Pages

Friday, 26 July 2013

ஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை - ONE CRORE PRIZE WINNER

இது நம்ம சானல் வழங்கும்

 'உங்களுக்காக நாங்கள் தருகிறோம் 
ஒரு கோடி ரூபாய்'.

(இது முற்றிலும் கற்பனை)
இதன் ரகசியம் : கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. 
ஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை
 


நீங்கள் எவ்வளவோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் நாங்கள் தரும் நிகழச்சிகளைப் போல யாராலும் தர முடியாது என்பதை இந்த கேக்கை சாப்பிட்டுக் கொண்டே சொல்ல முடியும்.

இதுவரை பெரியோர்கள், சிறியோர்கள் , நடிக நடிகையர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழச்சிகளைப் பலவற்ற பார்த்திருப்பீர்கள். எல்லாவற்றையும் விட நீங்கள் இது வரை காணாத ஒரு நிகழ்ச்சியை இப்போது பார்க்கப் போகிறீர்கள். அது தான் 'உங்களுக்காக நாங்கள் தருகிறோம் ஒருகோடி ரூபாய்' என்ற நிகழ்ச்சியில் முதல் முதலாக மூன்று வயது குழந்தை 'ஒரு கோடி' வென்றிருப்பதை பார்க்கத் தவறாதீர்கள். இது ஆச்சரியம் ஆனால் உண்மை!

பொதுவாக இந்த மாதிரியான போட்டியில் ஒரு கேள்வி கேட்டபிறகு அதற்கு  ஒரு சரியான விடையும் மூன்று தவறான பதில்கள் இருக்கும். அதில் சரியான ஒரே ஒரு பதிலைத் தேர்ந்தெடுத்துச் சொல்லவேண்டும்.

மொத்தம் 20 கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் ஒரு கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.

அதற்கு உதவியாக 

1. போன் மூலம் ஒருமுறை கேட்டுச் சொல்லலாம்.
2. 50: 50 முறையில் ஒரு முறை உபயோகிக்கலாம்.
3. ஒரு தடவை இங்கு பார்க்க வந்தவர்களின் உதவியை நாடலாம்.


ஒரு குழந்தை அந்த அற்புதத்தை நிகழ்த்தியதை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்.

இதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த குழந்தை யாருடைய தயவுமில்லாமல் அனைத்துக் கேள்விகளுக்கும் தானே  சரியான விடை சொல்லியதாகும். அதுவுமில்லாமல் பதில் உள்ள நான்கு இடங்களும் மூடியே இருக்கும். அதாவது வெறும் 1, 2, 3, 4 எல்லாமே வெற்றிடமாக இருக்கும். கேள்விக்கான சரியான விடை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை கணகட்சிதமாக சொல்லி அசத்தியதை பார்க்கத் தவறாதீர்கள்.


அதாவது .. உதாரணமாக ....


1. 
2.
3.
4.




இதோ ஆரம்பம் முதல் முடிவு வரை நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இதோ..

தொகுப்பாளர்:  (குழந்தையை அழைக்கிறார்) மெல்ல... மெல்ல .. நடந்து வாம்மா ...
(குழந்தை நடந்து வருகிறது. தொகுப்பாளர் அவரை நாற்காலியில் அமர வைக்கிறார்.)

தொகுப்பாளர்:   உன்னுடைய பெயர் என்னம்மா?

குழந்தை: ஏம் பேரு.. ஏம் பேரு ரோசினி ! எல்லோரும் செல்லமா ரோசி ன்னு கூப்பிடுவாங்க !

தொகுப்பாளர்: இந்த போட்டி என்னான்னு உனக்குத் தெரியுமா?

குழந்தை : பொது அறிவுப்போட்டி ன்னு என்னோட டாடி, மம்மி சொன்னாங்க!

தொகுப்பாளர்: அப்படியென்னா சுமார் எத்தனை பொது அறிவு புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்?

குழந்தை : எனக்கு படிக்கவே தெரியாது? ஆனா 1,2,3... 4 வரை தெரியும் அது தெரிந்தா போதாதா?



தொகுப்பாளர்: பின்னே எப்படி நான் கேட்கிற கேள்வியை புரிந்து கொண்டு பதில் தருவீர்கள்?

குழந்தை :  அதுவா? 1, 2, 3, 4  என்கிற கட்டங்கள் இருக்குமில்லே. சரியான விடையை எனது விரல் மூலம் 1 அல்லது 2 அல்லது 3 அல்லது 4 என்று காண்பிப்பேன்.



தொகுப்பாளர்: அது சரியா இருக்குமா?

குழந்தை :  இருக்குமா? இல்லையான்னு நீங்க பார்க்கத் தானே போறீங்க!

தொகுப்பாளர்: ஆமா, எதுவுமே 'க்ளு' இல்லாமே சரியாக விடை சொல்லிடுவேன் என்று சொல்றீங்களே. உங்களுக்கு எக்ஸ் - ரே கண்கள்  இருக்குதா?

குழந்தை :ஹி ..ஹி ...(சிரிக்கின்றது )

தொகுப்பாளர்: சிலர் வாய் பேச மாட்டார்கள். கை பேசும் என்பார்கள். அது உங்கள் விஷயத்தில் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

குழந்தை : என்னோட 'வாய்'  பேசுறதைக் காட்டிலும் என்னோட 'கை' நல்லாவே பதில் சொல்லும். போகப் போகத் தெரியும். எனது 'கை' ஒரு 'மந்திரக் கை' ன்னு.

தொகுப்பாளர்: நீங்கள் ஒரு எந்திரக் குழந்தையா? இவ்வளவு தைரியமா இந்த போட்டியில் கலந்து கொண்டீருக்கீங்க?

குழந்தை : இதுலே என்ன தைரியம் வேண்டியிருக்கு? நீங்க கேள்வி கேட்கப் போறீங்க! நான் பதில் சொல்லப் போறேன். சரியா இருந்தா 'பாஸ்'. தப்பா இருந்தா 'போஸ்'.

தொகுப்பாளர்: சாரிம்மா. இப்போ நேரா போட்டிக்குப் போறோம்..

குழந்தை : அதுக்காகத் தானே நான்  வந்திருக்கேன். சீக்கிரம் கேள்வியைக் கேளுங்க. எனக்கு  கிடைக்கப் போகிற ஒரு கோடி தள்ளிப் போயிட்டே இருக்கு.

தொகுப்பாளர்: முதல் கேள்வி......

1.  Which is the biggest planet int he solar system ? அதாவது நமது சூரியக் குடும்பத்தில் எந்த கோள் மிகப் பெரியது?

இதற்குபதில் இந்த நான்கு கட்டத்தில் எங்கு இருக்கின்றது?


1. 
2.
3.
4.





குழந்தை : (குழந்தை சற்று முழிக்கிறது. விரல்களை எண்ணி எண்ணிப் பார்க்கிறது)

தொகுப்பாளர்: என்னம்மா குழந்தை எடுத்தவுடனே ரொம்ப கடினமான கேள்வியை கேட்டுவிட்டேனோ?!  சரியான விடை எந்த கட்டத்தில் இருக்கு? ஏதாவது தெரிகின்றதா?

குழந்தை : இந்த கேள்விக்கெல்லாம் அசந்தா எப்படி? நான் சொல்ற பதில்லேநீங்க  எல்லாரும் மயக்கம் போடாம இருந்தா சரி!

தொகுப்பாளர்: சும்மா சொல்லுங்க! எல்லாரும் எதற்கும் தயாராத் தான் வந்திருக்காங்க.

குழந்தை : (குழந்தை யோசிக்கிறது.) பிறகு விரலைக் காட்டுகிறது.



தொகுப்பாளர்: என்ன? மூன்றா?

குழந்தை :  ஆமாம். (என்று தலையாட்டுகிறது)

தொகுப்பாளர்: கம்ப்யூட்டர் ஜீ ! ப்ளீஸ் ஓபன் பாக்ஸ் நம்பர் 3...

( 3  வது பாக்ஸ் திறக்கின்றது...)


1. 
2.
3. Jupiter. ஜுபீடர்
4.

தொகுப்பாளர் : மிகச் சரியான விடை..  என்ன ஆச்சரியம்....

எல்லோரும் கை தட்டுகிறார்கள். குழந்தையும் சேர்த்து...

குழந்தை :  என்ன அசந்துவிட்டீர்களா? இதுக்கே அசந்தா எப்படி? இன்னும் பாருங்க!!!
(சவால் விடுகின்றது குழந்தை)

தொகுப்பாளர்: ரொம்பவே அதிசயமா இருக்கு!  இரண்டாவது கேள்வி இதோ...

2. Which is the first element in the periodic table ? 'பீரியாடிக் அட்டவணையில்' முதலில் இருக்கும் வாயுவின் பெயர் என்ன? - இது இரசாயனம் சம்பந்தப் பட்ட கேள்வி! இந்த நான்கு கட்டத்தில் எங்கு இருக்கின்றது?


1. 
2.
3.
4.



குழந்தை : மீண்டும் குழந்தை விரல் எண்ணுகிறது!

தொகுப்பாளர்: முதல் தடவை சரியாய் சொல்லீட்டீங்க. இப்ப பார்க்கலாம். நீங்க என்ன மந்திரம் சொல்லி எந்த கட்டம் சொல்லப் போறீங்கன்னு பார்ப்போம்!

குழந்தை : குழந்தை மீண்டும் விரலைக் காட்டுகின்றது..



தொகுப்பாளர்:   இரண்டு...சரியா என்று பார்ப்போம்.. கம்ப்யூட்டர் ஜீ ஓபன் பாக்ஸ் நம்பர் டூ. இரணடாவது கட்டத்தை திறங்கள்!

இரண்டாவது கட்டம் திறக்கின்றது... ஓ.... மிகச் சரியான விடை.. என்னாலே நம்பவே முடியல்லே..
(அரங்கு முழுவதும் கரகோசம் காதைப் பிளக்கிறது)


1. 
2. Hydrogen. ஹைட்ரஜன் 
3.
4.



குழந்தை : பார்த்தீர்களா! என்னுடைய விரல் மகிமையை..சிலர் தொட்டது எல்லாம் பொன்னாகும் என்பார்கள். ஆனா நான் காட்டுவதெல்லாம் சரியா இருக்கும்.

தொகுப்பாளர்: உண்மையிலேயே நீங்க அறிவு கடல் தான். ஏது,,, ஏது.. பெரிய பெரிய தேர்வு கூட ரொம்ப ஈசியா பாஸ் பண்ணிடுவீங்க போலிருக்கே...

சரி.. சரி.. நீங்க அடுத்து அடுத்து வரும் கேள்விகளுக்கு சரியானபடி பதில் சொல்லிடுவீங்களான்னு நாங்க தெரிஞ்சுகிறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கு?

இதோ உங்களுக்கான மூன்றாவது கேள்வி...

3. What is the name of the currency of Russia? அதாவது ருஷ்யாவின் கரன்சியின் பெயர் என்ன?

குழந்தை : (குழந்தை மீண்டும் விரலைப் பார்க்கிறது. 1,2,3,4....பார்த்த பிறகு 'ஒன்று' என்று ஒரு விரலை காட்டுகின்றது..
தொகுப்பாளர்: இந்த கேள்வியின் விடை ஒன்றாவது கட்டத்தில் இருக்கின்றது. அப்படித் தானே? கம்ப்யூட்டர் ஜீ பிளீஸ் ஓபன் பாக்ஸ் நம்பர் 'ஒன்'

முதல் பாக்ஸ் திறக்கின்றது...

1. Rouble.  ரூபிள் 
2.
3.
4.


குழந்தை : இந்த விடை சரியானது தானே!

மீண்டும் அரங்கில் கரகோசம் ....

தொகுப்பாளர்: எல்லாம் நம்ப முடியாமல் இருக்கின்றது.. இனி நான்காவது கேள்வி இதோ...

4. Which is the largest ocean in the world ? உலகில் மிகப் பெரிய கடல் எது? என்ற கேள்விக்கு பதில் எந்த கட்டத்தில் இருக்கின்றது...

குழந்தை : குழந்தை கன்னத்தில் விரல்களை வைத்து யோசிக்கின்றது.. கடைசியில் ...

தொகுப்பாளர்: என்ன நான்கா? சரியா என்று பார்ப்போம்..!
1. 
2.
3.
4. Pacific Ocean. பசிபிக் கடல் 




தொகுப்பாளர்: சரியான விடை... நீங்க எவ்வளவு ஜெயிச்சிருக்கீங்க என்பதை விட அடுத்து அடுத்து கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் எப்படி சொல்லப்போறீங்கன்னு தான் அனைவரும் ஆர்வமா இருக்காங்க...

ஐந்தாவது கேள்வி இதோ...

5. What is the branch of science which deals with the study of poison? அறிவியலில் 'விஷம்' பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்?

குழந்தை :  வாயில் ஏதேதோ முணுமுணுக்கிறது..பிறகு...


தொகுப்பாளர்: நீங்கள் காட்டுவது இரண்டு... சரியா என்று கட்டத்தை திறக்கச் சொல்லுவோம்.. (இரண்டாவது கட்டம் திறக்கின்றது)



1. 
2.Toxicology. டாக்ஸ்காலோஜி
3.
4.


தொகுப்பாளர்: சரியான விடை... எங்கே நான் இப்போ கேட்கும் ஆறாவது கேள்விக்கு விடை சொல்லுங்கள்...இல்லை ..இல்லை காட்டுங்கள் பார்க்கலாம்?

6. The 'Durand Cup' is associated with which game? 'துரந்த் கோப்பை' எந்த விளையாட்டுடன் தொடர்பு கொண்டது?

குழந்தை : மீண்டும் ஒரு முறை கேள்வியைக் கேட்டுவிட்டு தன் பதிலை விரல் மூலம் காட்டுகின்றது..



தொகுப்பாளர்: நான்கு!!! சரியா??? என்று பார்ப்போம்...



1. 
2.
3.
4. Football.  கால் பந்து 


தொகுப்பாளர்: சரியான விடை...நீங்க சரியான விடையைக்காட்டினாலும் எங்களுக்கு எல்லாமே பிரமிப்பா இருக்குது...

இதோ ஏழாவது கேள்வி....

7. Who was the President of United States in 1990? 1990 ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜனாதிபதியின் பெயர் என்ன?

குழந்தை : டக்கென்று விரலைக் காட்டுகின்றது..

தொகுப்பாளர்: நான்கு.. எண் உள்ள கட்டத்தை திறந்திடுங்கள்.. பதில் சரியா என்று பார்ப்போம்...


1. 
2.
3.
4.George Bush. ஜார்ஜ் புஷ் 


தொகுப்பாளர்: ச....ரியான விடை....அற்புதம்... அபாரம்...

(அரங்கில் கரவொலி அடங்க வெகு நேரமாகிறது...) நீங்கள் பதில் சொல்வதை ரொம்ப அனுபவிக்கிறாங்க போலிருக்கு... இனி எட்டாவது கேள்வி.. அனேகமாக மற்றவர்களுக்கு இது எளிதான கேள்வி.. ஆனால் உங்களுக்கு எப்படின்னு பார்ப்போம்.. இதோ...

 8. How many legs does an ant have ? எறும்பிற்கு எத்தனை கால்கள்? நன்றாக யோசித்து சொல்லுங்க!

குழந்தை : யோசிக்கிறது... கடைசியில்... விரலைக்காட்டுகிறது..




1. Six   ஆறு 
2.
3.
4.


தொகுப்பாளர்: மி....க...சரியான விடை....ஆஹா ... நீங்கள் ஒரு அதிசயப் பிறவி தான்... நான் அடிச்சு சொல்றேன்...உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி பதில் சொல்லமுடியாது...அடுத்து ஒன்பதாவது கேள்வி...

9. When was the capital of India shifted from Calcutta to Delhi? இந்தியாவின் தலைநகரம் எந்த ஆண்டு கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது?

குழந்தை : நன்றாக் யோசித்து.... விரலைக் காட்டுகின்றது...




1. 
2.
3. 1911.
4.


தொகுப்பாளர்: சரியான விடை... இப்போது பத்தாவது கேள்வி....

10. What is called the protein in the white of a hen's egg? கோழியின் முட்டையினுள்  இருக்கும் வெள்ளை நிறத்திலுள்ள ப்ரோட்டீனின் பெயர் என்ன?

குழந்தை : மீண்டும் விரலை எண்ணிவிட்டு  காட்டுகின்றது...
தொகுப்பாளர்: இரண்டு.... இரண்டாவது கட்டம் திறக்கின்றது...விடை சரியா?


1. 
2. Albumen. அல்புமின்.
3.
4.


தொகுப்பாளர்: சரியான விடை...  அறிவியல், ஆன்மிகம், கலை, சமூகம் எல்லாத்திலேயும் சும்மா புகுந்து விளையாடுறீங்க... வாழ்த்துக்கள்..ரோசி..குழந்தை எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கவேண்டும். யாரோட தயவு இல்லாம பத்து கேள்விகளுக்கு சரியான விடை சொல்லீட்டீங்க..கிட்டத் தட்ட பாதி கிணறு தாண்டிடீங்க. எனக்காக இல்லாவிட்டாலும் இந்த  ப்ரோக்ராம் பார்க்கிறவங்க , பார்க்காதவங்களுக்கு இதனுடைய ரகசியம் சொல்றீங்களா? ஏன்னா ? எல்லோராலையும் தெரிஞ்சுக்கிற ஆர்வம் அடக்கமுடியல்லை..



அரங்கம் : ஆமாம்...அமாம்... சொல்லியே தீரவேண்டும்...  

குழந்தை : சரி சரி.. தலையை ஆட்டுகிறது....

தொகுப்பாளர்: அடுத்தது 11 வது கேள்வி... இது எல்லோருக்கும் கடினமான கேள்வி..

11. What instruments measures the capacity of lungs? நுரையீரலின் வலிமையின் அளவை அளக்கும் கருவியின் பெயர் என்ன?


குழந்தை : கொஞ்சம் முழிக்கின்றது. மேலே கீழே பார்க்கின்றது. கடையில் சந்தேகமாக முதலில் நான்கு காட்டிய குழந்தை மாற்றி மூன்று காட்டுகின்றது!.

தொகுப்பாளர் : சந்தேகத்துடன் குழந்தையைப் பார்த்து.. சரியாக காட்டுங்கள்...நான்கா? அல்லது மூன்றா?

குழந்தை :  கடைசியாக மூன்று...என்று காட்டியது..




மூன்றாவது கட்டம் திறக்கின்றது....


1. 
2.
3. Spirometer. ஸ்பிரோ மீட்டர் 
4.


தொகுப்பாளர்: சரியான விடை...நிச்சயமாக கரகோசம் எழுப்புங்கள். .

 அரங்கில் சலசலப்புடன் கரவொலி களைகட்டுகிறது...


தொகுப்பாளர்: அடுத்து 12 வது கேள்வி...


12.Who built the Buland Darwaza at Fatehpur sikiri? பதேபூர் சிக்கிரியில் இருக்கும் 'புலந்த் தர்வாஜா' யாரால் கட்டப்பட்டது? என்ற கேள்விக்கான விடை எந்த கட்டத்தில் இருக்கின்றது..

குழந்தை : கட்டத்தை 1 முதல் 10 வரை எண்ணுகிறது... பிறகு 'இரண்டு' என்று காட்டுகிறது

1. 
2. Akbar. அக்பர் 
3.
4.



தொகுப்பாளர்: சரியான விடை... மிகச்சரியான விடை... அற்புதம்.. அபாரம்...

(கரவொலி அரங்கு முழுவதும் நிறைகின்றது)


தொகுப்பாளர்: ஒண்ணுமே புரியல்லே  இந்த நிகழ்ச்சியிலே . என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குதுன்னு பாடவேண்டியது தான். எல்லாத்துக்கும் கேள்வியைக் கேட்டு நாங்க தான் தண்ணியைக் காட்டுவோம். ஆனா... எங்களையே தண்ணியைக் காட்டுன முதல் ஆள் ன்னு சொல்லக் கூடாது.. முதல் குழந்தைன்னு தான் சொல்லணும்..இப்போவே 'ஒரு கோடி' கொடுக்கலாம்னு தோணுது..ஆனா இப்படி சரியா பதில் சொல்ற ரகசியம் இந்த நிகழ்ச்சியின் முடிவுலே சொல்றதா சொன்னாங்க இல்லையா.. அதனாலே விறுவிறுன்னு கேள்வி கேட்போம். பதில் சரியா சொல்றாங்களான்னு பார்ப்போம்..இப்போ 13  வது கேள்வி..

  13.Who is the chief architect of the transcendental philosophy? 'டிரான்சிடெண்டல் பிலாசபி' யின் பிரதானத் தலைவர் யார்?



குழந்தை : இப்போது நன்றாகவே திணறுவது தெரிகின்றது...


தொகுப்பாளர்: என்னமா தெரியவில்லையா... என்ன தெரியுமா! விரலைக் காட்டுங்க பார்ப்போம்..

குழந்தை..  ஒரு விரல் காட்டுகின்றது...

ஒன்றாவது பாக்ஸ் திறக்கின்றது...



1. Immaanuel kant  இம்மானுவல் கான்ட் 
2.
3.
4.



தொகுப்பாளர்: சரியான பதில்.... இனி 14 வது கேள்வி  இதோ...

14. What is the capital of Ireland? அயர்லாந்தின் தலைநகர் எது?


குழந்தை : நான்கு விரலைக் காட்டுகின்றது... 



1. 
2.
3.
4. Dublin. டப்ளின் 


தொகுப்பாளர்: மிக மிகச் சரியான பதில் ...



குழந்தை : குழந்தை ரோசி தன்னைத் தானே உற்சாகப் படுத்திக்கொள்ள பலமாக கை .தட்டுகிறது.

தொகுப்பாளர்: : இனி 15 வது கேள்வி....

15. Who was the first Indian to score a double century against the West Indies? கிரிக்கெட்டில் மேற்கிந்திய அணிக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்த இந்தியர் யார்?

குழந்தை : சற்று யோசித்து இரண்டாவது கட்டத்தில் இருக்கின்றதை விரல் மூலம் காட்டுகின்றது..


1. 
2. Dilip sardesai. திலிப் சர்தாரி 
3.
4.


தொகுப்பாளர் : சரியான பதில்.. இனி 16 வது கேள்வி...

16. When was Turkey established? எப்போது 'துருக்கி' உருவானது? இப்போது சரியான விடை சொல்லுங்கள் பார்ப்போம்?

குழந்தை  :
தொகுப்பாளர் : மூன்றாவது பாக்ஸ் திறந்து காட்டுங்கள் ....



1. 
2.
3. 1923.
4.


தொகுப்பாளர் :  சரியான விடை... எனக்கே உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது... இனி 17 வது கேள்வி...

17. When and where the fist boat race held? 'படகுப்போட்டி' எங்கு எப்போது உருவானது?





குழந்தை  :  இரண்டு விரலைக் காட்டுகின்றது...

                                              




1. 
2. In 1715 , England. 1715 ஆண்டு இங்கிலாந்து 
3.
4.



தொகுப்பாளர் : சரியான விடை... இனி 17 வது கேள்வி..


17. The independence day of Japan? ஜப்பான் எந்த மாதம் எந்தநாளில் சுதந்திரம் பெற்றது?




குழந்தை  : ஒரு விரலைக் காட்டுகின்றது...



1. April 29 th. ஏப்ரல் 29ம் தேதி 
2.
3.
4.


தொகுப்பாளர் :  சரியான விடை... இனி 18 வது கேள்வி...


18. What is the name of the brightest star ? மிக பிரகாசமான நட்சத்திரத்தின் பெயர் என்ன?




1. 
2.  Sirius. சிரியஸ் 
3.
4.



தொகுப்பாளர் : சரியான பதில் ... இனி 19 வது கேள்வி..


19. When,  Which is the first rocket of India?  இந்தியாவின் முதலாவது ராக்கெடின் பெயர் என்ன?



குழந்தை  : நான்கு விரலைக் காட்டுகின்றது...




1. 
2.
3.
4. Rohini (1967) ரோகினி - 1967


தொகுப்பாளர் : சரியான விடை... அப்பாடா.. கேள்வி கேட்டு டயடுஆனது இது தான் முதல் தடவை.. கஷ்டப்பட்டு கேட்ட எல்லா கேள்விக்கும் டக் டக்குன்னு பதில் சொல்லி அசத்தின ரோசி குழந்தைக்கான கடைசி 20 வது கேள்வி...


20 . Which of these vitamins soluble in water A,B,C,D & E ? A,B,C,D & E ல் எந்த எந்த விட்டமின்கள் தண்ணீரில் கரையக்கூடியது?



குழந்தை  :  பல தடவை யோசித்து மூன்று என்று காட்டுகின்றது...





1. 
2.
3.  B & C   பி & சி 
 4.



தொகுப்பாளர் : மிகச் சரியான விடை.... சரி நீங்க இந்த கேள்விக்கான பதில் எப்படி கண்டுபிடிச்சு சொன்னீங்க? எல்லோருக்கும் சொல்லுங்க... ரொம்ப ஆவலா ...


குழந்தை : .தொகுப்பாளரை கூப்பிட்டு அவருடைய காதில் அந்த ரகசியத்தை சொல்கின்றது... சொல்லிவிட்டு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டும் கொள்கிறது...

தொகுப்பாளர்: ஆ.. அது தானா அந்த ரகசியம்... சரி அந்த குழந்தை என்னிடத்தில் சொன்ன ரகசியம் என்னவென்று தெரிந்தவர்கள்  இந்த உலகத்தில் யாராவது இருக்கிறீர்களா என்று சவால் விடுகின்றது அந்த குழந்தை !  அந்த சவால் உங்களுக்கும் தான். அந்த ரகசியம்  தெரிந்தால் உடனே சொல்லுங்கள் பார்ப்போம்....

சொல்லுங்கள்... உங்கள் அறிவை உலகுக்கு காட்டுங்கள்...


11.3.14 (கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்) வரையில் உலகில் உள்ள எவரும் அந்த குழந்தை  எப்படி சரியான பதிலைச் சொன்னதன் ரகசியத்தை சொல்லவில்லை. ஆகையால் நானே அந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன். அதாவது அந்த நான்கு வெற்றுக் கட்டங்களிலும் அந்தந்த கேள்விக்குரிய சரியான விடைகளே இருப்பதால் அந்த குழந்தை, தான் காட்டும் நான்கு விரல்களில் எந்த விரலைக் காட்டினாலும் சரியான பதில் தான் இருக்கும். இதுக்கு பொது அறிவைத் தலைகீழாகப் படிக்க வேண்டிய அவசியமா? 

ஒருவேளை இதை டி.வி தொகுப்பாளர்கள் யாரேனும் படிக்க நேர்ந்தால் கட்டாயமாக தங்கள் டி.வி யில் தருவார்கள். மக்களுக்கும் ஒரே ஆச்சரியமாக இருக்கும். இது எப்படி, யார் அப்படிப்பட்ட பயிற்சி தருகிறார்கள் என்று தேடி அலைவதோடு அதற்கு கணிசமான பணத்தை செலவு செய்யத் தயாராக இருப்பார்கள். மேலும் இப்போது எல்லோருக்கும் கோடை விடுமுறை ஆரம்பிக்க இருப்பதால் சொல்லவே வேண்டாம்? ஆக யார் காட்டில் எவ்வளவு பணமழை என்று போகபோகத் தெரியும்... 

நன்றி...

வணக்கம்...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

3 comments:

  1. VETTIVELAI. VETTIPAYA..VETTI, DANDASORU
    PRIZE IS SHARED BY ALL WITH ANSWER OUT
    PROMPTED FROM GALLERY

    ReplyDelete
    Replies
    1. IT IS WRONG ANSWER.NOONE WAS NOT ANSWERED OUT FROM GALLERY.WAITING FOR CORRECT ANSWER WHO WILL SAY WAIT AND SEE...

      Delete