Pages

Friday 7 April 2023

26.3.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 9 - வாழும் தமிழே வரலாறு கூறும்!

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம்நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் ,கங்காதரன் ,முனைவர் வரதராசன்,முருகுபாரதி குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன் இதயத்துல்லா,வீரபாகு ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,நா .அனுராதா ,சாந்தி திருநாவுக்கரசு,உள்ளிட்ட பலர் பாடினார்கள்

மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில்மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம். நாள் : 26.3.2023

           தலைப்பு : வாழும் தமிழே வரலாறு கூறும்!

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில்கவிஞர்கள் முனைவர் இரா.வரதராசன்இரா.கல்யாணசுந்தரம், இரா. இரவிபாவலர் குறளடியான்,   கு.கி.கங்காதரன்ச.லிங்கம்மாள்அஞ்சூரியா.க.செயராமன்பெரி.கரு.சம. சமயக்கண்ணுசங்கர்,  முனியாண்டி,   கோ.சங்கரநாராயணன்மு.இதயத்துல்லா.அழகையாபுலவர்.முருகுபாரதிசாந்தி திருநாவுக்கரசு,   மா.வீரபாகு,  ஆகியோர் வாழும் தமிழே வரலாறு கூறும்! என்ற தலைப்பில் கவிதை பாடினார்கள்

மின்படங்கள்: இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.






                            வளரும் தமிழே வரலாறு கூறும்
                                    - கவிஞர் இரா. இரவி 

கீழடி வரலாறு நம் தமிழின் வரலாறு
கீழ்அடியில் கிடைத்ததில் தமிழ் எழுத்துக்கள்!

எழுத்தறிவோடு வாழ்ந்தவர்கள் தமிழ்க்குடிமக்கள்
எந்த நாகரீகத்திற்கும் முந்தைய நாகரீகம்!

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
உலகம் உணர்ந்தது தமிழன் தான் உணரவில்லை!

உலகமொழிகளின் மூலம் நமது தமிழ்மொழி
உலகமொழிகள் அனைத்திலும் உள்ளது தமிழ்!

ஆங்கிலம் தொடங்கி அத்தனை மொழியிலும் தமிழ்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை!

உலகின் முதல்மொழிக்குச் சொந்தக்காரன் தமிழன்
உலகம் வியந்து பாராட்டும் மொழி தமிழ்மொழி!

நீண்ட நெடிய வரலாறு படைத்த மொழி தமிழ்
நாம் அனைவரும் தமிழ் வளர்க்க வேண்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதிடுவோம்
தமிழை தமிழாகவே நாளும் பேசிட உறுதி எடுப்போம்!

பிறமொழி கலப்பை உடன் நிறுத்திடுவோம்
பண்டைத்தமிழைக் காத்திட தரணியில் திரள்வோம்!

தேசப்பிதா காந்தியடிகள் விரும்பியது தமிழ்மொழி
தேசங்கள் தோறும் ஒலித்திடும் தமிழ்மொழி!

ஒப்பற்ற உயர்ந்த தனி செம்மொழி தமிழ்மொழி
ஓங்கி உரைப்போம் முதல்மொழி தமிழ்மொழி!

அழியாமல் தமிழை காப்பது நமது கடமை
அணியமாவோம் அழகுதமிழை நாளும் வளர்ப்பதற்கு!
















                    வளரும் தமிழே வரலாறு கூறும் 
                                  புதுக்கவிதை
                               கு.கி.கங்காதரன்

எல்லாச் சம்பவங்கள் வரலாற்றில் பதியாது 
எல்லா வரலாறும் மக்களிடையே பேசாது 
என்றோ தொடங்கியது தமிழின் வரலாறு 
இன்றும் தொடர்கிறது தமிழின் வரலாறு.

ஆதியில் அவதரித்த அமுதமான மொழி 
அகிலம் போற்றும் பண்புள்ள பண்பாடு 
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம்  
அனைவரையும் சமநோக்கி அணுகும் நாகரிகம்   

கற்காலம் தொடங்கி வளர்கின்ற தமிழ்
கணினிகாலம் என்று தொடர்ந்திடும் தமிழ்
இனிவரும் காலத்திலும் மிளிர்ந்திடும் தமிழ்
என்றும் தலைசிறந்து நின்றிடும் தமிழ்.

சேரசோழ பாண்டியர்கள் வளர்த்த மொழி 
சிங்கநடை போடும் கம்பீரமான மொழி 
கப்பலோடு கடல்கடந்து பயணித்த மொழி 
கன்னித்தமிழாய் காட்சி தரும் சிங்காரமொழி 

தமிழே மொழிகளின் வரலாற்றில் இன்றியமையாதது 
தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்திருப்பது
தமிழை வான்புகழுக்கு உயர்த்தியது திருக்குறள் 
தனித்தமிழில் சிறப்பாய் அமைந்ததே கம்பராமாயணம் 

முக்கலைகளில் முடிசூடியது எங்கள் தமிழ்
முக்காலங்களில் வரலாறு படைப்பது தமிழ்
எத்திசையிலும் ஓங்கி ஒலிப்பது தமிழ்
என்றும் வரலாற்றில் நிலைப்பது தமிழே
**************************************************************