எழுத்தெல்லாம்
தூயதமிழ் எழுத்தாகுமா?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
தமிழ்மொழியின் தலையெழுத்து சரியில்லையோ
எழுதும் தமிழில் வடமொழி எழுத்துக்கள் கலப்படம்
பேசும் தமிழில் அந்நியமொழியின் ஆதிக்கம்
தமிழ்மொழியோ தனித்தன்மை இழந்துவருகிறதே.
பணத்திற்கு ஆசைபட்டு
தன்மானத்தை இழக்கலாமா?
பறப்பதற்கு ஆசைபட்டு இருப்பதை இழக்கலாமா?
பதவிக்கு
ஆசைபட்டு செல்வங்களை இழக்கலாமா?
அந்நிய
மொழிக்கு ஆசைபட்டு
தூயதமிழை மறக்கலாமா?
முப்பாட்டனுக்கு
முன் வந்த மூத்த மொழி தமிழை
முச்சந்தியில்
நிறுத்த சம்மதிக்கலாமா?
தமிழனுக்கழகு
தூயதமிழில் பேசுவதல்லவா?
தமிழுக்கழகு
தூயதமிழ் எழுத்துகளல்லவா?
தமிழ்மொழி எழுத்துகளில் எந்த சிறப்புகளில்லை ?
தூயதமிழ் எழுத்துகள் இயற்கையின் ஒலிகளே
தமிழ் எழுத்துகளை உச்சரிக்க இலக்கணமுண்டு
பலமொழிகளின் வேர்சொற்கள் தமிழிருந்து பிறந்ததே!
பூக்களில் பூசைக்கேற்ற
பூக்கள் இறைவனடி சேரும்
சொற்களில் அமுதான சொற்கள் இனிமை தரும்
தன்னலமற்ற செயல்கள் நன்மைகள் தரும்
தூயதமிழ் எழுத்தகள் தமிழ்மொழியைக் காக்கும்.
தூயதமிழ் எழுத்துகளே தனித்தமிழை வளர்க்கும்!
தமிழ்மொழியைக் காக்கும்!!
####################################################################################
No comments:
Post a Comment