Pages

Sunday 25 January 2015

பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்


பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால்
தமிழ்சொல்லாகும் ! ஏன் சொன்னார் தொல்காப்பியர்!

மதுரை கங்காதரன் 

'தமிழகம்' வந்தாரை மட்டும் வாழவைக்கவில்லை
தமிழன் விருந்தோம்பலை மட்டும் காக்கவில்லை
தமிழ் மொழி தனித்தமிழாய் மட்டும் இருக்கவில்லை
பிறசொற்கிளவியையும் தமிழ்சொல்லாய் இனிக்கச் செய்கிறது

பாலோடு சேர்ந்த நீரும் பாலாய் மாறும்
பூவோடு சேர்ந்த நாரும் பூவின் மணம் பெறும்
கருவாடு வைத்த கூடையிலும் கருவாடு மணம் வரும்
தமிழ் எழுத்தோடு புணர்ந்த பிறசொற்கிளவியும் தமிழாய் இனிக்கும்.

'கிருஷ்ணன்' நாமமானது கிருட்டிணனாய் ஒலித்தது
'முஹம்மது' இறையானவர் முகம்மதாய் ஓதப்படுகிறார்
'ஜீஸ்ஸ்' தேவனானர் ஏசுவாய் அழைக்கப்படுகிறார்
'ரோஜா' பூவானது ரோசாப்பூவாய் சூடப்படுகிறது

மாம்பழத்தில் ஒட்டு மாம்பழம் கசக்குமா?
உறவில் அந்நிய உறவு சோடையாகுமா?
மல்லிகையில் மாற்றான் தோட்ட மல்லிகை மணக்காமல் இருக்குமா?
பிறசொற்கிளவியால் தமிழ் சொல் பழுதாகிப்போகுமா?

தொல்காப்பியர் கால மாற்றத்தை அறிந்தவர் போலும்
எத்திசையிலிருந்திலும் பிறசொற்கிளவி தமிழில் நுழையும்
தமிழ் எழுத்தோடு சேர்ந்து தமிழாய் ஒலித்தல் வேண்டும்
அன்றே சொன்னது போல் இனறு என்றும் தனித்தமிழை வளர்ப்போம்.

தனித்தமிழை பேசுவதிலும் அழகு!
எழுதுவதிலும் அழகு!
வளர்ப்பதிலும் அழகே!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
 



No comments:

Post a Comment