Pages

Sunday 17 May 2015

WHY KAMBAN TRANSLATE RAMAYANA IN TAMIL?



                                              WHY KAMBAN TRANSLATE RAMAYANA IN TAMIL?
       கவிதை மாமன்னன் கம்பன் தமிழாக்கம் செய்தது ஏன்?
(வடமொழி இராமாயணத்தை கம்பன் தமிழாக்கம் செய்தது ஏன்?)
                                          புதுக்கவிதை
                                    மதுரை கங்காதரன்

ஆதியில் ஆதி மனிதனாய் மாறியது குரங்கிலிருந்து!
அடுத்தமனிதனாக மாறியது ஆறாம் அறிவிலிருந்து!
மனிதன் தெய்வமாய் மாறுவது நல்லாட்சி செய்வதிலிருந்து
தெய்வமும் நாயகனாய் மாறியது கம்பன் காவியத்திலிருந்து!

உலகைக் காக்கும் பரம்பொருள்
மனிதபூமியில் இராமனாக அவதரித்து
அறநெறி வாழ்விற்கு முன்மாதிரியாக திகழ்ந்து
எதிரிகளை அழித்து மக்களை இரட்சிக்கச் செய்ததே!

ஏற்றம் இறக்கங்களே வாழ்க்கையின் காட்சி
கம்பனின் இராமனின் காவியமே அதற்குச் சாட்சி
காவியப் பெருமை காலம் காலமாய் தொடர்வது
இயல்பாய் மக்களின் உணர்வோடு கலந்துவிடுவதே!

கம்பனின் வடமொழி இராமாயணத் தமிழாக்கம்
வால்மிகியையும் மறக்கச் செய்த உன்னதப் படைப்பு
வடக்குத் தெற்கு இடையில் அமைந்திட்ட உறவுப் பாலம்
இமயம் குமரியை இணைந்திட்ட பக்திப் பாலம்

வடமொழி காவியத்தை தமிழ்மொழிக்கு மாற்ற
ஆசையும ஞானமும் மட்டும் போதுமா?
தமிழுக்கு காவியத்தை ஏற்க தகுதியும் தரமும் உள்ளதே!
கம்பனின் படைப்பு தனித்தமிழாய் இருப்பதே சிறப்பு.

கம்பன் படைத்திட்ட இராம காதை வெறும் காவியமல்ல
நாட்டில் சமூகம் கலாச்சாரமும் மேம்பட
மனிதனிடையே பண்பும் ஆன்மீகமும் செழித்திட
உறவுகளில் அன்புக்கும் பாசத்திற்கும் உதாரணமாய் விளங்கிட

கடமையில் அறத்தையும் துறவறத்தையும் சமமாய் மதித்திட
நேர்மையில் நட்புக்கும் எதிரிக்கும் இலக்கணமாய் இருந்திட
பிரிதலில் காதலுக்கும் கற்பிற்கும் பாடம் புகட்டிட
போரில் வீரத்தையும் மன்னிக்கும் குணமும் காட்ட

மொழியையும் தாண்டி ஒற்றுமையை வளர்திடவே
கம்பனின் காவியம் காலத்தை வென்று நிற்கின்றதுவே!
இராமனால் இராமயணத்திற்குப் பெருமை
கம்பனின் தமிழாக்கத்தால் தமிழ் மொழிக்குப் பெருமை.
****************************************************************************************** 

       

No comments:

Post a Comment