மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு வணக்கம்
தலைப்பு
பத்துமொழி படித்தாலும் முத்தமிழைபடி
முதலில்
முதலில்
வழங்குபவர் : கவிபாரதி கு.கி.கங்காதரன், மதுரை
அன்னை ஊட்டிய தமிழே
அடித்தளம் என்பதை நினைவுகொள்
உன்னறிவை வளர்த்திடும் தமிழே
அமிழ்தம் என்பதை ஒத்துக்கொள்.
பிறமொழிகளைப் படிப்பதில் பிழையில்லை
பிழைப்புக்கு உதவும் மறுப்பில்லை
தமிழை வெறுப்பதில் சிறப்பில்லை
தமிழன் என்பதில் அர்த்தமில்லை
பன்மொழிகளைப் படித்திடு தமிழா
பக்கபலமாய் விளங்கட்டும் தமிழா
முத்தமிழுக்கு முன்னுரிமையளி தமிழா
முன்னோக்கி வீறுநடைபோடு தமிழா.
தமிழைக் காத்திடும் எண்ணமே
தவறாமல் தந்திடும் மனமே
முத்தமிழை ஏற்றிடும் குணமே
மூச்சாய் மாறட்டும் தினமே.
நன்றி, வணக்கம்