Pages

Friday, 18 October 2024

29.9.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் 26 - தமிழ் ஓர் அறிவியல் மொழி

  


29.9.2024 கவியரங்கம்


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"தமிழ் ஓர் அறிவியல் மொழி " என்ற தலைப்பில் கவியரங்கம் .
 
தலைமை தலைவர் பேராசிரியர் சக்திவேல், மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில்  "தமிழ் ஓர் அறிவியல் மொழி" என்ற தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில்  கவியரங்கம் நடந்தது.

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச்செம்மல்செயலர் கவிஞர் இரா.இரவி  வரவேற்றார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் முன்னிலை உரையாற்றி விருதுகளை வழங்கினார். துணைச் செயலர் கங்காதரன் முன்னனிலை வகித்தார்.

கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .இரவி , கு .கி .கங்காதரன், குறளடியான் , புலவர் மகா .முருகு பாரதி,  ச. லிங்கம்மாள், ஆசிரியை சிவ.சத்யா,முனைவர்  பா .ஸ்ரீ வித்யாபாரதி  , இதயத்துல்லா ( இளையாங்குடி ), தென்காசி   புலவர் ஆறுமுகம் , அஞ்சூரியா க .செயராமன், , , பா.பழனி,  முனியாண்டி, பொன் பாண்டி ,பால கிருட்டினன்  ,இந்தி ஆசிரியர் ம .வேல்பாண்டியம்  ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பொருளாளர் இரா .கல்யாணசுந்தரம் வெளியூர் சென்று விட்டதால், அவர் கவிதையை கவிஞர் பொன் பாண்டி படித்தார்.

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி  சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் கொடுத்து அனுப்பிய  விருதுகள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள்  தென்காசி   புலவர் ஆறுமுகம் ,புலவர் மகா .முருகு பாரதி,முனைவர்  பா .ஸ்ரீ வித்யாபாரதி ஆகியோர் விருது பெற்றனர்.

பார்வையாளர்களாக பேராசிரியர் அதி வீர பாண்டியன், மோகனக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

துணைத்தலைவர் முனைவர் வரதராஜன்  நன்றி கூறினார்.  

படங்கள் இனியநண்பர் மதுரை உலா  ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.






















தமிழ் ஓர் அறிவியல் மொழி

(அறுசீர் விருத்தம்)

என்பதில் யாருக்கும் எள்ளளவும் அய்யமில்லை

முன்னோர் வகுத்தப் 
பாதையிலே முனைந்து

சென்றால் கய்யில்
செம்மையான வெண்ணெய்

நின்றுருகி சிரிப்பதை
நினைந்து மகிழலாமே.

&&&&&&&&&&&&&&&

ஈர்ப்பின் விசையால்
ஈரேழு அண்டங்கள்

ஓர்யமைப்பில் இசைந்து
ஒழுங்காக சுழலுகிறதாம்

சீர்மிகு திருவள்ளுவரின்
சுழலும் உலகங்கள்

தேர்ந்து இஃதை 
தெரிந்து செப்பினாரே.

சுழன்றும் ஏர்பின்னே
உலகம் உழன்றும்

உழவே தலையேன் றாரே--காணீர்

எழவும் கீழே
விழவும் மாட்டாதே

விழித்து எழுதிய
வியன்மிகுக் குறளே.

&&&&&&&&&&&&&&&&*

கவிபாரதி
என்.எஸ்.விஸ்வநாதன்.
மதுரை














தமிழ் ஓர் அறிவியல் மொழி 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

அறிவியலில் தமிழின் அளப்பரியப் பங்களிப்பு 
உலக மக்களுக்கு வழங்கிய அன்பளிப்பு 
பல்துறைக்கு அடித்தளம் தந்த தமிழ்மொழி 
பேர் சொல்லத் தகுதியுள்ளத் தமிழ்மொழி 

வானவியலை நாட்காட்டியில் அடக்கியது தமிழ் 
வளர்பிறை தேய்பிறை பௌர்ணமியென நீளும் 
கணக்கில் பின்னத்தைப் புகுத்தியதும் தமிழ் 
கணிதத்தில் சுழியை நுழைத்த்தும் தமிழ் 

இலக்கணத்தை எளிமையாய் வகுத்ததும் தமிழ் 
உடல்நலச் சித்தமருத்துவம் கொண்டதும் தமிழ் 
இறையியலும் தத்துவமும் வளர்த்தத்  தமிழ் 
இயற்கையோடு உருவான மொழி தமிழ் 

நீர் ஆதாரத்திற்கு வழிகாட்டியதும் தமிழ் 
நாட்டு மக்களுக்கு அணைகள் கட்டியதும் 
ஊர் செழிக்க குளங்களை அமைத்ததும் 
இல்லந்தோறும் கிணறுகள் வெட்டியதும் ஆதாரம் 

அழகிய மீனாட்சி கோவிலின் கோபுரங்கள் 
அடுக்கடுக்காய் அமைந்த சதுரவடிவ வீதிகள் 
தஞ்சையின் விந்தைமிகுப் பெரிய கோவில் 
கட்டிட அறிவியலின் வரலாறு சொல்லும் தமிழ் 

கப்பல் கட்டும் கலையை வித்திட்டதும் தமிழ் 
கடல்கடந்து வாணிபத்தைப் பெருக்கியதும் தமிழ் 
இமயக்கல்லில் கண்ணகியை வடித்ததும் தமிழ்
அறிவுசெறிந்த அறிவியல் உள்ளதே தமிழ் 

மஞ்சளின் மகிமையை உலகுக்கு உணர்த்தியதும் தமிழ் 
மரங்களான வேம்பும் ஆலும் தந்ததும் தமிழ் 
அரிசியின் பலரகத்தை உருவாக்கியதும் தமிழ் 
அனைவரின்  வாழ்க்கைக்கு வளத்தை வழங்குவதும் தமிழ் 
                                                         *********************










































                                                             ******************************