Pages

Friday, 15 June 2018

13 - 6 - 18 சங்கப் புலவர் கவிதை அரங்கேற்றம் - உலகத் தமிழ்ச் சங்கம் மதுரைசுமார் 120 கவிஞர்களின் 'சங்கப் புலவர்' சங்கமமும்,
கவிதை அரங்கேற்றமும் இதோ...  


      சென்ற 13.6.2018 - புதன் கிழமை அன்று, முதன்முதலாக உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 'தமிழ்ச் சங்கம்' என்கிற தலைப்பில் சுமார் 120 தமிழ்க் கவிஞர்கள் பங்கு பெற்ற  'சங்கப் புலவர்' கவிதை அரங்கேற்றம் எனும் நிகழ்ச்சியானது கவிதைக்  கலைமாமணி திரு சி. வீரபாண்டியத் தென்னவன், தலைவர், மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை அவர்களின்   தலைமையில் வெகு விமரிசையாக நடந்தது. அந்த நிகழ்வில் நெறியாளர்களான முனைவர் பேராசிரியர் சி. சக்திவேல், முனைவர் இரா.வரதராசன் மற்றும் பாவலர் திரு பாலுகோவிந்தராசன் அவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. மேலும் இவ்விழாவிற்கு ஒப்புதலும் அதனை ஒருகுறையும் இல்லாமல் ஏற்பாடு செய்துகொடுத்த முனைவர் திரு கா.மு. சேகர் - இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம் அவர்களுக்கும் மற்றும் அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரின் சார்பில் எனது நன்றியினைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

·    காலை 9.00 மணியிலிருந்து கவிஞர்களின் வருகைப் பதிவு நடந்தது.

·    ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு எண் வில்லை கொடுக்கப் பட்டது

· முதலில் வருபவருக்கு முதலில் கவிபாட அழைப்பு தருவதற்காகவே இந்த எண் வில்லை தரப்பட்டது 

· விழாவானது, சரியாகக்  காலை 9.30 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

·  முனைவர் .சோமசுந்தரி, ஆய்வறிஞர் .. மதுரை அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

·   ஒவ்வொரு கவிஞர்களுக்கும் இரண்டரை மணித்துளிகள் (அதிகபட்சம்) வழங்கப்பட்டது.

· விழாத் தொடக்கமாக முதல் கவிஞரும் இவ்விழா நடத்த உறுதுணையாக இருந்த  முனைவர் ஆதி நரசிம்மன்  அவர்கள் கவிபாடினார்.

·  அதன் பிறகு அனைத்துக்  கவிஞர்களும் கால அளவைச் சரியாகக் கடைபிடித்து 'நேர மேலாணமைக்கு' முன்னுதாரணமாக நடந்துகொண்டார்கள் என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதனால்  சரியாக மதியம் 1.30 மணி அளவில் கவியரங்கம் நிறைவு பெற்றது.

· இந்நிகழ்ச்சியில் கவிதைப் பாட மதுரைக் கவிஞர்கள் உட்பட தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும், அண்டை மாநிலத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் (கவிஞர் சிசிமா அமித்) மற்றும் துபாயிலிருந்தும் (கவிஞர் காவேரி மைந்தன் ) கலந்து கொண்டனர் என்பதே இவ்விழாவின் சிறப்பாகும்

· முனைவர் சி.புவியரசு, மின்னிதழ் உருவாக்குநர் ... மதுரை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

· நிறைவாக 'நாட்டுப்பண்' இசைக்க விழாவானது  அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இனிதே நடந்து முடிந்தது.

· எல்லோருக்கும் மதியவேளைச் சுவையான உணவருந்துவதற்கு 'உலகத் தமிழ்ச் சங்கம்' நன்றாக ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பு : கவிபாடிய அனைவருக்கும் 'சங்கப் புலவர்' என்கிற சான்று வரும் 21.6.18 அன்று மாலை சுமார் 4.00 மணி அளவில் உலகத் தமிழ்ச் சங்கம் வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கவிபாடிய அனைத்துக் கவிஞர்களும் தவறாது கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்துத் தருமாறு மாமதுரைக் கவிஞர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி 

வணக்கம் 

மாமதுரைச் தமிழ்ச் சங்கம், மதுரைக்காக 
கு.கி.கங்காதரன் 

அன்று நான்வாசித்த கவிதை இதோ...

             தமிழ்ச்சங்கம்

மூவேந்தர்கள் ஆண்டத் தமிழ்நாட்டில்
மீண்டும் தமிழ்க்கவிஞர்கள் சங்கமம்.
முச்சங்கம் வளர்த்த மாமதுரையில்
மீண்டும் தமிழ்ச்சங்கம் உதயம்.

தமிழர்களுக்குத் தமிழ் உறவு நிலைக்க
தமிழ்ச்சங்கம் நித்தமும் நட்பாய் நிற்கும்
தடம் மாறிச் செல்லும் தமிழை
தமிழ்ச்சங்கம் வடம் கட்டி மீட்கும்.

கோடிபணம் உறவையும் நட்பையும் மறக்கலாம்
கோடாளி வேரையும் மரத்தையும் வெட்டலாம்
தமிழறிஞர்களின் உடலும் உயிரும் மறையலாம்
தமிழ்ச்சங்கம் தமிழையும் இனத்தையும் காக்கும்

இலக்கு உள்ள வாழ்க்கை செழுமை தரும்
இலக்கணம் உள்ளத் தமிழ் மேன்மை தரும்
யாப்பு அறிந்து கவிப்புனைந்தால் இனிமை தரும்
யாவரும் தனித்தமிழ் பகிர்ந்தால் வளமை தரும்.

செதுக்க செதுக்கக் கல்லும் சிலையாகும்
சுவைக்க சுவைக்க தமிழும் அமுதாகும்
தீட்டத் தீட்ட அறிவும் விருத்தியாகும்
தீண்டத் தீண்ட தனித்தமிழும் தங்கமாகும்.

தொன்மைத் தமிழ் கூற்றை மெய்ப்பிக்க
தவித்த தமிழகளின் தாகம் தீர்க்க
அந்நிய மொழிகளின் மோகம் தடுக்க
அனைவரும் தனித்தமிழை முழங்கிடுவோம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அன்றைய விழாவின் மின்படங்கள் இதோ...
  

 


 நன்றி ... வணக்கம் 


No comments:

Post a Comment