Pages

Thursday 15 July 2021

IMF - INTERNATIONAL MONETARY FUND - A VIEW - K.K.GANGADHARAN


IMF - INTERNATIONAL MONETARY FUND - A VIEW

சர்வதேச நாணய நிதியம்

K.K.GANGADHARAN 



1. ஒரு வீட்டோட முன்னேற்றமா இருந்தாலும் சரி, ஒரு தொழிலோட முன்னேற்றமா இருந்தாலும் சரி, ஒரு நாட்டோட முன்னேற்றமா இருந்தாலும் சரி! நிதி நிர்வாகம் ரொம்பவே முக்கியம். திறமையான நிதி நிர்வாகத்தால் மட்டுமே பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதிலே ஐ.எம்.எஃப். அதாவது சர்வதேச நாணய நிதியம் பற்றிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நிதியம் ஒரு நாட்டோட நிதி நிர்வாகத்துக்கு மிகவும் உதவியா இருக்கிறதுன்னும் சொல்லலாம். தற்போது கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) பொருளாதார ஆலோசகராகவும், ஆராய்ச்சித் துறையின் இயக்குநராகவும் உள்ளார்.

 


2. கீதா கோபிநாத் (Gita Gopinath), பேரைக் கேட்கும் போதே, ஒரு தமிழ் பேர் போலத் தெரியுது தானே. ஆமாங்க, இவர் ஓர் இந்திய அமெரிக்க பொருளாதர அறிஞர். இவர் பிறந்த நாள்   8 டிசம்பர் 1971. இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக இருக்கிறாருங்க. சென்ற அக்டோபர் 2018இல் சர்வதேச நாணய நிதியம் இவரை முதன்மை பொருளாதர அறிஞராக நியமித்துள்ளது. இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதோட துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். 

 


3. சர்வதேச நாணய நிதியம் எதற்காக நிறுவப்பட்டது? அதனோட நோக்கங்கள் என்னென்னு இப்போ பார்ப்போம்.

இந்த சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் வறுமையை குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

 

4. இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லனும்னா சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) வாஷிங்டன் டி.சி.யில் இருக்கு, தற்போது இதுலே 189 உறுப்பு நாடுகள் இருக்குது, ஒவ்வொரு நாடும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவில் அதன் நிதி முக்கியத்துவத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தைக் கொண்டு இருக்கு, இதிலே உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் அதனோட வாக்களிக்கும் பங்கும் அதற்கேத்தாப் போல இருக்கு. எடுத்துக்காட்டாக இன்றளவில் அமெரிக்காவுக்கு மிக அதிகமாகவும் இந்தோனேஷியாவுக்கு மிகக்குறைவாகவும் இருப்பதாக சில ஊடகத் தகவல்கள் சொல்லுதுங்க

சர்வதேச நாணய நிதியத்தின் செயல்கள் என்னென்னான்னு பார்த்தோம்னா  "உலகளாவிய நாணய ஒத்துழைப்பை வளர்ப்பது, நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், உயர் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள வறுமையை குறைத்தல்"ன்னு அதனோட பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்க .

 


5. சர்வதேச நாணய நிதியத்தின் செயல்பாடுகள் எவை எவைன்னு? பார்த்தோம்னா சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கான முதன்மை முறைகள் திறன் மேம்பாடு மற்றும் கடன் வழங்கல் ஆகியவற்றைக் கண்காணித்தல் தாங்க. நிதி நெருக்கடிகளைத் தடுக்க அல்லது தணிப்பதற்காக பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன்களை வழங்குவது கூட இதன் செயல்பாட்டிலே அடங்கும்.

 

6. கண்காணிப்பு பற்றி சற்று விரிவாப் பார்த்தோம்னா, சர்வதேச நாணய நிதியம் தேசிய பொருளாதாரங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிய முழுமையான தரவை மொத்தமாக சேகரிக்கிறது, அதுமட்டுமில்லாம தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பொருளாதார கணிப்புகளை வழங்குவது தாங்க. இவை தவிர உலக பொருளாதார அவுட்லுக்கில் வெளியிடப்படும் கணிப்புகள், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் நிதி, நாணய மற்றும் வர்த்தக கொள்கைகளின் தாக்கம் குறித்த நீண்ட விவாதங்களும் இதிலே இடம் பெறுகிறது என்பது கூடுதல் அம்சம்னு சொல்லலாம்.

 

7. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்குதல் செயல்பாடு பத்தி இப்போ தெரிஞ்சுக்குவோம். அதாவது நிதி நெருக்கடிகளைத் தடுக்க அல்லது தணிப்பதற்காக பொருளாதார நெருக்கடியை அனுபவிக்கும் நாடுகளுக்கு இந்த சர்வதேச நாணய நிதியம் கடன்களை வழங்கி வருகிறது. மேலும் ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் இந்த கடன் வழங்குவதற்கான நிதியை இதிலுள்ள உறுப்பினர்கள் பங்களிக்கின்றனர். இந்த நிதிகள் செப்டம்பர் 2017 நிலவரப்படி மொத்தம் எஸ்.டி.ஆர் அதாவது ஸ்பெஷல் டிராயிங் ரைட்ஸ் 475 பில்லியன் (யு.எஸ். 645 பில்லியன்) ஆக உள்ளது. இது உலகின் இருப்பு நாணயங்களின் தொகுப்பு விகிதாச்சாரங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

8. சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகள் பெரும்பாலும் பெறுநர்கள் தங்கள் வளர்ச்சி திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க சீர்திருத்தங்களைச் செய்வதற்கு சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகின்றன. கூடுதல் தகவல் என்னான்னா, சர்வதேச நாணய நிதியம் அதன் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்கியும் வருகிறது. மேலும் இந்த திட்டங்களில் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்த பயிற்சியும் அடங்கும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஊட்டமளிக்கும் விதமாக தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களையும் கண்காணிப்பதாகும்.

 

9. 2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 12.5 சதவீதம் வளர்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை இந்தியாவுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் இப்போது உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாதான் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10. சர்வதேச அளவில் இந்தியாதான் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டைப் பொறுத்தவரையில், 8 சதவீத வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனவரி மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியா 2021-22 நிதியாண்டில் 11.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கூறியிருந்தது. அதேபோல, 2022-23 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டையும் சர்வதேச நாணய நிதியம் 6.8 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.



உலகப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், 2020ஆம் ஆண்டில் 3.3 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில், இந்த 2021ஆம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதேபோல, 2022ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய தனது பழைய நிலையை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் 2022ஆம் ஆண்டில்தான் இயல்பு நிலையை அடையும் எனவும் இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

********************************************

No comments:

Post a Comment