நாள் 30.4.2023.வடக்குமாசி வீதி. மணியம்மை பள்ளி. மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார் . நன்றி.புகைப்படக் கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன்,மோகன். மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது"சிலம்பில் மூவேந்தர் பெருமை" என்ற தலைப்பில் ,கவிஞர்கள் இரா .கல்யாணசுந்தரம் இரா .இரவி ,கங்காதரன் ,முனைவர் வரதராசன் ,கி .குறளடியான் ,புலவர் நாள் 30.4.2023.வடக்குமாசி வீதி. மணியம்மை பள்ளி.
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.
தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார்.
நன்றி.புகைப்படக் கலைஞர்கள் ரெ.கார்த்திகேயன் & மோகன்.
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. "சிலம்பில் மூவேந்தர் பெருமை" என்ற தலைப்பில் ,கவிஞர்கள் இரா . கல்யாணசுந்தரம், இரா.இரவி, கு.கி.கங்காதரன், முனைவர் வரதராசன், கி.குறளடியான், புலவர் முருகுபாரதி, மா.வீரபாகு, ச. லிங்கம்மாள், சாந்தி திருநாவுக்கரசு, நா.வேலுச்சாமித்துரை, எம். இராம.பாண்டியன், செ.அனுராதா, மா.முனியாண்டி, மு .இதயத்துல்லா, கு.பால் பேரின்பநாதன், சம.சமயக்கண்ணன் ஆகியோர் கவிதை பாடினார்கள் .முனைவர் வரதராசன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது
சிலம்பில் மூவேந்தர் பெருமை
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
பண்டைய காலத் தமிழகத்தின் எதிரொலிப்பு
பார் மெச்சும் தமிழ்மொழியின் காப்பு
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒரு முத்தாய்ப்பு
இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரம் படைப்பு
துறவி இளங்கோ அடிகளார் நோக்கம்
சிலம்பில் மூன்று காண்டங்களால் ஆக்கம்
கற்பின் அரசி கண்ணகியின் தாக்கம்
இயல் இசை நாடகமும் அடக்கம்
ஈரைந்து காதைகளால் புகார்க்காண்டம்
ஐந்தெட்டு காதைகளால் மதுரைக்காண்டம்
ஆறேழு காதைகளால் வஞ்சிக்காண்டம்
அமைந்ததே சிலப்பதிகாரக் காவியம்
சோழன் கட்டுவித்த கல்லணை
சேரனின் கடல்தாண்டிய வாணிபம்
பாண்டியன் வளர்த்த தமிழ்ச்சங்கம்
பறைசாற்றுமே மூவேந்தர் பெருமை..
மலைநாடான் சேரனின் மகிமை
வளநாடான் சோழனின் பசுமை
தமிழ்நாடான் பாண்டியனின் தலைமை
தெரிவிக்குமே மூவேந்தர் ஆளுமை ..
சோழன் பெருவளத்தான் நீரும் வளமும்
சேரன் செங்குட்டுவன் போரும் வீரமும்
பாண்டிய நெடுஞ்செழியன் பழியும் பிரிவும்
பக்குவமாய் வார்க்கப் பெற்றதே சிலப்பதிகாரம்.
*********************