Pages

Sunday 22 March 2015

CUSTOMER AND ENVIRONMENT SAFETY - நுகர்வோரும் சுற்றுபுற பாதுகாப்பும்

நுகர்வோரும் சுற்றுபுற பாதுகாப்பும்
CUSTOMER AND ENVIRONMENT SAFETY
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

நித்தம் நித்தம் மாறி வரும் உலகமிது
பற்பல மாற்றங்களை தரும் காலமிது

நுகர்வோர் கலாச்சாரம் பெருகிடும் நேரமிது
அனைத்தும் மாசுபடும் வேதனை போக்கிது

திசை மாறிச் செல்லும் நுகர்வோர்களே!
மாசில்லாக் காற்றுக்கு வழி செய்யுங்கள்

உயிர் வாழ மழைநீரை சேகரியுங்கள்
பசுமை பூமியை மலரச் செய்யுங்கள்

பாலிதீன் பைகளுக்கு 'டாடா' காட்டுங்கள்
சணல் பைகளுக்கு 'வெல்கம்' சொல்லுங்கள்

பாலிஸ்டர் ஆடைகளுக்கு 'தடா' போடுங்கள்
பருத்தி ஆடைகளுக்கு 'சலாம்' காட்டுங்கள்

பெட்ரோல் டீஸல்களுக்கு 'விடை' கொடுங்கள்
சூரியசக்திமயமாக்கலுக்கு வழி தேடுஙகள்

செயற்கை உரத்திற்கு 'சென்ஸார்' செய்யுங்கள்
இயற்கை உரங்களுக்கு 'யெஸ்ஸார்' சொல்லுங்கள்

மக்காத குப்பைகளின் பெருக்கத்தை தடுத்திடுங்கள்
மக்கும் குப்பைகளை மறுசழற்ச்சி செய்திடுங்கள்

பஞ்ச பூதங்களை அளவோடு காத்திடுங்கள்
மண்வளங்களை செழிக்கச் செய்திடுங்கள்

'ஓசோன்' ஓட்டையினை அடைக்க பாடுபடுங்கள்
பூமிக்கு பசுமை ஆடையினை அணிவியுங்கள்

மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை பரவ விடுங்கள்
பாதுகாப்பான சுற்றுச்சூழலை தந்திடுங்கள்

நுகர்வோர்களே நாளை உலகம் வாழ்வது
இன்று வாங்கும் பொருளில் உள்ளது ஜாக்கிரதை!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



1 comment: