Pages

Tuesday, 3 March 2015

LITERATURE TASTE - 'வேள்வித் தீ' இலக்கிய (பரிசீலனை) ரசனை உரை விழா

இலக்கிய (பரிசீலனை) ரசனை

LITERATURE TASTE 

அதிதி மற்றும் அவ்ராம்-அமி ஆகிய தொண்டு நிறுவனங்கள் நடத்திய இலக்கிய (பரிசீலனை) ரசனை உரை விழா சென்ற 1/3/2015 ஞாயிற்றுக் கிழமை நடந்தது. நிகழ்ச்சியின் சில துளிகள் இதோ : 

 தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேர்களில் எட்டு பேர்கள் அன்று 'வேள்வித் தீ' நாவலைப் பற்றி மிக அழகாக ரசனை உரை ஆற்றினார்கள். அனைவரும் இத்தகைய முயற்சி யாருமே செய்யாத ஒன்று என்று பாராட்டினார்கள்.

மேலும் சிலர் அந்நாவலைப் பற்றி சிறப்பு உரை ஆற்றினார்கள்.

வேள்வித் தீ (நாவல்)
என் ரசனை உரை
மதுரை கங்காதரன்

இந்த நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்ற அமரர் திரு எம். வி. வெங்கட்ராமன் அவர்களால்  1975      ஆம் ஆண்டில் படைக்கப்பட்டது. இந்த தலைப்பு கொடுக்கப்பட்டதற்கு நான் கூறும் காரணம் - வேள்வித் தீ ஆனது ஒரு நல்ல காரியத்திற்காக வளர்க்கப்படுவது. ஆரம்பம் முதலே கதாநாயகன் கண்ணன் எவ்வளவு தான் பட்டு நெசவு நுணுக்கம் தெரிந்தும் மிகவும் கஷ்டப்படுகிறான். சொந்த வீடு கட்டிய பிறகு தான் கல்யாணம் என்கிற லட்சியக் கனவை தள்ளி வைத்து கௌசல்யாவை திருமணம் செய்து 'ராஜி' என்கிற அழகு மகளை பெறுகிறான். சௌராஷ்ட்ரா வகுப்பைச் சேர்ந்த குடும்பம் ஆதலால் ஆங்காங்கே தமிழ் அர்த்தத்துடன் சௌராஷ்ட்ரா மொழியும் தந்திருப்பது ஆசிரியரின் யதார்த்த படைப்பு நன்கு புலப்படுகின்றது. அவர்களின் வாழ்க்கை ஏழ்மை ஆதலால் விடிவுகாலம் என்று ஒன்று வருமா?  

பலர் உதவியபோதும் நெசவுத் தொழிலில் கிடைக்கும் கூலியை வைத்து கண்ணனால் ஆனந்த வாழ்க்கையை அமைத்திட முடியுமா? முடிவுக்கு சற்று முன் வரை சோகமோ சோகம். அது வரை படிக்கும்போது ஏதோ ஒரு சில சம்பவங்கள் எல்லோர் வாழ்வில் கடந்துவந்தவையாக இருக்கும். அதுவரை கண்ணன் பட்ட கஷ்டங்களை வேள்வித் தீ யில் பொசுக்கி விதவை ஹேமாவை கரம் பிடித்து புதுவாழ்வைத் துவங்குகிறான். கௌசல்யா, ராஜியின் கதி படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகும் அவர்களின் வாழ்வில் சந்தோஷ அலைகள் வீசியதா? சுனாமி அடித்ததா? என்பதை ஆசிரியர் வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகின்றார்.

கண்ணன், கௌசலை, ஹேமா ஆகிய பெயர்களை தேர்ந்தெடுத்ததன் ரகசியம் புராணங்களை படித்தவர்களுக்கு நன்கு தெரியவரும். நெசவுத் தொழினின் நுணுக்கம் நன்கு எழுதப்பட்டுள்ளதால் இவ்வாசிரியர் கட்டாயம் நெசவு நெய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார். மேலும் அவருக்கு அத்தொழிலை பற்றிய அறிவு நன்கு இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூறமுடியும்.

அனைவரின் மானம் காக்கும் நெசவுத் தொழிலாளியின் கஷ்டமான வாழ்க்கையும், அரை வயிறு கூலிக்கு அல்லோல் படுவதை யதார்த்தமாக வரிக்கு வரி கூறியிருக்கிறார். நாவல் முழுவதிலும் நெசவாளர்களின் அன்றாட வாழ்க்கை, கூலி உயர்வு, போராட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவைகளை கண்ணன் மூலமாக தந்திருக்கின்றார். இந்த நாவல் படைத்து நாற்பது வருடங்களாகியும் அதன் பிரதிபலிப்பு இன்றும் இருக்கின்றது. ஒரே ஒரு வித்தியாசம். அன்று கைத்தறி. இன்று அதனுடன் விசைத்தறி நெசவை சேர்த்துக் கொள்ளலாம்.

ஹேமாவின் மூலமாக 'வேள்வித் தீ' உன்டாக்கி எவ்வாறு கண்ணன் புதுவாழ்க்கையைத் துவங்குகிறான் எனபதை படிக்கும் போது மனதில் ஒருவித கணம் உன்டாகின்றது. ஒரு வாழ்க்கை அழித்து தான் வேறு ஒரு வாழ்க்கை தரவேண்டுமா? என்கிற காரணத்தை ஜீரணிப்பது சற்று கடினம் தான். இருவருக்கும் வாழ்வு கொடுத்து கதையை சந்தோஷமாக முடித்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.

இதில் இருக்கும் சிறப்பு அம்சம் யாதெனில் சௌராஷ்ட்ரா மக்களின் பூர்வீகம், குடிபெயர்ந்ததன் காரணம், நெசவுத் தொழில் பற்றிய அறிவு, விருந்தோம்பல், செய்முறை, கலாச்சாரம், சம்ரதாயம், ஈமச்சடங்கு சம்ரதாயம் ஆகியவைகளை கதையோடு பிண்ணியிருப்பது ஆசியரியரின் தன்னம்பிக்கை காட்டுகின்றது.

கடைசியாக ஆசிரியர் ஒரு 'சௌராஷ்ட்ரர்' என்றாலும் அழகியத் தமிழில் எழுதியிருப்பது அவர் தமிழ் மொழி கொண்ட காதலை காட்டுகின்றது என்றே சொல்லலாம். தமிழுக்காக அவர் தம் பொருளையெல்லாம் இழந்திருக்கிறார் எனபதை நினைக்கும் போது இதயம் இரணமாகிறது. அவர் பணியை நாம் தொடருவோமாக!
  
நிகழ்ச்சியின் தலைப்பு 
பரிசீலனை  12
--------------------------
"வேள்வித்  தீ "  நாவலை படித்து 
10 நிமிடங்களுக்கு ரசனை உரை ஆற்ற வாய்ப்பு... 
சான்றிதழ் வழங்கப்படும்  
புத்தக நகல் இலவசம்

       


  அனைவருக்கும் இந்த அன்பளிப்புகள்  வழங்கப்பட்டது 

                 


                 
தேதி : 1-3-2015

இடம் : 
சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், 
தவிட்டு சந்தை, 
மதுரை - 1

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 4.00 மணி வரை 
மதியம் : அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும் 
மேலும் விபரங்களுக்கு
கணேஷ் சந்தர்  - 9840911021
கார்த்திக் - 8807746189  


No comments:

Post a Comment