21.7.17 உலகத் தமிழ்ச் சங்கம் , மதுரை.
கவியரங்கம் - பாரதி ...தீ .. மின்படங்கள்
நான் (கு.கி.கங்காதரன்) வாசித்த கவிதை
தமிழுக்கும் தமிழ்த்தாய்க்கும் வணக்கம்
தமிழைக் கவிகளாலும் வளர்ப்போம்
தமிழை அழியாமலும் காப்போம்
தமிழனின் அடையாளம் தமிழென
தரணியெங்கும் பறைச்சாற்றுவோம்.
பாரதி.... தீ
கவிகளால் வானத்தைத் தொட்டவர்
கனவுகளால் சுதந்திரத்தை வித்திட்டவர்
எண்ணங்களால் இதயத்தில் நிலைத்தவர்
எந்நாளும் கவிஞர்களுக்கு முதல்வர்.
சுதந்திரத் தாகத்தைக் கவிதைகளால்
சுந்தரத்தமிழால் மக்களை உசுப்பியவர்
‘இந்தியா’ நாளைய வல்லரசு முழக்கத்தை
அப்துல் கலாம் வழியாக வித்திட்டவர்.
காலனை வெல்லாமல் போயிருக்கலாம்
கவிஞர்களின் மனங்களை வென்றிருக்கிறாய்
பல பாரதிகளை இங்கு பார்க்கிறேன்
பல கவிதைகளை இவ்விடம் சுவைக்கிறேன்.
கவிகளில்
சிறப்புக் கூடினால் மதிப்பு கூடும்
மதிப்புக் கூடினால் வாழ்த்து கூடும்
வாழ்த்து கூடினால் வளம் கூடும்
வளம் கூடினால் புகழ் கூடும்.
பாரதி கவிதைகளோ
அடிமை செய்வோரை அக்கினியாய்ச் சுடும்
உரிமை மறுப்போர்களை குண்டுகளாய்
துளைக்கும்
மடமை எண்ணங்களைத் தீயிலிட்டுப்
பொசுக்கும்
கடமைத் தவறுவோர்களைக் கனலாய்க் கக்கும்.
புதுமைப் பெண் சரித்திரத்தைத் தொடங்கி
வைத்தாய்
புதுக்கவி அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தாய்
புதுப்பாரதக் கனவை மெய் படுத்தினாய்
பூவுலகில் மங்காப் புகழைப் பெற்றுவிட்டாய்.
நன்றி, வணக்கம்.
கவிதைத் தலைப்பு : பாரதி.... தீ
கவிஞர் : கு.கி. கங்காதரன்
வாசித்த இடம் : உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை (21.7.17)
மையக் கருத்து மதிப்பீடு[x] தமிழ் – அடையாளம், மொழி, தாய் என்ற மூன்று பரிமாணங்களும் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளன
[x] பாரதியாரின் கவிதை, சிந்தனை, சமூக தாக்கம் வலுவாக பிரதிபலிக்கப்படுகிறது
[x] கவிதை ஒரு வணக்க உரை + சிந்தனை உரை + போர்முரசு என மூன்று நிலைகளில் நகர்கிறது
மொழி & ஓசை[x] மேடை வாசிப்பிற்கு ஏற்ற முரசொலி ஓசை
[x] “கூடும் – கூடும்” போன்ற தொடர்கள் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன
[x] வினைச்சொற்கள் (சுடும், துளைக்கும், பொசுக்கும், கக்கும்) ஆற்றல்மிக்கவை
பாரதி சித்தரிப்பு[x] பாரதி = கவிஞர் + புரட்சியாளர் + கனவாளர் என முழுமையாக வரையறுக்கப்பட்டுள்ளார்
[x] அப்துல் கலாம் இணைப்பு சமகாலத் தொடர்பை உருவாக்குகிறது
[x] “பல பாரதிகளை இங்கு பார்க்கிறேன்” – நேரடி மேடை தாக்கம்
மொத்த AI மதிப்பெண்கருத்து : 9 / 10
மொழி : 8.5 / 10
மேடை தாக்கம் : 9.5 / 10
மொத்தம் :
9 / 10
9 / 10
மேம்படுத்த AI பரிந்துரைகள்Write
சிறிய மேம்பாடுகள் (Optional)[ ] சில இடங்களில் “******” குறியீடுகளை மேடை வாசிப்பில் இடைநிறுத்தம் எனக் கருதி ஒரே மாதிரியாக அமைக்கலாம்
[ ] “கவிகளில்” என்று தனியாக வரும் வரியை அடுத்த வரியுடன் இணைத்தால் ஓசை இன்னும் சீராகும்
மேடை வாசிப்பு பரிந்துரை[ ] “பாரதி…. தீ” என்ற இடத்தில் 2 விநாடி மௌனம் → பின்னர் உரக்க வாசிப்பு
[ ] “அடிமை செய்வோரை…” பகுதியை குரல் உயர்த்தி வாசிக்கலாம்
வெளியீட்டு பயன்பாடு[ ] வலைப்பதிவில் வெளியிடும்போது “AI Review Included” என்று குறிப்பிட்டால் வாசகர் நம்பிக்கை அதிகரிக்கும்
[ ] பாரதி பிறந்த நாள் / தமிழ்த் தின சிறப்பு பதிவாக மீள்பதிவு செய்யலாம்
எதிர்கால விரிவாக்க யோசனை[ ] இதையே அடிப்படையாக கொண்டு “பாரதி – இன்றைய இளைஞன்” என்ற தொடர்கவிதை
நன்றி... வணக்கம் ...