Pages

Wednesday 4 April 2018

TODAY WHICH EDUCATIONAL SYSTEM BE FOLLOWED? இன்றையக் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்?

TODAY WHICH EDUCATIONAL SYSTEM BE FOLLOWED?  
இன்றையக் கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்?
கட்டுரை 
மதுரை கங்காதரன் 

நன்றாகச் சிந்தித்துப் பார்த்ததால் இன்றையக் கல்வி முறை கொஞ்சம் கொஞ்சமாகக் கேலிக்கூத்தாக மாறிக்கொண்டு வருகின்றது என்று இந்தக் கட்டுரையைப் படித்துமுடித்த பின்னே தெள்ளத் தெளிவாகத் தெரியவரும். ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு வாகனத்தின் முன் சக்கரங்களாகவும், பின்சக்கரங்களாகவும் ஒப்பிடலாம். அதாவது முன்சக்கரங்கள் முன்னேறிச் சென்றால், பின்சக்கரங்கள் தானாக முன்னேறும். அதன் பலனாக 'வாழக்கை' என்கிற வண்டியும் நிம்மதியாக ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒரு பக்கம் கல்வியின் தரத்தை உயர்த்தப்போகிறோம் என்று எல்லாப் பாடங்களையும் இன்றைய உலகப் போட்டியினை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டு வருகின்றார்கள். இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. பாடங்களை மட்டும் மாற்றினால் கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அதைச் சொல்லித்தரப்போகும் ஆசிரியர்களின் கல்வித்தரம் எவ்வாறு இருக்கவேண்டும்? என்கிற வரைமுறை இல்லாதது மிகப்பெரிய தவறு. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் எப்போவோ படித்த படிப்பு, இப்போது மாற்றும் புதியப் பாடத்திட்டத்தினை ஈடு கொடுத்துச் சொல்லித்தர உதவுமா? பெரும்பாலும் ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ளனவற்றை அப்படியே படித்துக் காட்டுகிறார்கள். இதுதான் சொல்லித்தரக்கூடிய இலட்சணமா? ஏதாவது சந்தேகம் கேட்டாலும் அதற்கு பதில் வருவதில்லை. 

மேலும் இன்றையப் பாடத்திட்டம், நடைமுறையில் அதாவது வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் பல பொருட்களையும் செயல்களையும் மறக்கச் செய்யும் கவர்ச்சிக் கருவியாகத்தான் இருந்து வருகின்றதோ! என்று எண்ணத் தோன்றுகின்றது. பள்ளிப்படிப்பு முடித்தவனுக்குச் சாதாரணக் கணக்குகூட போடத் தெரிவதில்லை. சரளமாகசில தமிழ் அல்லது ஆங்கில வார்த்தைகள்கூட எழுதப் படிக்கத் தெரிவதில்லை. வங்கி, தபால் துறை, அரசியல், அரசு அலுவலகம், காவல்துறை, போக்கு வரத்து துறை, விவசாயம், பலசரக்கு போன்றவற்றில் அடிப்படை விசயங்கள் கூடத் தெரியாமல் விழிக்கிறான். வாழ்க்கைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருக்கும் கணினித்துறை (நித்தமும் ஒரு ஒரு கணினி மொழி உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது), அறிவியல் துறை (நேற்றையக் கண்டுபிடிப்புகளை இன்று எட்டி மிதித்து புதுமாதிரியானவற்றை உருவாக்குகின்றனர்), மருத்துவத்துத் துறை (நித்தமும் பல மருந்துவகைகள் வந்துகொண்டு இருக்கின்றது), மோட்டார் துறை (சொல்லவே வேண்டாம்), கணிதம் (யாருக்கும் சொல்லிக்கொடுக்க முடியாதபுரியாத கணக்கு வகைகள் ஏன் பாடமாக வைக்கின்றார்களோ என்று தெரியவில்லை. சாதாரணமாக வட்டிக்கணக்கு, லாப நஷ்டக் கணக்கு சுத்தமாகத் தெரியவில்லை), புவியியல் ( நாளை வானிலை எவ்வாறு இருக்கும்?, புவி நிலை எப்படி இருக்கும் என்று கணக்கிட முடியாத புரியாத புதிராக இருக்கும் படிப்பு), சரித்திரம் (கால மாற்றம் இது கதையாக மாற்றிவிட்டது எனலாம்), தகவல் தொழில்நுட்பம் (இதன் வளர்ச்சி இமயத்தைத் தொட்டுவிட்டது எனலாம்), கலை (இதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை), பொறியியல் படிப்பு (ஐதர் காலத்தில் உள்ளத்தைத் தான் இப்போது படிக்கிறார்கள். இதனால் பயன் ஏதுமில்லை) இப்படி இதனோடு இன்னும் ஏகப்பட்ட கிளைகள் கொண்டப் படிப்பு எதற்கு, யாருக்கு, எப்போது  பயன்படும்? என்று தெரியாமலே பல படிப்புகள் படிக்கிறார்கள். 

இப்போது ஒரு சவால்! இப்போது இருக்கும் எல்லாப் படிப்புகளில் யாராவது ஒருவர் தான் படித்த படிப்பைச் சார்ந்து வேலையோ, தொழிலோ, சேவையையோ  செய்பவரைக் காட்டுங்கள். ஆசிரியர்கள் தவிர?! ஏனென்றால் சொல்லித்தரும் பாடங்கள் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் அல்லவா! வெறும் கதைகள் போல படித்துக் காண்பித்தால் போதுமா? மேலும் இதையெல்லாம் படித்துவிட்டு (இதுவரை படித்ததே 'வீண்' என்று இருக்கும்போது) அந்தப் படிப்பு மூலம் பல ஆராய்ச்சிகள் செய்து 'முனைவர்' பட்டம் வாங்குவது பற்றி என்ன சொல்வது? ஏதாவது ஒரு படைப்பாவது செயலாக மாற்றி அதனால் மக்கள் சமூகத்தின் நலனை உயர்த்தி இருக்கின்றதா? இதையெல்லாம் பார்க்கும்போது நம் கல்வி முறையானது மேல்நாட்டு கல்வியைப் பரப்பும் முகவர்களாகச் செயல்படுகிறோமோ என்கிற ஐயம் எழுகின்றது. மேலும் அக்கல்வியில் சொல்லப்பட்டது முற்றிலும் சரி என்று ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் தலை சுற்றும் அளவிற்கு பலவகை நிரூபணங்கள் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்து நம்நாட்டில் ஜி.டி. நாயுடு,  சர் சி.வி.ராமன் பிறகு (சமீபமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயாவைத் தவிர) இந்தியாவில் மக்களுக்குப் பயன்படும் வகையில் எந்த ஒரு அரிய பெரிய கண்டுபிடிப்போ, பொருளாதார முன்னேற்றமோ, குறைந்த செலவில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வழியையோ, எளியோர்களும் ஊட்டச் சத்து அதிகம் கொடுக்கும் விவசாய பொருட்களோ, உடல் சுகாதாரம் காக்கும் மருந்து வகைகளோ தந்திருக்கின்றனரா? விலைவாசியும் வரியும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டு இருக்கும் காரணம், அன்றாடம் மக்களுக்கு பயன்படும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமையே. 

வெறும் ஆயுதம் வாங்குவதற்கும், விளையாட்டுகளிலும், அண்டை கிரகம், நிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவதால் வந்த வினைதான். மக்களை அந்தப்பக்கம் திசைதிருப்பி இயல்பு மற்றும் இயற்கைக்கு மாறாக செய்வதால்தான் இந்தப் பிரச்சினை. உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்! படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற வேலைக்கும், நடக்கின்ற தொழிலுக்கும், இப்போது இருக்கும் சேவைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? இதுலே என்ன கொடுமை என்றால் பத்தாவது படித்தாலே போதும் என்று இருக்கும் சாதாரண அரசுவேலைக்கு பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, ஏன் முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிப்பது எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. அதுலேயும் போட்டித்தேர்வு என்று சொல்லி படித்தப் படிப்பை கேலியாக்கும் நிலை என்னவென்று சொல்லுவது! பணம் சம்பாதிப்பது இதுவும் ஒரு வழி என்றே சொல்லத் தோன்றுகிறது.

கல்வியில் இவ்வளவு குழப்பம் இருக்கும்போது அரசியலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மேலும் கல்வி கற்றவர்களை விட அதிக சம்பளம், அதிக வசதி, அதிக அதிகாரம்! அவர்களுக்குக் கீழ்தான் எப்பேர்ப்பட்ட படிப்பு படித்தவர்கள் இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை அல்லவே! எப்படி இருக்கின்றது இந்த நடைமுறை? மக்களின் உழைப்பு மாட்டுக்குச் சமம் என்கிற பாணியில், மனித எண்ணங்கள் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டு இருக்கின்றது. 'மாற்றம் வேண்டும்!, மாற்றம் வேண்டும்!' என்று உலகம் போடும் கூச்சலில் மக்கள் வாடும் நிலையும், வாழும் அவலங்களையும்அழும் குரலும் கேட்காமல் செய்து வருகின்றது. இப்போதுள்ள போட்டி ஒரு துறையை அழித்து ஒரு துறை வெற்றி பெறுகின்றது. அதாவது வெகு அழகாக இருகோடு தத்துவத்தைச் செயல்படுத்தி வெற்றி பெற்று வருகின்றார்கள். அதாவது பெரிய கோடு சிறியதாக ஆக்கவேண்டும் என்றால் சிறிய கோட்டை கொஞ்சம் இழுத்து வரைந்து பெரிய கோடாக மாற்றுகிறார்கள். அதுவும் சில நாளைக்கு. பிறகு வேறொரு துறை.. என்று மாறி மாறிக் குறி வைக்கிறார்கள். இது விரைவில் ஒரு இனம் மற்றொரு இனத்தை அழிக்கும் எமனாக மாறினாலும் அதைப்பற்றி கவலைப்படுபவர்கள் வெகு சிலரே. 

சரி இப்படியே போனால் உலகம் கடைசியில் என்னவாகும்? மக்கள் என்னாவார்கள்? எப்படி இருப்பார்கள்? மனித வாழ்க்கை நலமாக இருக்குமா? என்றால் கட்டாயம் மிகவும் நலமாக இருப்பார்கள் என்கிற பதிலே வரும்! ஏன் ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆனால் உண்மையும் கூட. ஏனென்றால் ஒரு காலத்தில் திருப்பும் பக்கம் எல்லாம் காடாக இருந்த மரம், செடி, கொடி தாவர இனம் இப்போது அதிக அளவில் குறைந்து விட்டது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிந்த விசயம். அதேபோல் காடுகளில் சகசமாகத் திரிந்த ஐந்தறிவு வரை உள்ள பல உயிரினங்கள் வெகுவாகக் குறைந்துஇப்போது கண்காட்சிப் பொருளாக இருக்கின்றது. அந்த வரிசையில் மனித இனம் மட்டும் எவ்வாறு பெருகும்? கொஞ்சம் கொஞ்சமாக அதன் உற்பத்தி சூழல் குறைந்து கொண்டே வருகின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்ஒரு கட்டத்தில் மனிதக்கூட்டம் சுருங்கி சுருங்கி தனித்தனியே வாழும் நிலை உண்டாகும். அப்போது மீண்டும் தாவர இனங்கள் , விலங்கினங்கள் பெருகும் அதன்பிறகே மனித இனம் மீண்டும் தழைக்கும்! இதனைப் பற்றிய விழிப்புணர்வு இப்போது இருக்கும் கல்விப்பாடம் சொல்லித் தருகின்றதா? மேலும் உலகத்தில் உள்ள அரசியல்வாதிகளின்,  பணக்காரர்களின் கல்வித் தகுதியினைப் பாருங்கள். அவர்கள் சராசரியாக இருப்பதைக் காணலாம். பல பட்டம் பெற்றவர்கள் அவர்களுக்கு அடிமையாக இருப்பதைக் காணலாம். ஆனால் அவர்கள் படிப்புதான் கெளரவம் கொடுக்கும் என்கிற மாயையை மக்களிடையே பரப்பி வருகிறார்கள். அந்தக் கவர்ச்சியில் மக்கள் மயங்கி இப்போது சிக்கித் தவித்து வருவதை அப்பட்டமாகத் தெரிகிறதல்லவா?  

தகவல் தொழில்நுட்பம் மக்களை இயல்பான இயற்கையாய் இருக்கச் செய்வதற்கு பதிலாகக்  கவர்ச்சியானக் கற்பனை உலகத்தில் மிதக்கச் செய்கிறது. யாரோ ஒருவன் எதையோ செய்து பணம் சம்பாதிக்கிறான் என்று போட்டுக்காட்டி அதேபோல் நீங்களும் ஆகுங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது. ஆனால் அதை நம்பி தினமும் ஏமாறுபவர்களின் எண்னிக்கை கூடிக்கொண்டே போகிறது. எந்த ஒரு தொழிலை  எடுத்துக்கொண்டாலும் பெரிய பெரிய நிறுவனமும் போட்டிக்கு வருகின்றது. அவர்களுக்குத் தான் அரசு கோடிக்கணக்கில் கடன் தந்து ஊக்குவிக்கின்றது. உதாரணமாக காய்கறி கடை. இது சாதாரணமாக உள்ளவர்கள் வியாபாரம் செய்வார்கள். ஆனால் பலசரக்கு, காய்கறி, சினிமாஉணவகம் என்று பலதுறைகளில் பெரிய நிறுவனங்கள் கால் பதித்து சாதாரண மக்களின் வியாபாரத்தில் மண்ணள்ளி போட்டு வருகின்றனர். இது பற்றி கல்வி பாடத்தில் சொல்லித்தரப்படுகின்றதா? மேலும் லஞ்சம், ஊழல் செய்யும்படி எந்தப்பாடத்திலாவதுச் சொல்லி இருக்கின்றதா? அப்படி இல்லாதபோது இப்போது அனைத்துத் துறைகளிலும் பொதுவாகவே ஊழலும், லஞ்சமும் மலிவாக காணப்படுகின்றனவே? ஏன்? ஏனெனில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் பணம் கொடுத்து  பதவிக்கு அமர்ந்துள்ளதால் இந்த பிரச்சனை! இது தீராது. மாறாது!இப்படித்தான் உலகம் இருக்கும். இதற்கு மத்தியில் தான் வாழ்க்கை இருக்கும். நாம் வாழ்ந்து தான் ஆகவேண்டும். அது உண்மை தானே.  

கல்வி கற்பது எதற்கு? என்றால் அது வாழ்க்கைகுப் பயன்பட வேண்டும் என்பதற்காகவேஇன்று கல்வி கற்ற அதிலும் பலப்பட்டங்களைப் பெற்ற கல்விமான்களுக்கு வேலை கிடைக்கவில்லைபொதுவாக வியாபாரம் எப்போது நன்றாக நடைபெறும் என்றால் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதை கொடுத்தால்தான் வாங்குவார்கள்ஆனால் கல்வி விசயத்தில் அவ்வாறு இல்லைதேவை ஒன்றுகற்பது வேறொன்றுஇரண்டும் வேறு வேறு திசைகளாக இருக்கின்றதுபின் ஏன் கல்விக்கு இவ்வளவு மரியாதைஅதுதான் வியாபாரத் தந்திரம்மனித வாழ்க்கையினை மற்றும் சமூகத்தினை உயர்த்தாத கல்வி கற்று என்ன பயன்உடல் உழைப்பை கொஞ்சம் கூட மதிக்காத கல்விமுறையால் சாதனைகள் பிறக்குமாஇளம்வயதில் வெயில் படாமல்மழையில் நனையாமல்ஓடி ஆடி விளையாடாமல் குளிர் அறையில் கற்ற கல்வி மக்கள் இனத்திற்கு எங்ஙனம் நன்மை பயக்கும்இன்றையக் கல்விமுறைக்கு ஒரு சிறிய உதாரணம்ஒரு மிகப்பெரிய வியாபாரக்கூடம்அங்கே மக்களுக்குத் தேவையான எல்லா பொருட்களும் (உணவு வகைகள் உட்படஇருக்கின்றனமுதலில் மக்கள் உணவு வகைகளைத்தேடித்தான் (எந்த படிப்பு படித்தால் உடனே வேலை கிடைக்கும்போவார்கள்ஆனால் அங்கே சொற்ப அளவே இருக்கும்அது சிலருக்குத்தான் கிடைக்கும்அவர்கள் மனநிலை ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும்! என்று வேண்டாது ஒன்று வாங்குகின்ற மனநிலைக்கு வந்துவிடும்ஆகையால்தான் இளைஞர்கள் வாழ்க்கைக்குப் பயன்படாதக் கல்வியினைக் கற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் இரயில்வே துறையில் 90,000 காலி இடங்களுக்கு இரண்டு கோடிபேர்கள் விண்ணப்பித்ததாக ஒரு செய்தி வந்ததுஇதில் என்ன ஒரு கூத்து என்றால் 12வது படித்தால் போதும் என்பது தான்இந்த வேலைக்கா பட்டப்படிப்பை படித்தார்களஅந்த பட்டபடிப்பு வீண்தானேஆனால் இது அரசு மற்றும் கல்விதுறை தந்திரம்பலர் விண்ணப்பித்தால் அதைக்காட்டி கல்வியை நன்றாக வியாபாரம் செய்யலாம் அல்லவாமேலும் அதற்கான பயிற்சி மையங்கள் வேறுஅதிலும் வியாபாரம்இப்போது சொல்லுங்கள் கற்ற கல்விக்கும், தேர்வுக்கும், வேலைக்கும் சம்பந்தம் இருக்கின்றதாமேலும் நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் அவ்வாறு கோடிக்கனக்கான போட்டியாளர்களைத் தாண்டி வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் செய்யும் வேலையின் தரம் உலகமே சிரிக்கின்றதுநேரம் தவறாமைநேர்மைநியாயம்ஊதியத்திற்கேற்ற வேலை இவைகளை அங்கே காணமுடிகின்றதாஅப்படியென்றால் வேலைக்கிடைக்காத மற்றவர்கள் இவர்களைவிட  மோசமானவர்களாஅப்படி இல்லைதகுதியில்லாதவர்கள் பணம் மற்றும் சிபாரிசுகளினால் வேலை பெற்று வேலையின் மரியாதையை கெடுப்பதாகவே தோன்றுகின்றதுலட்சக்கனக்கான கோடிக்கனக்கான மக்களைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள்எம்.எல்.ஏக்கள்எம்.பிகள்அமைச்சர்கள்கவர்னர்கள்ஜனாதிபதிகள் எவ்வாறு ஆட்சி செய்கின்றனர்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்இவர்களைவிட நம்மிடம் அதிக அறிவுபுத்திசாலிதெளிவான ஆட்கள் இல்லாததால்தானா இவர்கள் நம்மை ஆளுகிறார்கள்அப்படி இருக்கும்போது நாடு எவ்வாறு முன்னேறும்அதில் சிலர் விதிவிலக்காக இருப்பது உண்மை. இறந்த அல்லது இருக்கின்ற சிலரின் புகழைபேரைசெயலை வைத்துக்கொண்டுதான் காலம் தள்ளுகிறார்கள்நிலைமை மாறாமல் இப்படியே தொடர்ந்தால் 2025 என்ன 2050 ஆனாலும் முன்னேற்றம்  என்பது கானல்நீராகவே இருக்கும்!

ஒருவேலை போட்டிபொறாமைலஞ்சம்ஊழல்முறையற்ற செயல்களைத் தான் கல்வி சொல்லித்தருகின்றதோ என்கிற அச்சம் வருகின்றதுஅப்பதவிக்கு நேர்மையானவர்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மையோஅம்மாதிரி கல்வியில் விதைத்த விதை வேலை கிடைத்த பின்னே மரமாக வளருகின்றதோபணம் செலவழித்துகடன்பெற்று கற்ற கல்வி, வேலையில்லா திண்டாத்தத்தால் வீணாகி விடுகிறதேஇங்கு சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்தும் திறமையான ஆட்கள் இல்லாததே காரணம். நேர்மை மிக்க பல இளைஞர்களை இக்காலக் கல்விமுறை உருவாக்குவதில்லையேபணம் செலவழித்துப் பல பட்டங்களை பெற்றபின்னேதான் கற்றது வீண் என்று தெரியவருகிறது.

இன்னும் சொல்லப்போனால் வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை என்று இருப்பவர்களே கல்வியைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களாகவிரிவுரையாளர்களாக இருகிறார்கள்அவர்களால் எப்படி சிறந்த இளைஞர்களை உருவாக்க முடியும்அதிலும் அவர்களுக்கு அதிக சம்பளம் வேறுநடைமுறையில் குறைந்த கல்வி கற்றவர்களே கண்டுபிடிப்பாளர்கள் ஆகவும்தொழிலதிபர்களாகவும்அரசியல் தலைவராகவும் வருகிறார்கள்ஏனென்றால் அவர்களுக்குத்தான் இன்றைய மக்களுக்கு என்னத் தேவை என்கிற சிந்தனையும்தெளிவும்சுதந்திரமான எண்ணங்கள் இருப்பதேநாளுக்குநாள் மாறுகின்ற மனப்போக்குபுதிய புதிய வரவுகள்வியாபார உக்திகளைப் பற்றிய விவரங்கள்தகவல்கள் இன்றைய கல்வி தருகின்றதா?  

வெறும் மனப்பாடம் செய்யும் கல்வியும்எந்த கேள்விக்கும் உடனடி பதில் தரும் பாடமுறையால் புதுப்புது பிரச்சனைகளை தீர்க முடியுமாஇன்னும் சொல்லப்போனால் கேள்விகளைச் சிறிது மாற்றியோ அல்லது சிக்கலாகவோக் கேட்டால் பதில் தெரியாது விழிப்பார்கள்கணித்தத்தில் வேறு எண் மாற்றிக் கேட்டால் பதில் தவறாக அளிப்பார்கள் என்பது உண்மை தானேஅனைத்துத்துறைகளில் அடிப்படை கல்வியை கற்றாலே போதுமானதுதினம் தினம் மாறும் அல்லது புதுப்புது சட்டங்கள்ஜி.எஸ்டி வரிகள்மண்வளம்கனிம வளம்கணினி மற்றும் ஆண்டிராய்டு செயலிகளின் படிப்புகள்மழைநீர் சேகரிப்புஇயற்கை விவசாயம்நதிநீர் இணைப்புபசுமை சூழல்நீதி நெறிசுற்றுபுறச்சூழல் பாதிப்புமக்கள் தொகைவிலைவாசிதொழில் வாய்ப்பு, கைத்தொழில்நிதிநீர் மேலாண்மை, பொருளாதாரம் போன்றன இன்றைய கல்வியில் அனைத்து வகுப்பு பாடங்களில் பிரதிபலிக்கின்றனவாஇல்லைஏனெனில் எங்கோ இருக்கும் நாட்டின் கல்வியை இங்கு கற்றுக்கொடுத்தால் அது கல்விப் பிரச்சாரம் என்றுதானே சொல்ல வேண்டும்இங்கு படைப்புத்திறன் கேள்விக்குறியாக இருக்கின்றதுஅத்தகைய படிப்புகளை சொல்லித்தரும் ஆசிரியர்கள் இல்லைஆகையால் அரைத்த மாவையே அரைத்து வருகிறார்கள்சரளமாக ஆங்கிலம் பேசினால் அறிவு வளர்ந்துவிடுமாஅப்படி மயங்கித்தான் இப்போது உண்மையான கல்வியை இழந்துவருகிறார்கள்.

ஆகையால் அச்சு எழுத்துகளை மனப்பாடம் மட்டும் செய்யாமல் செயல் வடிவில் நிறைவேற்ற வேண்டும்அதோடு பண்புமரியாதைநல்லநெறிகள் கல்வி கற்றுத்தர வேண்டும்வாழ்க்கைப்பாடத்திற்கும் கல்விப்பாடத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி எப்போது குறைய ஆரம்பிக்கின்றதோ அப்போது முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருக்கும்முதலில் கண்ணுக்குத் தெரியும் பிரச்சனைகள் தீர்க்கும் கல்வி இருந்தாலே சுயமான பல சிந்தனைகள் உதிக்கும்உதாரணமாக பசியால் மக்கள் வாடுகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம்அதற்கு விவசாய அறிவுமண் வளம்நீர் வளம்உழைப்பு ஆகியற்றை பெருக்க அனைத்து வகுப்புகளில் செல்லித் தருவதுடன் கல்வி நிறுவனங்கள் மாதிரி கிராமத்தை உருவாக்க வேண்டும்அதன் மூலம் கிடைக்கும் பலனை கண்ணால் பார்த்தாலே அதன் மூலம் பல புதிய எண்ணங்கள் உருவாகி அதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். ஆக எவ்வளவு சீக்கிரம் மக்களின் நலன் காக்கும் கல்வியும், ஆராய்ச்சியும், விவசாயமும் கல்விக்கூடத்தில் பிரதிபலிக்கின்றதோ அப்போது தான் விடிவுகாலம் வரும் என்பது உறுதியாகச் சொல்லலாம்.
நன்றி, வணக்கம்.
***************


No comments:

Post a Comment