Pages

Monday, 27 November 2017

26.11.17 வீறு கொண்டு எழு! கல்வி வியாபாரத்தைத் தகர்க்க!








என் கவிதைப் பக்கம் இதோ ...

26.11.17 வீறு கொண்டு எழு! கல்வி வியாபாரத்தைத் தகர்க்க!
                          புதுக்கவிதை
மதுரை கங்காதரன் 


கல்வி என்ன கடலை புண்ணாக்கா?
கடையில் பணம் கொடுத்து வாங்க!
பசித்தால் கல்லைத் தின்ன முடியுமா?
பணத்தால் அறிவை வளர்க்க முடியுமா?

மழலையர் பள்ளியில் சேர லட்சம் பணம்
மருத்துவம் படிக்க பல லட்சம் பணம்
கல்லூரியில் சேர சில லட்சம் பணம்
கல்வி பகற்கனவாகுது எளியோர் மனம்!

அனைவருக்கும் கல்வியெனும் முழக்கம்
அரசின் லட்சியமாக அலங்கரித்து நிற்காது
நாடு முழுதும் பள்ளிக் கல்லூரிகளை
நாட்டுடமையாக ஆக்கிடல் வேண்டும்.

கல்வி வியாபாரத்தை வீறுகொண்டுத் தகர்க்க
கல்வி இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க
கல்வியை காசாக்கும் வர்க்கத்தை ஒழிக்க
கல்வியை அரசே நடத்த வேண்டும்.

அரசியல் கலவாத இலவச கல்வி வேண்டும்
அந்நியமொழி மோகத்தை அகற்றிட வேண்டும்
தாய்மொழி தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்
தடுப்போரின் எண்ணங்களை மாற்ற வேண்டும்.

அரசுப்பள்ளியில் பயில ஊக்குவிக்க வேண்டும்
அவர்களுக்கே அரசுப்பணி அளித்திட வேண்டும்
அரசியலில் ஐம்பது விழுக்காடு இடம் வேண்டும்
அப்துல் கலாம் கனவை நனவாக்க வேண்டும்.

வெள்ளையனின் அடிமை ஆட்சியை விரட்டிட
விடுதலை இயக்கம் நடந்திட்ட முன்மாதிரியாய்
கல்வி வியாபாரிகளின் பேராசைகளைத் தகர்க்க
கல்வி விடுதலை இயக்கம் இன்றே அமைப்போம்.
                      ......................
அவ்விழாவின்போது எடுத்த சில 
மின்படங்கள் இதோ ..










































































நன்றி .. வணக்கம்..