29.4.18 நிலா இலக்கிய மன்றம் - 
5வது ஆண்டு விழா - 
கவியரங்கம் - மின்படங்கள் 
அன்று நான் வாசித்தக் கவிதை இதோ ..
       தமிழகக் கப்பல்
        புதுக்கவிதை
    மதுரை கங்காதரன் 
பகட்டு வாக்குறுதிகளை நம்புகிறோம்
பணத்திற்கு வாக்குகளை விற்கிறோம் 
மக்களாட்சி அரசியல் நிமிரவில்லை
மகிழ்ச்சி ஏழைகளின் கனவிலுமில்லை.
கரையில் வாழும் மீனவர் வாழ்வு
தரையில் விழுந்த கயலாய்த் துடிக்குது
கடலாய் விரியும் மீனவர் பிரச்சனை
கண்ணீரில் நனையும் விழியாய் மிதக்குது.
கணினி உலகம் மனிதர்களை மயக்குது
கற்கண்டாய்க் கண்கட்டு வித்தைக் காட்டுது
பிழைக்க விருப்பின்றி கைப்பேசியில் மூழ்குது.
உழைக்கும் இளைஞர் பருவம் வீணாகுது.
ஊழல் வேலை ஓய்வில்லாமல் நடக்குது
உண்மைக்குப் புறம்பாய் ஒழுங்காய் நடக்குது 
ஆண்டவனிடம் முறையிட தட்சனை கேட்குது
ஆட்சியாளரிடம் முறையிட லஞ்சம் கேட்குது.
கல்விச் சாலைகள் கருணை இல்லாதுபோகின்றது
காவேரி உரிமை விவசாயம் இழந்துநிற்கின்றது 
சுயநலம் கூடிப் பொதுநலம் தேய்ந்துபோகின்றது
சுரக்கும் இதயம் இரக்கமின்றிக் காய்ந்துபோகின்றது.   
எந்நாளும் ஏமாளிகளாய் நாம் ஏமாந்துவிடாமல்
எதிர்காலத் தமிழ்நாடு உன்னதம் அழிந்துவிடாமல் 
தமிழகக் கப்பலை தரைத்தட்டாமல் கடக்கத் 
தலைச்சிறந்த மாலுமி இனியாவது கிடைப்பாரா? 
எனக்கு அளித்தப் பரிசுகள் இதோ...
 *****************************

















































































































































No comments:
Post a Comment