Thursday, 8 November 2012

என்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்? WHO IS FOLLOWING ME?

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 
என்னைப் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர் யார்?
WHO IS FOLLOWING ME?


என்னைப்பற்றிப் பற்றி சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் விழிப்புடன் செயல்படுபவன். இப்படியிருந்தும் எண்ணப் பின் தொடர்ந்தது ஒரு உருவம். எதைக்கண்டும் பயப்படாதவன் நான். அந்த உருவத்தை அலைக்களிப்பதற்க்கு அங்கு இங்கு சென்று போக்கு காட்டினேன். அந்த உருவம் அசரவில்லை. கடைசியாக நானே பணிந்தேன்.


"நீ யார்? ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறாய்?"


"நானா, நான் தான் கனவு அல்லது கற்பனை என்று சொல்வார்கள்!!"

"கனவா? கற்பனையா? சற்று புரியும்படி சொல்லேன்.! நீ எப்போது யாரிடம் வருவாய்?"


"நான் சோம்பேறிகளிடத்தில் தூங்கும் போது கனவாகவும் , முன்னேறத்துடிக்கும் சுறுசுறுப்பானவர்களிடத்தில் விழித்துக் கொண்டிருகும்போது கற்பனையாகவும்  வருவேன். நீ விழித்துக் கொண்டிருக்கிறாய். ஏதோ என்னைப் பற்றி கற்பனை செய்கின்றாய் . அதனால் உனக்கு உதவி செய்ய வந்துள்ளேன்."


"நான் எனது இலட்சியத்தில் வெற்றி பெற விரும்புகிறேன். அதை அடைவதற்கு வழி சொல்லவேண்டும்."

" அப்படியா? சொல்கிறேன், கேள்.  "

"இந்த கற்பனையை உனது ஆழ்மனதில் ஆணித்தரமாக பதிந்து விடு. அதாவது ஆழமான கடலில் தான் மதிப்புமிக்க அழகிய நன்முத்துகள் விளையும். எப்படியென்றால் முத்துச் சிற்பி, அது  நல்ல முத்துக்கள் கொடுப்பதற்கு ஒருதுளி தூய நீர் இருந்தாலே போதும். அதுவே முத்துக்களாக மாற்றிவிடும்.  உனது மனமும் ஒரு ஆழமான கடல். உனது இந்த கற்பனை என்கிற சிற்பி தான் உனது வெற்றிக்கு உதவும் ."

"அப்படியா ! கொஞ்சம் இரு. எனது இலட்சியத்தை என்மனதில் ஆழமாக பதித்துவிட்டேன். பிறகு?"

" பிறகென்ன, உன் கண்களுக்கு உனது லட்சியத்தின் வெற்றிக்கொடி பறப்பது தெரிகின்றதா!"

"அதோ, அதோ, நன்றாக் பறப்பது தெரிகின்றது."

"அப்படியென்றால் இது தான் உனது வெற்றிப்பாதை, தொடரு உனது வெற்றிப் பயணத்தை!"

"இப்போது எனது மனம் வெற்றி இலக்கை அடைந்துவிட்டதாக உணருகின்றது. அதனால் மனம் மகிழ்ச்சி அடைகின்றது."

" இதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை! அது தான் ஒவ்வொரு வெற்றியாளனுக்கு முதலில் தேவையான ஓன்று!"


" அது மட்டும் போதாது. வெற்றி அடைவதற்கான அறிவும் செயல் திறமையும் வேண்டும். அதை நீயாகவும் தேடித் பெறலாம். அல்லது ஏற்கனவே அதை அடைந்தவர்களிடத்தில் கேட்டோ அல்லது அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தோ அல்லது தேவைபட்டால் அதற்கான பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். அதற்க்கு சற்று சிரமப்படவேண்டும். வெறியும் இருக்கவேண்டும். (கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது) அதைப் பெற காலம், நேரம் பார்க்காது முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்."

" சரி, அதைப் பெறுவதற்கு என்னை நானே தயார் படுத்திக்கொண்டேன். பிறகு?"

"அதை கடின உழைப்பின் மூலம் நடைமுறைப் படுத்த வேண்டும்"

"கடின உழைப்பு என்னிடம் நிறையவே இருக்கின்றது. நடைமுறைப் படுத்துகிறேன். வெற்றி பெறுகிறேன் !"

" இங்கே தான் நீ அவ்சரப்படுகிறாய். அதனால் தவறும் செய்கிறாய்! ஒரே தடவையில் உனக்கு வெற்றி கிடைக்குமென்று எப்போதும் நினைத்துவிடாதே! உனது செயல் ஒருவேளை தோல்வி அடைவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் உனது மனம் துவண்டுவிடக் கூடாது. எண்ணத்தில் உறுதி இருக்கவேண்டும். தொடர்முயற்சி அவசியம் வேண்டும். தோல்வி உனக்கு நல்ல அனுபவத்தையும், மன வலிமையையும் கொடுக்கும். அதோடு அன்பு, பொறுமை, புதுப்புது சிந்தையும் வரும்  "

"தோல்வியை தவிர்க்க ஏதேனும் வழியுண்டா?"


"இருக்கின்றது! முதலில் வெற்றிக்கு பல வழிகளில் திட்டங்கள் போடவேண்டும். அதில் நடைமுறை சிக்கலில்லாத , நேர்மையான, குறைந்தகாலத்தில் முடிக்கக்கூடிய திட்டத்தை தேர்வு செய்யவேண்டும். அதை செயல் படுத்தும் தகுந்த நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்."  


" சரி, அதன்படி செய்கிறேன். இப்போது வெற்றி கிடைக்கும் தானே? "

"தொடர் அல்லது விடாமுயற்சி தான் உனது வெற்றியை உறுதிசெய்யும்."

"இதோ இப்போதே புறப்பட்டுவிட்டேன். மீண்டும் உங்களை எப்போது  சந்திப்பது?"

" நான் கற்பனை முதல் வெற்றி வரை கடக்க உதவுபவன். உனது இந்த வெற்றி அடைந்துவிட்ட பிறகு அடுத்த வெற்றிக்கு உதவி செய்யவருகிறேன். உனது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்."

"நன்றி "


இது போல் வெற்றி உங்கள் வாழ்வில் தொடரட்டும்....

No comments:

Post a comment