அனுபவப் பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
நீங்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி ... ஏனென்றால்...
YOU CAN SUCCESS IN INTERVIEW
ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெறாமல் வேலையோ அல்லது மேற்ப்படிப்போ அல்லது பதவி உயர்வோ கிடைப்பதில்லை. மேலும் எழுத்துத் தேர்வு (Written Test / Exams) , நேர்முகத் தேர்வு (Interviews) நடைபெறும்போது அதில் மிக மிக அதிகமானோர் பங்கெடுத்துக் கொள்வதையும் , கூட்டம் கூட்டமாக அலைமோதுவதையும் பார்க்கும்போது உங்களுக்குள் 'நான் வெற்றி பெறுவேனா?' என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் ஏற்படும். அதைக்கண்டு நீங்கள் பயப்படவேண்டாம் , சந்தேகமும் அடையவேண்டாம் . அதற்க்கு காரணம் இதோ....
* தேர்வில் பங்கெடுக்கும் 50% பேர்கள் 'கை பேசி ' மற்றும் 'வலைத்தளம் ' உபயோகிப்பவர்கலாகவும், அதில் அதிகமான நேரத்தை வீணாக்குபவர்களாகவும் , வெட்டி பேச்சு பேசுவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைவது உறுதி. எனவே அவர்கள் எல்லோரும் உங்களுக்கு சரியான போட்டியாளர்கள் இல்லை. அவர்களை மறந்துவிடுங்கள்.
* மேலும் 20% பேர் எந்நேரமும் கைபேசி, சினிமா, டி.வி சீரியல், நடனம், பாட்டு, தேவையல்லாத விசயங்களில் அதிக அக்கறையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆகவே அவர்கள் கட்டாயம் உன்னுடன் போட்டி போட முடியாது.
* மேலும் 20% பேர்கள் தேர்வுகளை ஏனோதானோவென்று விருப்பமோ, ஆர்வமோ இல்லாமல் மற்றவர்களின் அல்லது பெற்றோர்களின் கட்டாயத்தினால் வந்திருப்பார்கள். அவர்களால் கட்டாயம் வெற்றி பெற முடியாது.
* அதற்கு மேலும் 5% பேர்கள் நன்றாக படித்திருந்தாலும், ஆர்வமிருந்தாலும் ஒரு குறிக்கோளில்லாமல், தன்னம்பிக்கையில்லாமல் சந்தேகமாகவும், பயப்படுபவர்களாகவும் இருப்பதால் அவர்களும் தோல்வியையே தழுவுவர்.
* அதில் 3% பேர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கும். படிப்போடு கூடுதல் அறிவும் இருக்கும். ஆனால் அவர்களிடம் பணிவு இல்லாமல் தலைக்கணம் மற்றும் அகம்பாவம் இருப்பதால் முதலில் வெற்றிபெற்றாலும் கடைசியில் அவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும்.
* மேற்க்கூறிய எல்லாத் தகுதியுடைய உனக்கு சரி நிகரான போட்டியுள்ளவர்கள் மொத்தத்தில் இரண்டே சதவிகிதம் பேர்கள் தான். உன்னுடைய விடாமுயற்சியும் கடின உழைப்போடு தன்னம்பிக்கை உனக்கு கட்டாயம் வெற்றி தரும் என்பதில் உனக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
உன்னுடைய இந்த விழிப்புணர்வு கட்டாயம் வெற்றி தரும்.
ஆகவே கூட்டத்தை கண்டு இனி பயப்படவேண்டாம்.
நீங்கள் ஒரு சாதனையாளர். எதையும் துணிவு கொண்டு எதிர்கொள்ளுங்கள்.
உங்களுடைய கற்கும் ஆர்வம், புரிந்துகொள்ளும் தன்மை, கடின உழைப்பு , விடா முயற்சி ஆகியவையால் உங்களுக்கு வெற்றி மாலை தேடிவரும்.
அனுபவ வரிகள் இன்னும் தொடரும்....
No comments:
Post a Comment