Happy life's secret, An answer for 'Who am I?' , மகிழ்ச்சியான வாழ்க்கையை, பிரம்மத்தை, ஆன்மீ
கட்டுரை
கு.கி.கங்காதரன்
மனித வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். அவனது வாழ்க்கையானது, பற்பல நினைவுகளையும், எதிர்ப்பார்ப்பு
நாம் நினைக்கலாம் ‘பிரம்மம்’ (இறைவன்
ஒன்று மட்டும் நிச்சயம்! பிரம்மத்தை உணர்ந்து இப்பிறவியிலேயே அதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டால் நம் பிறவிப்பயனை அடைந்துவிடலாம். இல்லையென்றால் எக்காலத்தில் இவ்வாய்ப்பு கிட்டும் என்பதை எவராலும் கூற இயலாது. அது உங்கள் விருப்பத்தில் உள்ளது. கடவுள் உண்மையில் அவ்வளவு கடுமையாக நடந்து கொள்பவரா? இதைப் படித்தவுடன் நீங்கள் ஆச்சரியப் படலாம். சில உதாரணங்கள் எடுத்துச் சொல்லும் போது உங்களுக்கேத் தெரியவரும்.
உதாரணம் 1. மனிதப்பிறவியானது எப்போதோ தோன்றியிருந்தாலும் நாம் இன்றைய நிலைக்கு வருவதற்கு கோடிக்கானக் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அவ்வளவு காலம் எதற்கு கஷ்டப்பட வேண்டும்? அனைவருக்கும் சொர்க்கத்தைத் தராமல் கஷ்டப்படுத்துவது நியாயமா?
2. இயற்கையின் சீற்றங்களால் மனிதன் படும் துயரம் பயங்கரமானது. அவற்றிலிருந்து மீளுவது அவ்வளவு எளிதா? ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
3. கோடிக்கான விதைகளில் தரமான விதைகளையே விளைவிக்கிறான். அதில் எவ்வளவு விதைகள்- வீணாகவும், அழிந்தும் போகின்றன. அது மிகப்பெரிய கொடுமையல்லவா! அதனை உருவாக்கிய சக்தியனைத்தும் வீண் தானே!
4. அதே போல் தரமான மனிதனை உருவாக்குவதும் இம்மாதிரி தானே. கோடிக்கணக்கான விந்துவிலிருந்துஒன்றைத்தானே மனிதனாகப் படைக்கிறான்
5. ‘பசி’ ஒன்றை உருவாக்கி அனைவரையும் பாடாய் படுத்துகிறானே! அது எதற்கு?
6. நோய்களையும், முதுமையும் தந்து நிம்மதியை இழக்கச் செய்கிறானே? அது முறையா ?
7. ஐம்புலன்களையும், அறுசுவையு
8. வெவ்வேறு அளவில் அன்பையும், அறிவையும் தந்து பல விதங்களில் (உயர்வு, தாழ்வு) பலருக்குத் தொந்தரவு தருகிறானே, அந்த ஏற்ற தாழ்வு எதற்கு?
9. எவருமே எளிதாகப் புரிந்துகொள்ள முடியாத 'மனம் ' என்ற ஒன்றைப் படைத்து கண்ணாமூச்சி விளயாட்டுகள் காட்டுகிறானே, அந்த நிலை எதற்கு?
10. எல்லாவற்றிலும் நல்லது, கெட்டது கொடுத்து, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கொடுத்து, அதில் நம்மை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அளித்து, எக்காலத்திலும் மனிதனை குழப்பத்திலே வைத்துக் கொள்ளும் நிலையிலேயே வைத்துள்ளானே, அதனால் மனிதன் படும் வேதனை எதற்கு?
இப்போது நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா! அவர் எப்படிப் பட்டவர் என்று ?
இதற்கான ஆக்கப்பூர்வமாக விளக்கங்கள் பல மகான்கள், பல விதங்களில் தந்தும், போதித்தும் இருந்தாலு
ஒருவகையில் நமது மனதை, நாக்கிற்கு ஒப்பிடலாம். நாக்கில் எந்த பகுதியிலும் அறுசுவை இருப்பது போல, மனதில் எங்கும் ஐம்புலன்களினால் உண்டாகும் உணர்வை உணர்ந்தும், அதனை சேமித்தும் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதி படைத்துள்ளது. மேலும், மனதில் உண்டாகும் உணர்வுகளை நொடிப்பொழுதில் உடம்பிலுள்ள பாகங்கள் அனைத்துக்கும் பரவும் வலிமை படைத்தது. எந்த உணர்வு இருந்தாலும் மனமானது அதற்கேற்ற உணர்ச்சிகளை உணரும் தன்மை கொண்டது.
என் ஆராய்ச்சி படி, நமது நினைவுகள், உணர்வுகள் ஒளி வேகத்தில், அலை வடிவத்தில் (எக்ஸ்-ரே கதிர்வீச்சு போன்று) சிறு சிறு பகுதிகளாக (Files and folders), Bio-clock கால நேரப்படி, மூளையின் ஒரு பகுதியில் ஓய்வில்லாமல் உடனுக்குடன் அலைகளின் பதிவுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். மேலும், நாம் காணும் காட்சிகள், மனம் செய்யும் கற்பனைகள் மற்றும் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது மனதில் நாம் அறிந்தோ அறியாமலோ பதிவாகின்றது. அந்தப் பதிவானது, நாம் விழிப்புணர்வோடு சேமித்துக் கொள்ளும் வீரியத்தையும், அடிக்கடி நினைத்துக் கொள்ளும் அளவையும் பொறுத்தது. கவனக்குறைவினால் அல்லது விழிப்புணர்வு இல்லாததால் பல காட்சிகளும், சம்பவங்களும் பதிவாகாமலும் போய்விடலாம். சேமித்த நினைவுகளை மீண்டும் உயிரூட்டம் பெற, சம்பவத்தின் சில காட்சிகள், சில பேச்சுகள் அறிந்து இருந்தாலே போதுமானது.
அவ்வப்போது, Bio-clock கால நே
அந்த சேமிப்பு அளவின் சக்திபடி தான், நமது வாழ்க்கையில் நல்லது, கெட்டது, உயர்வு தாழ்வு ஏற்படும். ஆனால், நினவுப்பதிவு
என்னைப் பொறுத்தவரை மனம் ஒரு சக்தி வாய்ந்த 'மேக்னட்'. ஐம்புலன்கள் இரும்புத் துண்டுகள் எனலாம். இதிலிருந்து மனதிற்கும், ஐம்புலன்களுக்கும் உள்ளத் தொடர்பினைத் தெரிந்து கொள்ளலாம். ஆக, மனமானது ஐம்புலன்களான எந்த உணர்வுகளையும் கவரக் கூடிய வல்லமை கொண்டது.
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை.
பொருள் தேட உடல் வேண்டும். அருள் தேட உள்ளம் வேண்டும் .
'மனம்' என்பது கோடி பிரகாசம் மற்றும் அளப்பரிய ஆற்றலைக் கொண்டது. அது ஐம்புலன்களின் ஆதிக்கத்தால், விளையாட்டால் மூடி இருள் சூழ்ந்து கொண்டதால் அதனை உணர முடிவதில்லை.
'மனம்' ஓம் என்னும் ஒலியால் , பிரம்மத்தை உணரும் அமைப்பையும், மகிமையையும் கொண்டது. எப்போது மனம், நினைவுகளிலிருந்தும், கற்பனைகளிலிருந்தும் விடுபடுகிறதோ அப்போதிலிருந்து இந்த ஓம்கார நாதத்தை மனதில் ஒலிப்பதை உணரலாம்.
அதற்குத் தான் குருவானவர் நமக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டு அருள் வழங்குவார்.
'மனம் தான் எல்லாம்' என்று நாம் முதலில் உணர வேண்டும். இயல்பு நிலையில் உள்ள தன்னிச்சையான மனம் அணுவைவிட வலிமையானது. அதாவது, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகியவை அணுவடிவத்தில் இருக்கும்போது எல்லையற்ற ஆற்றல் கொண்டிருக்கும். ஆனால், இரண்டும் சேர்ந்த நீர் மூலக்கூறுவுக்கு அத்தகைய ஆற்றல் இருப்பதில்லை. அத்தகைய குணம் கொண்டது தான் மனம். அதாவது, 'மனம்' என்ற ஒன்றுடன் நினைவுகள், கற்பனைகள், 'நான்' என்னும் அகங்காரம் போன்ற பிற அணுக்கள் சேரும்போது 'மனம்' தனது சுயத்தை இழப்பதோடு, மனித வாழ்க்கைக்கு அதுவே துன்பத்திற்குக் காரணமாக அமைகிறது. எதுவும் கலவாத மனம் இருந்தால், வாழ்கையானது என்றும் மலர்ந்த வண்ணம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
உடல் மூலமாக இறைவனை அல்லது பிரம்மத்தை உணர்வது சாத்தியமில்லாத ஒன்று. இறைவன் கூட மனிதகுலத்திற்கு நன்மை செய்வதாக இருந்தால், மனிதனாகப் பிறவி எடுத்தால் மட்டுமே முடியும். அதுபோல, இறைவனை அல்லது பிரம்மத்தை உணர்வது, மனம் என்ற ஒன்றால் மட்டுமே இயலும்.
உங்கள் மனதின் சக்தியை, நீங்களாகவோ அல்லது ஒரு வழிகாட்டியின் மூலமாக (Guru or Teacher) உணரலாம். அவ்வாறு நீங்கள் உணர்ந்துவிட்டால், உங்களின் ஆன்மீக வாழ்க்கையை எவ்வித இடர்பாடும் இல்லாமல் மிக இலகுவாகப் பயணிக்கலாம். ‘மனம்’ மகிழ்ச்சி
புறவாழ்க்கையினால் மனிதனுக்கு அவ்வளவாகத் தொந்தரவுகள் இல்லை. ஏனென்றால், அதன் செயல்கள், வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் நன்றாகத் தெரியப்படுத்தப்படுகிறது. மேலும், அவற்றுக்கெல்லாம் எளிதாக ஆதாரமோ, சாட்சியையோத் திரட்டலாம். கை மேல் பலனும் கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், 'மனவாழ்க்கை' மிகவும் ஆபத்தானது. அதற்கு, எவ்வித ஆதாரமோ, சாட்சியையோக் காட்ட முடியாது. மேலும், மனமானது ஒளி வேகத்தில் இயங்குவதால் பச்சோந்தி போல் நொடிக்கு நொடி நேரத்தில் கூட மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனை மந்திர, தந்திர மனம் என்றும் கூறலாம். அதே வேளையில், மிகவும் உயர்வான தன்மையும், எந்த சூழ்நிலையிலும், நினைத்துப் பார்க்கவும், கற்பனையும் செய்ய முடியாத அளவுக்கு அரிய பெரிய சாதனையும் படைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது. உதாரணமாக, கற்களையும் வைரமாகவும், முட்டாளை அறிவாளியாகவும், கோழையை வீரனாகவும், பிச்சைக்காரனை கோடீஸ்வரனாகவும் , பாலைவனத்தைச் சோலைவனமாகவும், மாற்றும் வல்லமை கொண்டது. அதேபோல் மேற்சொன்னவற்றுக்கு எதிர்வினையாகவும் செயலாற்றும் சக்தியும் படைத்தது. சொல்லப் போனால், நமது புறவாழ்க்கையின் தரமானது, இந்த ‘மனவாழ்க்கை’ தா
இப்போது, நீங்கள் எந்த அளவுக்கு பிரம்மத்தை , ஆன்மீகத்தை, பேரா
என்னைப் பொருத்தவரையில், மனதைக் ‘கை’
மீண்டும் உங்கள் ஞாபகத்திற்கு, இந்த சுயசோதனை மனம் சார்ந்தது மட்டுமே. வெளிபுறத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஆகவே, உங்கள் மனதில் என்னென்ன நடைபெறுகிறது என்பதை பற்றி மட்டும் சிந்தித்து மதிப்பெண் போட வேண்டும். ..
பிரம்மம், முக்தி, ஞானம் பூர்த்தி அடைந்த மனம் = 100 மதிப்பெண் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில். ..
அன்பு பூர்த்தி மனம் ? /10
0/10 மதிப்பெண் என்பது, நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள், உறவு
2/10 மதிப்பெண் கொடுத்தால், எல்லோருக்கும் வேண்டிய அன்பு கொடுத்து விட்ட மனம். இருப்பினும் அவர்களுக்கு அன்பை இன்னும் தர வேண்டும் என்கிற மனம்.
6/10 மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் அன்பு அவர்களுக்குத் தேவைபடுகிறது என்று அர்த்தம்.
இப்படி கீழ்கண்டவாறு மதிப்பெண் கொடுக்க வேண்டும்.
0/10 வேண்டிய அளவு மனமானது அன்பு கொடுத்து விட்டது. இனி, அன்பு காட்டத் தேவையில்லா மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் மனதின் மூலம் அன்பு காட்டினால் போதும் 4/10 அவ்வப்போது அவர்களுக்கு அன்பு காட்ட மனம் எண்ணுவது 6/10 அடிக்கடி அன்பு காட்ட வேண்டும் 8/10 பெரும்பாலும் அன்பு காட்ட வேண்டும் என்கிற மனம் 10/10 அன்பு என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு மனம் இருப்பது. அதாவது ஒருபோதும் அன்பு காட்டாத நிலையில் மனம் இருப்பது
கடமை பூர்த்தி மனம் ? /10
0/10 மதிப்பெண் என்பது, நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள், உறவு
6/10 மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் கடமை அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று அர்த்தம். அதாவது,
0/10 வேண்டிய அளவு உங்கள் மனமானது, செய்ய வேண்டியவர்களுக்கு எல்லாவிதக் கடமைகளும் செய்து விட்டது. இனி, அவர்களுக்காக நீங்கள் எவ்விதக் கடமையும் செய்யத் தேவையில்லா மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் மனதின் மூலம் அவர்களுகடமைகளைச் செய்து தர வேண்டும் என்று எண்ணுவது 4/10 அவ்வப்போது அவர்களுக்கு நீங்கள் கடமைகளைச் செய்து கொடுக்க மனம் எண்ணுவது 6/10 அடிக்கடி அவர்களுக்கு கடமைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மனம் எண்ணுவது 8/10 பெரும்பாலும் நீங்கள் அவர்களுக்கு கடமைகளைச் செய்து கொடுக்க வேண்டும் 10/10 எப்போதும் அவர்களுக்கு நீங்கள் சுமைதாங்கி போல கடமைகளைச் செய்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் நிலையில் மனம் இருப்பது
அன்றாட வேலைப் பூர்த்தி மனம் ? /10
0/10 மதிப்பெண் என்பது, நீங்கள் அன்றாடம் மனைவி,மக்கள், நண்பர்கள், உறவு
6/10 மதிப்பெண் கொடுத்தால், இன்னும் உங்கள் அன்றாடத் தேவைக்கு உழைப்பும் முயற்சியும் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.
0/10 அன்றாடம் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக வேலை செய்யத் தேவையில்லாத மனம் (பணபலம், உறவு பலம் தேவைக்கு மேல் உள்ளது என்று எண்ணும் மனம்) 2/10 நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக நினைக்கின்ற போது மட்டும் வேலை செய்ய வேண்டும் என்கிற மனம் (ஓரளவுக்கு வசதி உள்ள மனம்) 4/10 அவ்வப்போது மட்டும் வேலை செய்ய வேண்டும் என்கிற மனம் (ஏதோ கொஞ்சம் வசதி உள்ள மனம்) 6/10 உங்கள் வாழ்வுக்காக அடிக்கடி வேலை செய்ய வேண்டும் என்கிற மனம் ( அவ்வளவாக வசதியில்லா மனம்) 8/10 பெரும்பாலும் உங்கள் வாழ்வுக்காக வேலை செய்ய வேண்டும் என்கிற மனம் (வயிற்றுப் பசி தீர்க்க வேலை செய்ய வேண்டிய மனம்) 10/10 உங்களுக்கு எவ்விதத் திருப்தியும் இல்லாததால் எப்போதும் உங்கள் வாழ்வுக்காக ஏதாவது ஒன்று அல்லது பல வேலைகள் செய்ய வேண்டும் என்கிற மனம்.
பிரம்மம் நினைவு மனம் (இறைவனின் நினைவு) ? /10
0/10 மதிப்பெண் என்பது, நீங்கள் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் சர்வம் பிரம்மம் (அல்லது இறைவனை) என்று எண்ணுவது.
6/10 மதிப்பெண் கொடுத்தால், உங்களுக்கு ஞாபகம் அல்லது கஷ்டம் வரும்போது மட்டும் நினைப்பது. அதாவது,
0/10 உங்கள் மனம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்றாடம் ப பிரம்மத்தை (இறைவனை) நினைப்பது 2/10 தேவை படும்போது /நினைக்கின்ற போது மட்டும் இறைவனை நினைப்பது 4/10 மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும் போது / அவ்வப்போது இறைவனை நினைப்பது 6/10 அடிக்கடி நினைப்பது நடக்க வேண்டும் என்பதற்காக இறைவனை நினைப்பது 8/10 பெரும்பாலும் ஏதாவது சில காரணத்திற்காக இறைவனை நினைப்பது 10/10 இறைவன் மீது நம்பிக்கை இல்லாததால் எப்போதும் நினைக்கா
தியானம் செய்யும் மனம் ? /10
0/10 மதிப்பெண் என்பது, உங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் பிரம்மம் (அல்லது இறைவனை) பற்றிப் படித்தல், பார்த்தல், கேட்டல்,
6/10 மதிப்பெண் கொடுத்தால், அவ்வப்போது உங்களுக்கு ஞாபகம் அல்லது வம்படியாக தியானம், யோகத்தில் ஈடுபடுவது. அதாவது,
0/10 அன்றாடம் தியானம், யோகம் செய்ய வேண்டும் என்கிற மனம் 2/10 நினைக்கின்ற போது மட்டும் தியானம் யோகம் செய்யும் மனம் 4/10 அவ்வப்போது தியானம் யோகம் செய்யும் மனம் 6/10 சில வேளையில் தியானம் யோகம் செய்யும் மனம் 8/10 பெரும்பாலும் தியானம் யோகம் செய்யாத மனம் ஆனால் அரிதாகச் சில வேளையில் செய்யச் சொல்லும் மனம் 10/10 எப்போதும் தியானம் யோகம் செய்யாமல் இருக்கும் மனம்
ஆசை எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5 மதிப்பெண் கொடுத்தால், உங்களுக்கு ஆசை எண்ணம் இல்லை என்றும், எளிமையாக வாழ்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை மட்டும் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று அர்த்தம்.
3/5 மதிப்பெண் கொடுத்தால், நீங்கள் வாழ்வாதாரத்திற்கு மேலானவற்றை உங்கள் தகுதிக்கு மீறி அனுபவிப்பது அல்லது அனுபவிக்க ஆசைபடுவது.
0/5 ஆசை எண்ணம் இல்லாத மனம் 1/5 ஒருசில ஆசைகளை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற போது மட்டும் ஆசைபடும் மனம் 2/5 அவ்வப்போது எதற்கோ ஆசை படும் மனம் 3/5 அடிக்கடி ஆசைபடுவதை, அடைய எண்ணும் மனம் 4/5 பெரும்பாலும் எதைப் பார்த்தாலும் அடைய ஆசை படும் மனம் 5/5 எப்போதும் எல்லாவற்
பொறாமை எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5 மதிப்பெண் கொடுத்தால், நீங்கள் மற்றவர்களைக் கண்டு பொறாமைபடவில்லை என்றும், எப்போதும் தங்களைப் பற்றியே எண்ணுகிறீர்கள் என்று அர்த்தம்.
5/5 மதிப்பெண் கொடுத்தால், நீங்கள் மற்றவர்களைக் கண்டு பொறாமைபடுகிறீர்கள் என்றும், எப்போதும் பிறரைப் பற்றியே எண்ணுகிறீர்கள் என்று அர்த்தம். அதாவது,
0/5 பொறாமை எண்ணம் இல்லாத மனம் 1/5 எப்போதாவது சிலரைப் பார்த்துப் பொறாமை படும் மனம் 2/5 அவ்வப்போது சிலரைப் பார்த்துப் பொறாமை படும் மனம் 3/5 அடிக்கடி பலர் வசதியாக இருப்பதைப் பார்த்துப் பொறாமை படும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் பொறாமை படும் மனம் 5/5 எப்போதும் யாரைக் கண்டாலும் பொறாமை படும் மனம்
கோபம் எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5 எப்போதுமே கோபப்படாத, கோபம் எண்ணம் இல்லாத மனம் 1/5 எப்போதாவது ஒருசிலரைப் பார்த்த அல்லது நினைத்த மாத்திரத்தில் கோபப்படும் மனம் 2/5 அவ்வப்போது சிலரைப் பார்த்த / நினைக்கும் போது கோபப்படும் மனம் 3/5 அடிக்கடி பலரைப் பார்த்து / நினைத்து காரணமில்லாமல் கோபப்படும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் கோபப்படும் மனம் 5/5 எப்போதும் யாரைக் கண்டாலும் கோபப்படும் மனம்
கர்மவினை பூர்த்தி மனம் ? / 5
0/5 ஆன்மாவுக்கும் உடலுக்கும் எவ்வித கஷ்டமும் கொடுக்காத எந்தத் தவறும் செய்யாத மனம் 1/5 வாழ்கையில் சில தவறுகள் செய்ததை நினைக்கின்ற போது மட்டும் கஷ்டப்படும் மனம் 2/5 அவ்வப்போது செய்த/ செய்யும் தவறுக்காக வருந்தும் மனம் 3/5 அடிக்கடி அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுக்காக வருந்தும் மனம் 4/5 பெரும்பாலும் தவறுகள் பலவற்றைச் செய்து தன்னைத்தானே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மனம் 5/5 எப்போதும் தவறு செய்து கொண்டு தன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் கஷ்டம் கொடுக்கும் மனம்
இரகசியம் நீக்கிய மனம் ? / 5
0/5 இரகசியம் இல்லாத தூய வெள்ளை மனம் 1/5 சிலவற்றை மட்டும் இரகசியமாய் வைத்திருக்கும் மனம் 2/5 ஏதோ சில காரணத்திற்காக சிலவற்றை இரகசியமாக மூடி வைக்கும் மனம் 3/5 சிறிய விஷயத்தையும் இரகசியமாக வைத்திருக்கும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லா விஷயத்தையும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் மனம் 5/5 எப்போதும் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்திருக்கும் மனம்
'நான்' எண்ணம் (நிகழ், இறந்த காலம்) நீக்கிய மனம் ? / 5
0/5 நான் இதைச் செய்ய வில்லை. இறைவன் தான் இதனைச் செய்ய வைத்தான் என்று எதிலும் எப்போதும் ‘நான்' என்ற எண்ணம் இல்லாத மனம்’ 1/5 சில வேளையில் நினைக்கின்ற போது மட்டும் ‘நான்’ என்னும் அகந்தையை வெளிப்படுத்தும் மனம் 2/5 அவ்வப்போது 'நான்' என்னும் ஆனவத்துடன் இருக்கும் மனம் 3/5 அடிக்கடி 'நான்' செய்தேன் என்று சொல்லும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் நான் நான் என்று மூக்கை நுழைக்கின்ற மனம் 5/5 என்னால் தான் இது நடந்தது! நான் தான் இதைச் செய்தேன் என்று எப்போதும் எதிலும் ‘நான்’ என்னும் அகந்தையுடன் இருக்கும் மனம்
சந்தேகம் எண்ணம் நீக்கிய மனம் ? / 5
0/5 எதிலும் எப்போதும் தன்னையோ பிறரையோ சந்தேக எண்ணம் கொள்ளாத மனம் 1/5 எப்போதாவது தன்னை, பிறரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது மற்றும் தனக்குத் தானே சந்தேகம் கொள்ளும் மனம் 2/5 அவ்வப்போது சந்தேகப் பார்வை கொள்ளும் மனம் 3/5 அடிக்கடி சந்தேகப்படும் மனம் 4/5 பெரும்பாலும் சந்தேகத்துடன் பார்க்கும் மனம் 5/5 எப்போதும் எல்லாவற்றுக்கும் தனக்குத் தானே மட்டுமின்றி பிறரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும் மனம்
இம்சை எண்ணம் நீக்கிய மகிழ்ச்சி கொண்ட மனம் ? / 5
0/5 எப்போதும் இம்சை எண்ணம் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த மனம் 1/5 சில வேளையில் தெரியாமல் தவறு செய்து விட்டேனே என்று அப்போது மட்டும் தனக்குத் தானே இம்சித்துக் கொள்ளும் மனம் 2/5 அவ்வப்போது சிலவற்றை கற்பனை செய்து கொண்டு இம்சித்துக் கொள்ளும் மனம் 3/5 அடிக்கடி ஏதாவது நடந்துவிடுமோ என்று அச்சத்துடன் இம்சித்துக் கொள்ளும் மனம் 4/5 பெரும்பாலும் தன்னைத்தானே தன் இயலாமையை நினைத்து தன்னைத் தானே இம்சித்துக் கொள்ளும் மனம் 5/5 எப்போதும் எல்லாவற்றிற்கும் 'தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே' என்று தனக்குத் தானே இம்சித்துக் கொள்ளும் மனம்
எதிர்பார்ப்பு மனம் ? / 5
0/5 தனது கடமைகளையும் பொறுப்புகளையும் செவ்வனே செய்து அதனால் எவ்விதப் பலனும் எதிர்பார்ப்பும் இல்லாத மனம் 1/5 ஒரு சில காரியத்தைச் செய்யும் போது அதன் பலனை எதிர்பார்க்கும் மனம் 2/5 அவ்வப்போது சில வேலைக்குச் சில பலனை எதிர்பார்க்கும் மனம் 3/5 அடிக்கடி சில பல வேலை செய்து பலனை எதிர்பார்க்கும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லா வேலைக்கும் பலனை எதிர்பார்க்கும் மனம் 5/5 எப்போதும் எல்லா வேலைக்கும் பலன் இல்லாமல் வேலை செய்யக் கூடாது என்று எண்ணும் மனம்
கற்பனை மனம் ? / 5
0/5 எதிலும் கற்பனை செய்யாத உள்ளதை உள்ளபடி பார்க்கும், எண்ணும் மனம் 1/5 ஒரு சில செயலுக்கும், சம்பவத்திற்கும் கற்பனை செய்யும் மனம் 2/5 அவ்வப்போது சில செயலுக்கு மட்டும் கற்பனை செய்யும் மனம் 3/5 அடிக்கடி பல செயல்களுக்கும் சம்பவங்களையும் கற்பனை செய்யும் மனம் 4/5 பெரும்பாலும் எல்லா செயல்களையும் கற்பனை செய்யும் மனம் 5/5 எப்போதும் கற்பனை உலகில் மிதந்து கொண்டிருக்கும் மனம்
ஒவ்வொரு மனது செயலுக்கும் நேர்மையாகவும், உண்மையாகவும் மதிப்பெண் கொடுக்க வேண்டும்.
100/100 எடுத்தால் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு, பிரம்மத்தை, ஆன்
கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள் (படம் 4). மதிப்பெண்களை பூர்த்தி செய்யுங்கள். . கிடைக்கும் மதிப்பெண்னே.. உங்களின் உண்மையான நிலையும், நீங்கள் யார்? என்பதற்கான பதிலும் ஆகும். .
உதாரணமாக, ஒருவர் தான் சுயசோதனை செய்து பார்க்கும் போது, கீழ்கண்டவாறு மதிப்பெண் கொடுத்திருக்கிறார். அவரது கூட்டு மதிப்பெண்னும், அவர் பிரம்மத்தை அடைவதற்கு எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
அதாவது,
முழு பூர்த்திக்கு 0 மதிப்பெண்
முழு பூர்த்தி அடையாமலுக்கு 10 மதிப்பெண்
அன்பு பூர்த்தி மனம் ? /10 - 4 மதிப்பெண்
கடமை பூர்த்தி மனம் ? /10 - 3 மதிப்பெண்
அன்றாட பூர்த்தி மனம் ? /10 - 4 மதிப்பெண்
பிரம்மம் நினைவு மனம் ? /10 - 3 மதிப்பெண்
தியானம் செய்யும் மனம் ? /10 - 3 மதிப்பெண்
முழு நீக்கிய மனம் 0 மதிப்பெண்
முழு நீக்கம் அடையாமலுக்கு 5 மதிப்பெண்
ஆசை நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
பொறாமை நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
கோபம் நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
கர்மவினை பூர்த்தி மனம் ? / 5 - 1 மதிப்பெண்
ரகசிய நீக்கிய மனம் ? / 5 - 2 மதிப்பெண்
நான்(நிகழ், இறந்த காலம்)
நீக்கிய மனம் ? / 5 - 2 மதிப்பெண்
சந்தேகம் நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
இம்சை நீக்கிய மனம் ? / 5 - 1 மதிப்பெண்
எதிர்பார்ப்பு மனம் ? / 5 - 2 மதிப்பெண்
கற்பனை மனம் ? / 5 – 2 மதிப்பெண்
பிரம்ம பூர்த்தி நிலை 100 - (கழித்தல்) கூட்டு மதிப்பெண் 31
குறிப்பு: மேற்படி கிடைக்கும் இந்தக் கூட்டு மதிப்பெண், நீங்கள் எந்த அளவுக்குப் புறவாழ்க்கையில் / லௌகீக வாழ்க்கையில் / அன்றாட வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
பிரம்மம் நோக்கி இவர் கடந்த தூரம் = 100 – 31 = 69 (அதாவது பூர்த்தி மனம் - (கழித்தல்) அன்றாட மனம் = உங்கள் ஆன்மீக மனம். . அதாவது, நீங்கள் ஆன்மீகத்தை பூர்த்தி செய்ய / பிரம்மத்தை அடைய எவ்வளவு தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. .
அதன்படி, இவரின் மனம் இப்போதைய நிலையும், பிரம்ம நிலை அடைய வேண்டிய தூரம் எவ்வளவு? என்று அறியும் சுயசோதனையின் முடிவு. ..
பிரம்ம பூர்த்தி நிலை 100
பிரம்ம நிலை மனம் கொண்டவர்கள் 91 to 99 மதிப்பெண் பெற்றவர்கள்
ஆன்மீக மனம் கொண்டவர்கள் 81 to 90 மதிப்பெண் பெற்றவர்கள்
தெளிவு நிலை கொண்டவர்கள் 71 to 80 மதிப்பெண் பெற்றவர்கள்
பொதுநல மனம் கொண்டவர்கள் 61 to 70 பெற்றவர்கள்
குழப்பமான மனம் கொண்டவர்கள் 51 to 60 மதிப்பெண் பெற்றவர்கள்
அமைதி இல்லா நிலையில் மனம் கொண்டவர்கள் 41 to 50 மதிப்பெண் பெற்றவர்கள்
எல்லாம் விதி எண்ணும் நிலையில் மனம் கொண்டவர்கள் 31 to 40 மதிப்பெண் பெற்றவர்கள்
இவர்கள் தங்கள் செய்த தவறுகளை உணராமல் / ஏற்றுக் கொள்ளாமல் பிறர் மீது குற்றம் காணும் / சுமத்தும் மனம் கொண்டவர்கள் 21 to 30 மதிப்பெண் பெற்றவர்கள்
இவர்களும் 'தான்' என்னும் அகங்காரம் கொண்டவர்கள் . ஒருவகையில் சுயநலவாதிகள் . பிறரைப் பற்றிக் கவலை படாதவர்கள் 11 to 20 மதிப்பெண் பெற்றவர்கள்
'நான்' தான் எல்லாம்! நான் சொல்வதைத் கேட்க வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள் 0 to 10 மதிப்பெண் பெற்றவர்கள். . ஒருவகையில் இவர்கள் சர்வதிகாரி மனம் கொண்டவர்கள் மற்றும் முழு சுயநலம் உடையவர்கள். தன் இலட்சியம் அடைய தகாத காரியமும் செய்யத் தயங்காதவர்கள்
அந்த வகயில் இவரின் இப்போதைய நிலையானது பொதுநல மனம் கொண்டவர் என்று முடிவு தருகிறது. இது போல் நீங்கள் உங்களுக்கு மதிப்பெண் கொடுத்துப் பாருங்கள். .
குறிப்பு 1: இந்த சுயபரிசோதனையானது, வயது வந்தவர்களுக்கு, ஆன்மீகத்தில் மற்றும் லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
குறிப்பு 2: இங்கு 'பூர்த்தி'
இதன் மூலம் நீங்கள் யார்? என்று தெரிந்துகொள்ளுங்கள். பிரம்மத்தை (இறைவனை) நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
முக்கியக் குறிப்பு: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பெற / பிரம்மத்தை அடைய இந்த வழிகளில் முயற்சி செய்யலாம். இதனால் உங்கள் மனம் தூய்மை அடையும். . ஆன்மபலம் பெறும். .
1. உங்களை யார் யார் ஏமாற்றினார்களோ அவர்களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் உங்கள் மன நீதிமன்றத்தில் நிறுத்தி பொது மன்னிப்பு கொடுங்கள். அவரவர் செய்த தவற்றை மறந்து விடுங்கள்.
2. நீங்கள் மற்றவர்களுக்குச் செய்த துரோகம், தவறுகள், ஏமாற்றுகள், தொந்தரவுகள், அடிதடிகள் ஆகிய செயல்களுக்கு நீங்களே என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள். . அவைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
3. கோபம் வருபவர்களிடம் மனதளவில் அன்பு காட்டுங்கள்
4. மனதில் மண்ணாசை, பெண்ணாசை வளர விடாமல் விழிப்போடு இருங்கள்
5. அன்பு, உடல் நலம், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழகுங்கள்
நன்றி
********