Pages

Friday, 10 May 2013

சூழ்ச்சிகாரனை என்றும் நம்பாதே - DON'T BELIEVE CUNNING FELLOW


சூழ்ச்சிகாரனை என்றும் நம்பாதே - 
DON'T BELIEVE CUNNING FELLOW 

மதுரை கங்காதரன் 
நாட்டு நடப்புகள் 


என்னதான் உன்னிடத்தில் செல்வம், அறிவு, வீரம் இருந்தாலும் அவைகளை வைத்துக்கொண்டு யாரையும், எப்போதும் வெற்றி கொள்ளமுடியாது. அவைகளை 'சூழ்ச்சி' வென்று விடும்.

சூழ்ச்சி என்பது உனது 'நம்பிக்கை' என்னும் பலவீனம்  கொண்டு உன்னை மறைந்து நின்று அமைதியாக தாக்குவது.

'ஆசை' காட்டி மோசம் செய்வது.

'பாச ' வலை விரிப்பில் அகப்பட்டுகொள்வது . 

'அன்பு ' என்னும் தூண்டிலில் மாட்டிக்கொள்வது. 

'இனிக்க' பேசி ஏமாற்றுவது.

'தவறான' பாதை காட்டி திண்டாடச் செய்வது. 

'தீய பழக்கத்திற்கு' அடிமையாக்குவது.

'பொய்வாக்கு' கொடுத்து துரோகம் இழைப்பது.

'கடமை' களைத் தவறச் செய்வது.

'நம்ப ' வைத்து கழுத்தறுப்பது 

'கூட ' இருந்து குழி பறிப்பது 


யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் சூழ்ச்சிக்காரனை  நம்பவே கூடாது. ஜாக்கிரதை!

சூழ்ச்சிக்காரனை அடையாளம் கண்டுகொள். அவனிலிருந்து விலகி இருந்தால் நீ மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்வாய். 


நன்றி 

வணக்கம்..

No comments:

Post a Comment