ஏன் இந்த வழியாய் செல்கிறாய்?
ஏன் இந்த வழியாய் செல்கிறாய்?
                 தெரியாது!
           
WHERE  YOU ARE GOING ? I DON'T KNOW?
               புதுக்கவிதை 
        மதுரை கங்காதரன் 
ஏன் இந்த வழியாய் செல்கிறாய்?
தெரியாது!
எல்லோரும் செல்கிறார்கள் , நானும் செல்கிறேன்.
ஏன் அந்த தலைவரின் வழி நடக்கிறாய் ?
தெரியாது!
எல்லோரும் செல்கிறார்கள் , நானும் செல்கிறேன்.
ஏன் இந்த வேலையைச் செய்கிறாய் ?
தெரியாது !
எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன்!
ஏன் அந்த புத்தகத்தை படிக்கிறாய்?
தெரியாது!
எல்லோரும் படிக்கிறார்கள் , நானும் படிக்கிறேன்.
ஏன் அந்த தொடரைப் பார்க்கிறாய் ?
தெரியாது!
எல்லோரும் பார்கிறார்கள் , நானும் பார்கிறேன்.
      
ஏன் அந்த நடிகரை பின்னே செல்கிறாய் ?
தெரியாது!
எல்லோரும் செல்கிறார்கள், நானும் செல்கிறேன்.
ஏன் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டாய்?
தெரியாது!
எல்லோரும் போடச் சொன்னார்கள் , நானும் போட்டேன்.
ஏன் அந்த சாமியாரை நம்புகிறாய் ?
தெரியாது!
எல்லோரும் நம்புகிறார்கள், நானும் நம்புகிறேன்.
ஏன் அந்த படிப்பை படிக்கிறாய் ?
தெரியாது !
எல்லோரும் படிக்கிறார்கள் , நானும் படிக்கிறேன்.
    
ஏன் அந்த தேர்வை எழுதுகிறாய்?
தெரியாது !
எல்லோரும் எழுதுகிறார்கள் , நானும் எழுதுகிறேன்.
ஏன் அந்த விளையாட்டை விளையாடுகிறாய் ?
தெரியாது!
எல்லோரும் விளையாடுகிறார்கள், நானும் விளையாடுகிறேன்.
ஏன் அந்த விளம்பரத்தில் வருவதை வாங்குகிறாய் ?
தெரியாது 
எல்லோரும் வாங்குகிறார்கள், நானும் வாங்குகிறேன்.
இனி எதுவும் தெரியாது என்று சொல்லாதே!
எல்லாமே இல்லாவிடினும் கொஞ்சமாவது தெரிந்து கொள்.
எல்லோரும் போற திசையாயினும் யோசித்துச் செல்.
உனக்குத் தெரியாதது மற்றவர்களுக்கு சாதகம் 
ஏமாற்றி உன்னிடம் பணம் பறிக்கலாம் 
தவறான திசையைக் காட்டி துயரத்தில் ஆழ்த்தலாம்.
நல்லதை பார்ப்பது கூட நன்றாய் யோசித்துப் பாரு 
நல்லதை கேட்பதைக் கூட நன்றாய் யோசித்துக் கேளு 
நல்லதை பேசுவதை கூட நன்றாய் யோசித்துப் பேசு.
     
எதையும் யோசி ஒன்று செய்வதற்கு முன் 
நன்மை தருவனவாக இருப்பின் யோசிக்காமல் செய் 
இல்லையெனில் யோசித்து முடிவுக்கு வா.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
 
No comments:
Post a Comment