மின்படங்கள் --- உள்ளே
எனது துளிப்பா / அய்க்கூ கவிதைகள் இதோ ..
படைப்பு: மதுரை கங்காதரன்
திரையில்
தெரியுது
மாயாஜாலம்
காட்டுது
கணினி.
நதி
இணைப்பு நடக்கவில்லை
வரி
இணைப்பு நடந்தது
ஜி.எஸ்.டி.
ஊதா
நிறப்பலகை
இயற்கை
ஓவியங்கள்
வின்மேகங்கள்.
கண்கள்
பேசும்
கவிதைகள்
படைக்கும்
காதல்.
நம்
கரங்கள்
நமக்கு
உதவி
செல்பி.
இல்லையென்பார்
சிலர்
உண்டென்பார்
பலர்
இறைவன்.
போவதெல்லாம்
வரும்
வருவதெல்லாம்
போகும்
அலைகள்.
தேர்வுகள்
இல்லை
தோற்றவர்கள்
பலர்
வாழ்க்கை.
ஏறும்
விலைகள்
தினமும்
வாசிக்கிறோம்
விலைவாசி.
விரட்டினோம்
வெள்ளையர்களை
விடவில்லை
மொழியை
ஆங்கிலம்.
இன்று
பிரிவார்கள்
நாளை
இணைவார்கள்
அரசியல்.
குட்டக்
குட்டக் குனிவார்கள்
அடிக்க
அடிக்கத் தாங்குவார்கள்
ஏழைகள்.
பேசாது
இருக்கும்
பேச
வைக்கும்
புத்தகம்.
காலையில்
பிறக்கும்
இரவில்
மறையும்
நாட்கள்
பணத்திற்கு
வெற்றி
உண்மைக்குத்
தோல்வி
லஞ்சம்.
இல்லாத
வரவு
உறுதியான
உறவு
நட்பு.
புதிய
முகம்
புதிய
உறவு
திருமணம்.
இருப்பதோ
சிறிய அளவு
கொடுப்பதோ
பெரிய பலன்
விதைகள்.
ஏழைகளைச்
சாய்ப்பார்கள்
பணக்காரர்களை
வளைப்பார்கள்
அரசியல்வாதிகள்.
விழி
இல்லாதது
வழி
காட்டுது
திசைகாட்டிகள்.
யாவரையும்
ஆளலாம்
யாவரையும்
ஆட்கொள்ளலாம்.
அன்பு.
புதிய
புதிய வரவுகள்
ஏமாற்றுவதற்கான
வழிகள்
மாற்றங்கள்.