Pages

Thursday 1 November 2012

உங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற பத்து நிமிடம் போதும். 10 MINUTES ENOUGH TO ACHIEVE YOUR GOAL

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

உங்கள் எண்ணம் நிறைவேற 
பத்து நிமிடம் போதும்.    
10 MINUTES ENOUGH TO ACHIEVE YOUR GOAL


சிறு வயது குழந்தைகள் 'ரைம்ஸ் ' அழகாக சொல்கிறது. அது மட்டுமா? A,B,C,D...., Sunday, Monday... January, February.... 1,2,3,4.... சித்திரை, வைகாசி... ஞாயிறு, திங்கள்... அ , ஆ, இ , ஈ... என்று கட கட வென்று ஒப்பிகின்றது. மந்திரங்கள் நன்றாக உச்சரிகின்றது, பாடல்கள் இனிமையாக மழலையில் பாடுகின்றது. நெளிவு, சுளிவோடு டான்ஸ் ஆடுகின்றது.  மொபைல் லாவகமாக கையாள்கின்றது , கணினி யின் மவுஸ் ஸ்டைலாக நகர்த்துகிறது, டி .வி யின் ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சரியாக இயக்குகின்றது. இன்னும் அதிகமாக சைக்கிள், பைக் , கார் ஒட்டி அசத்துகிறார்கள். இவைகளை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது. 


ஆனால் அதே குழந்தைகள் வயது ஆக ஆக பள்ளிப்பாடங்களை படிக்கத் திணறுகின்றார்கள். எளிதான பாடங்களைக் கூட மனப்பாடம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 'படிப்பு ' என்றாலே அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 


சிறிய வயதில் அவர்களுக்கு தன்னார்வம் அதிகமாக இருக்கின்றது.  நாம் செய்யும்  செயல்களை அவர்களுக்கு புதிதாக இருப்பதால் மிக நுண்ணிப்பாக குழந்தைகள் கவனிக்கிறார்கள் . அதே போல் தன்னம்பிக்கையோடு விடா முயற்சியாக அந்த வேலையை செய்கிறார்கள். அவர்களின் மனதில் வேறு எந்தவிதமான எண்ணங்களும் இருப்பதில்லை. வெற்று மனம். அந்த நேரத்தில் அவர்களுக்கு எது இருக்கின்றதோ அல்லது கிடைக்கின்றதோ  அதைகொண்டு  தன்னிச்சையாக , சுதந்திரமாக , எவ்வித கட்டுப்பாடு இன்றி , அவசரமில்லாமல் செயலைச் செய்கின்றது. சில நேரத்தில் தவறுகள் செய்து உதையும் வாங்குகின்றது. அதற்கும் சலிக்காமல் மீண்டும் அதே வேலையை தவறு இல்லாமல் செய்ய முயற்சி செய்கின்றது. 


இவற்றையெல்லாம் பார்த்து நாம் சும்மா இருக்கின்றோமா? குழந்தைகள் புதிதாக ஒன்று செய்யும்போது அதை ஊக்குவிக்கிறோம். மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லி உற்சாகப் படுத்துகிறோம். இடை இடையே முத்தம் கொடுத்து பாராட்டுகின்றோம். அதற்கு வேண்டியதை வாங்கித் தந்து மகிழ்ச்சி கொடுக்கிறோம்.


ஆனால் உயர் வகுப்பிற்கு செல்லும்போது அவன் எப்படிப் படிக்கிறான்? எப்போது படிக்கின்றான்? என்று கவனிக்கிறோமா? சதா நேரமும் அவனை படி படி என்று வாட்டுகிறோம். பெற்றோர்களாகிய நாம்  மட்டுமா? ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீடியாக்கள், போதாத குறைக்கு டியூஷன் ஆசிரியர்கள் இப்படி பலமுனை தாக்குதல் நடைபெறும்போது அவர்களுடைய விருப்பமான எண்ணங்கள் மனதிலே புதைந்து போகிறது. அவர்கள் நினைக்கும் ஒரு சிறு மகிழ்ச்சியான காரியங்கள் செய்வதற்கு கூட சுதந்திரமில்லாமல் 'படிப்பு ' என்கிற கயிற்றால் கட்டி உட்கார வைத்துவிடுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களின் கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் அவர்களின் மனம் விளையாட்டிலும் அல்லது இதர விருப்பமான எண்ணத்திலும் லயித்திருக்கும். அதனால் இரண்டு காரியங்களும் நிறைவேறாமல் காலம் மட்டும் விரயமாவதே உண்மை நிலை . பலநேரங்களில் அவர்களுக்கு யார் சொல்வதை கேட்பது? யார் சொல்வதை செய்வது? என்கிற குழப்பமே அதிகம் இருக்கின்றது. அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உங்களுக்கு கோபம் வரவழைத்தாலும், அந்த கோபம் அவர்களிடத்தில் தான் பாயும். 

அவர்களை நீங்கள் நினைப்பது போல் நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்காமல் அவர்களின் விருப்பப்படி நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும். அதோடு இல்லாமல் சிறிய வயதில் யோகா, விளையாட்டு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வீட்டில் 'தியானம்' மற்றும் மூச்சுப் பயிற்சியை தினமும் ஐந்து அல்லது பத்து நிமிடமாவது கட்டாயமாக செய்ய வைக்க வேண்டும். அதுவும் விளையாட்டாக!. அதற்காக ஒரு பத்து நிமிடம் குழந்தைக்காக அவர்களுடன் சேர்ந்து நீங்களும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீங்கள் ஒரு மாதம் செய்தாலே போதும். அதை அப்படியே அவர்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவார்கள். அதோடு அவர்களை வார்த்தைகளால் பாராட்டுங்கள், உற்சாகப் படுத்துங்கள், அவர்களின் போக்கில் சென்று உங்கள் பக்கம் கொண்டுவாருங்கள். 


இந்த பத்து நிமிடம் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் , மன புத்துணர்ச்சியையும் தருகின்றது. அதோடு பொறுமை, மன வலிமை, ஒருமுக சிந்தனை, நிலையான எண்ணங்கள் , தன்னம்பிக்கை வருகின்றது. இதன் மூலம் அவர்கள் படிப்பு மட்டுமல்ல நினைத்த காரியத்தில் ஆழ்ந்து ஈடுபடும் ஆற்றல் வளருகின்றது. இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும். அதை சிறு வயதிலே சொல்லித்தாருங்கள். நிச்சயம் அவன் தன் படிப்பில் மட்டுமல்ல ,  வாழ்கையில் எல்லாவற்றிலும் பிரகாசிப்பார்கள்.


உங்கள் குழந்தைகள் எண்ணம் நிறைவேற 


பத்து நிமிடம் போதும்.    

      

1 comment: