Pages

Saturday 13 March 2021

ருசி கண்ட கணவன் or ருசி வைத்தியம் - சிறுகதை மதுரை கங்காதரன்


ருசி கண்ட கணவன் 
(ருசி வைத்தியம்)
சிறுகதை
மதுரை கங்காதரன் 
  கந்தசக்தி-கலையரசி இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.   கந்தசக்திகலையரசியை 'கலைஎன்று அழைப்பது மிகவும் பிடிக்கும்.  கந்தசக்தியின் எல்லா விடயங்களும் ஒத்துப்போன கலையரசிக்குஅவனின் நாக்கு ருசியை மட்டும் புரித்துகொள்ள முடியாமல் திணறினாள்.
         
  கந்தசக்தியின் நாக்கு கேட்கும் ருசிரொம்பவே அதிகம்ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு முறையாவது பிரபல சிற்றுண்டிச் சாலையில் வயிறு நிறைய ருசிக்க ருசிக்கச் சாப்பிட வேண்டும்இல்லாவிட்டால் அவன் ஏதோ பெரிதாக ஒன்றை இழந்துவிட்டதாகவே எண்ணி மந்தமாக இருப்பான்அப்படி ஒரு ருசி பைத்தியம்கல்யாணத்திற்கு முன் அவனின் அப்பாஅம்மா "கந்தா, வீட்லே இல்லாத ருசி, வெளியிலே சாப்பிடுறதிலே அப்படி என்னடா ருசி இருக்கிறது?" என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காத அந்த நாக்குபுதிதாக வந்த மனைவி சொல்லியா கேட்கப்போகுது?

  கந்தசக்தியின் இந்த பிடிவாதம்கலையரசிக்குப் பிடிக்காவிட்டாலும் 'நான் வெளியில் சாப்பிட வரமாட்டேன்என்று முரண்டு பிடிக்காமல் அவனோடு சென்று சாப்பிட்டு வருவாள்.

  "ஏங்கநீங்க சம்பாதிக்கின்ற பணத்திலே ஏதோ கொஞ்சம் பணம் மிச்சமாகுதுஅதையும் இப்படி வெளியே போய் சாப்பிட்டா என்னங்க மிச்சமிருக்கும்நாளைக்கு நமக்கு ஒரு குழந்தை பிறந்தா அதுக்கு ஏதாவது சேர்த்து வைக்க வேண்டாமா?" என்று ஒரு தாய்க்குரிய கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பேசுவாள்.

  "கலை.. உன்னோட அக்கறைக்கு எனது பாராட்டுகள்ஆனாலும் இப்போது அனுபவிக்காம நாம் எப்போது அனுபவிக்கிறது?" என்று சொல்லியே அவள் வாயை அடைத்துவிடுவான்.       

  'ம்.. இவரைஇவர் வழியிலே போய்தான் இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்என்று கங்கணம் கட்டிக்கொண்டாலும் நல்லவேளை வரும்வரையில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வாள்

  அன்றும்

  "கலைஇன்றைக்கு நாம் வெளியே சாப்பிடப்போகிறோம்ஆகையால் ஏதும் செய்ய வேண்டாம்என்று மென்மையானக் குரலில் செல்லமாய் காதில் சொன்னாள்.

  "ம்என்று சம்மதத்திற்கு அடையாளமாய் ஒலியெலுப்பியதோடு பார்வையிலும் பதில் சொன்னாள்.

  திட்டமிட்டவாறு புதிதாய் திறந்திருந்த அந்த சிற்றுண்டிச்சாலையின் உள்ளே நுழைந்தனர்அங்கே எல்லா இடங்களைக் காட்டிலும் விலை எக்குத்தப்பாக அதிகமாய் இருந்தாலும் ஏதோ எல்லாமே இலவசமாய் கொடுகிறார்கள் என்பதுபோல் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததுசற்று நேரம் கழித்தே அவர்கள் இருவருக்கும் சாப்பிட இடம் கிடைத்தது.

  இடம் கிடைத்தது பெரிய சாதனை போல் கலையரசியைப் பார்த்தான் கந்தசக்திஅதன் அர்த்தம் ' 'பார்த்தாயா கூட்டம்இங்கே சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்என்கிற தொனியில் இருந்தது.

  ஒருவாறு திருப்தியாக கந்தசக்தி சாப்பிட்டாலும் கலையரசி எப்போதுமே அளவோடு சாப்பிடுவாள்ஏனென்றால் கலையரசி வெளியில் சாப்பிட அவ்வளவாக விருப்பப்படமாட்டாள்மேலும் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவள்.

  மறுநாள்

  நேற்று வெளியே சாப்பிட்டனவற்றை விளம்பரப்படுத்துவதுபோல் வீட்டிலும் ஒன்றுவிடாமல் புகழ்ந்து தள்ளினான்.

 "ஆகாஎன்னதான் சொல்லுஅந்த சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட இட்லிதோசைபுரோட்டா என்னமா இருந்தது? வகைவகையான சட்னிசம்பார் எல்லாமே தூள்என்று பெருமையாகப் பீத்திக்கொண்டான்.

  அதுமட்டுமா? "நானும் எவ்வளவு தடவை உனக்கு சொல்வதுமாங்கு மாங்குன்னு சமையலே கதின்னு இருந்தது போதும்ஏதாவது ஒருவாரமாவது முழுமையா வெளியேபோய் சாப்பிடுவோமாஅதாவது நீ சமையலே மறந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கனும்என்று இப்படி ஒவ்வொரு முறை கந்தசக்தி சொல்லும் போதெல்லாம் 'கலையரசிஒரேஒரு புன்னகையினை வீசிவிட்டு அமைதியாகிவிடுவாள்.

  "ஆமாஇப்படி சிரித்தால் என்ன அர்த்தம்என்று கேட்டாலும் அதற்கும் அமைதியான பார்வையே பதிலாக பிரதிபலிப்பாள்.        

  அன்றும் 

  சாப்பிடும்போது, "என்னதான் நீ ருசியா சமைத்தாலும் நேற்று சாப்பிட்ட..." என்று வழக்கம்போல் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்ட ருசியின் விளம்பரம் ஓடும்இதற்கு அவள் முகத்தில் காட்டும் பாவனையினையை பதிலாக எதிர்பார்ப்பான்.

  ஒருநாள்

  "நீங்க என்மேலே இந்த அளவுக்குப் பாசமா இருக்கீங்கஉங்களோட விருப்பத்தை நான் இப்போது நிறைவேற்ற ஆசைபடுகிறேன்நாளையிலிருந்து ஒருவாரம் நாம் வெளியேதான் சாப்பிடப்போகிறோம்சரிதானேஎன்று இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாள் கலையரசி.

  "உண்மையாகவாஎன் கலையா பேசுவதுஆக அடுத்த ஒருவாரம் சமையலறை பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டாய்அப்படித்தானே!" என்று சொல்லி மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினான் கந்தசக்தி.

  அன்றுமுதல் ஒருவாரம் சமையலுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு புதிய புதிய சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று புதுப்புது உணவுப்பதார்த்தங்களை ருசிக்க ஆரம்பித்தான்.

  முதல்நாளில் ஆர்வத்துடன் ரசித்து ருசித்து சாப்பிட்டான் கந்தசக்தி.

  தன்னுடைய அந்த மகிழ்ச்சியை கலையரசியுடன் பகிர்ந்து கொண்டான் கந்தசக்தி. 
     
 "பார்த்தாயா கலைஇப்போது எப்படி இருக்குபோனோமாஉட்கார்ந்தோமா, சாப்பிட்டோமாகைகழுவினோமாவந்தோமா    என்று இருக்கனும்" என்றான் கந்தசக்தி.

     அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் மெல்லிய புன்னகை மட்டும் உதிர்த்தாள்.

  இரண்டாவது நாள் சாப்பிடும்போது முதல்நாளில் சாப்பிட்டபோது முகத்தில் இருந்த மகிழ்ச்சிபோல் இல்லாமல் சற்று குறைந்திருந்தது.

   மூன்றாம் நாள் சற்று சலிப்புடன் இட்லிதோசையை சாப்பிட்டான்.
நான்காம் நாள், "கலைஇன்று கட்டாயம் வெளியில் சாப்பிடத்தான் வேண்டுமா    

  "என்னங்கநீங்க தானே சொன்னீங்கஒரு வாரம் பூரா..." என்று கலையரசி பேசி முடிப்பதற்குள்

  "போதும்போதும் நான் சொன்னது ரொம்பத்தப்புநான் சொன்னதை திரும்பி வாங்கிக் கொள்கிறேன்என்று 'தன்னை ஆளைவிட்டால் போதும்என்கிற நிலமைக்குத் தள்ளப்பட்டான் கந்தசக்தி.

   "என்னங்க சொல்றீங்க?"

  "பின்னே என்னஒரே மாதிரியான சட்னிசாம்பார்உணவு வகைகள் அதோடு ஒரே மாதிரியான ருசிஎனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.

  கலை, இன்றைக்கு இப்போதே நீ என்றைக்கும் செய்வீயேபஞ்சு போல மென்மையான சப்பாத்திகமகம என்று மணக்கும் குருமாஅந்த இரண்டையும் செய்து தருவாயா?"

   "என்னங்கஉங்களுக்கு இல்லாததாஇன்னும் அரைமணி நேரத்தில் உங்க கண் முன்னே இருக்கும்என்று தன்னுடைய இதுநாள் கற்றுத்தேர்ந்த சமையல் கலைக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோல் சுறுசுறுப்பாக மளமளவென்று வேலையை ஆரம்பித்த கலையரசி. வெகுசீக்கிரத்தில் சுடச்சுட சப்பாத்திகுருமா தயார் செய்து அவன் முன்னே வைத்தாள்.

  பிறகு சப்பாத்தியை தட்டில் வைத்து அதன்மேல் குருமா ஊற்றினாள்.       
கந்தசக்தி அவசரம் அவசரமாக சப்பாத்தியின் சிறிய பகுதியை ஒரு கிள்ளு கிள்ளிகுருமாவில் நனைத்து சட்டென்று வாயில்போட்டு ருசித்துக்கொண்டே மென்று தின்றான்.

    "கலைசும்மா சொல்லக்கூடாதுஎங்கே அலைந்தாலும் இந்த ருசி எங்கேயும் கிடைக்காது என்று நான் அடித்துச்சொல்வேன்ஆமாஅந்த அளவுக்கு நீ என்னதான் சேர்த்திருக்கிறாய்இதற்கு கட்டாயம் பதில் சொல்லியேத் தீரவேண்டும்" என்று அடம்பிடித்தான் கந்தசக்தி.

  "ம்... அப்புறம் தினமும் ஒரே ஒருவகை உணவும்தொட்டுக்க சட்னியும் சாம்பாரும் செய்தாலும் வாய்க்கு ருசியாக எப்படி உன்னால் செய்ய முடியுதுஇந்த ருசி வெளியில் கிடைக்கலையேஇரண்டு மூன்று நாள்லே நாக்கு செத்துபோயிடுதே ஏன்என்கிற இவனின் பல கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள ஆசைபட்டான்.

  "அது வேறு ஒன்றுமில்லேங்கஒவ்வொரு உணவுலேயும் என்னோட அன்பு கலந்திருக்குஅதுதான் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டோட அதிக ருசிக்குக் காரணம். என்னைத் தவிர வேறுயாராலும் இந்த மாதிரி அன்பை சேர்த்துச் சமைக்க முடியாதுஇந்த அன்பு ஒவ்வொரு துளியிலும் ஒட்டி இருக்கும்என்று தனது சமையல் ரகசியத்தைத் தெரிவித்தாள் கலையரசி.

    "கலைஇனிமேல் வெளியில் சாப்பிட வேண்டும் என்று சொல்லவே மாட்டேன்.. பிறகு அந்த பணத்தை உன் விருப்பப்படியே நமக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக சேர்த்து வைக்கலாம்" என்று கந்தசக்தி சொல்லிய பிறகுதனது பொறுமைக்குப் பலன் கிடைத்தது எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் கலையரசி
                          ***********************

No comments:

Post a Comment