Pages

Friday 14 August 2015

MULTI FACES OF BHARATHI DASAN - பாரதிதாசனின் பன்முகம்

              MULTI FACES OF BHARATHI DASAN  
                     பாரதிதாசனின் பன்முகம்
                                       புதுக்கவிதை
                       மதுரை கங்காதரன்

                       
                       

பாரதிதாசரே!
நீவீர்  புதுவை சிப்பிக்குள் பிறந்த முத்தான தமிழர்
புதுக்கவிதைத் தேரை வடம் பிடித்து இழுத்தவர்
பெண்விடுதலைக்கு பாரதிக்கு நிகராய் நின்றவர்
'பாவேந்தர்' பட்டத்திற்குச் சொந்தக்காரர்.

வாசிப்புக்கு இதமான கவிதைகள்
சுவாசிக்க வைக்கும் துடிப்புகள்
நேசிக்கச் செய்யும் நடைகள்
சிந்திக்க வைக்கும் பல படைப்புகள்.

ஈராண்டில் பட்டப் படிப்பை முடித்த அறிவுச் சுடர்
விடுதலை வேட்கையை கவிகள் மூலம் தணித்தவர்
அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியவர்
அமுதான தமிழை வளமான நடையில் தந்தவர்.

பாரதி வழியில் புதுக்கவிதைக்கு முகவரி கொடுத்தவர்
தமிழ் கவிதைகளை உயிர் மூச்சாய் சுவாசித்தவர்
கவிதைகளை திரைப்படத்தில் ஒலிக்கச் செய்தவர்
பட்டிதொட்டி மக்களையும் கவிதையை நேசிக்க வைத்தவர்.

பாடல்களை அமுதாக உயிருக்கு நேராக படைத்தாய்
பாலிற்கும் மேலான சுவை தேனினினும் மேலான இனிமை
பூக்களை மிஞ்சும் மணம் இடியாய் முழங்கிடும் சாட்டையடி வரிகள்
பாரதிக்கு வாரிசாய் மாறினாய் தமிழுக்கு காவலாக இருந்தாய்.

பாரதி கனவுகளை நனவாக்க அரும்பாடுபட்டாய்
சாதி சண்டையில்லா சமுதாயம் ஓங்கிட
அரசியலிலும் ஆதிக்கம் செய்து சாதனைகள் புரிந்தாய்
கவிதைகள் மூலம் சீர்திருத்த சிந்தனைக்கு வித்திட்டாய்.

வளரும் கவிஞர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பவர்
தேய்ந்து வரும் தமிழ் படைப்புகளால் வளர்த்தவர்
உலகெங்கும் அவர் தமிழ் பற்றை பரப்புவோம்
தமிழ்மொழியின் பெருமையை நிலைநிறுத்துவோம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



No comments:

Post a Comment