புலத்தின் தலைவர் திரு.போ .#சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரை நல்கினார்
இச்சிறப்பு வாய்ந்த தொடக்கம் வெற்றி பெற தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கைகொடுத்தல் நலம்...

#கனவு #மெய்ப்படவேண்டும்...
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்குவோம் .

"இல்லையெனும் சொல் நீக்கி
இயன்றவரை பொருள்வழங்கி...
துள்ளித் தமிழ்வளர...
துணை நிற்போம் வா தமிழா ....

நன்றி 

                           அன்புத்தமிழன்
                      கவிஞர் சித்தார்த்பாண்டியன்
                      மாமதுரைக் கவிஞர் பேரவை








































































































































நன்றி