Pages

Showing posts with label HORRIBLE TEENAGE இளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி. Show all posts
Showing posts with label HORRIBLE TEENAGE இளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி. Show all posts

Saturday, 13 December 2014

HORRIBLE TEENAGE இளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி

          HORRIBLE TEENAGE
இளமையின் அவஸ்தை (அல்லது)
    
       இளமை சூழும் அகழி
              புதுக்கவிதை
         மதுரை கங்காதரன்

   
இழுக்க இழுக்க இன்பம்
பருகபருக மயக்கம்
பார்க்க பார்க்க பரவசம்
நினைக்க நினைக்க இனிப்பது

கேட்க கேட்க தித்திப்பது
உண்ண உண்ண சுவைப்பது
கூடக்கூட பெருகுவது
பழக பழக காதல் வருவது

படிக்க படிக்க கவருவது
நடக்க நடக்க அழகு கூடுவது
துடிக்க துடிக்க துன்பம் பெருவது
பேச பேச தித்திப்பது
  
சொல்ல சொல்ல தயங்குவது
எழுத எழுத ஏங்குவது
வெட்ட வெட்ட வளர்வது
பசிக்க பசிக்க ருசிப்பது

நனைய நனைய ஆசைபடுவது
ரசிக்க ரசிக்க கனவில் மிதப்பது
குளிரக் குளிர அனுபவிப்பது
தீரத்தீர செலவு செய்வது
 
அத்தனையும் இளமை அகழிகள்
அனைத்தும் தாண்டுதலே இளமை வெற்றி
மெல்ல மெல்ல விடுபடுவாய்
மேலும் மேலும் வெற்றி பெறுவாயே!

************************************************************