Pages

Saturday 16 December 2017

நாமமது தமிழரென கொண்ட நாமே நாமத்தைப் போடலாமா தமிழுக்கிங்கே? புதுக்கவிதை



விழாவின்போது நான் வாசித்த எனது கவிதை 
நாமமது தமிழரென கொண்ட நாமே
நாமத்தைப் போடலாமா தமிழுக்கிங்கே?

                     புதுக்கவிதை

              மதுரை கங்காதரன்

பெருமைக்குப் 'பச்சைத் தமிழர்' பட்டம்
பேசுவதில் பிறமொழி கலப்பு எதற்கு?  
தமிழில் நாமம் சூட்டுவது நன்று
தமிழுக்கே நாமம் போடுவது நன்றா?

தேமதுரத் தமிழோசை ஒலி 
தெவிட்டாமல் செவிகளுக்கு எட்டிட
தென்றலாய்த் தொட்டுத் தடவிட
தெளிந்து நிமிர்த்துமா தமிழர்களை?

காய்கனி நிரம்பியத் தமிழ்மரம்
காயும் நிலைக்குத் தள்ளலாமா?
தமிழர்களுக்கு நிழலாய் நிற்பதை
தரையில் சாய்த்து அழிக்கலாமா?

தனக்கு மிஞ்சியே தானம்
தன்னையே தானம் செய்வாரோ?
தமிழுக்கு மிஞ்சியே பிறமொழி
தமிழையே தாரைவார்த்தல் தகுமோ?

தடுக்கி விழுந்தால் எழலாம்
தன்னையே மாய்த்தால் எழமுடியுமா?
தமிழுள்ள பிறஎழுத்துகளை நீக்கலாம்
தமிழே அழிந்தால் பயனென்ன?

தவமிருந்து பெற்றத் தமிழ்மொழி
தறுதலையாய்ப் போக விட்டுவிடாதே!
பேணிக்காத்த தமிழ் பெருமையினை
பொறுப்பற்று உதாசினம் செய்துவிடாதே?

                             நன்றி 

அன்றைய விழாவின் மின்படங்கள் 

































































No comments:

Post a Comment